பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, May 22, 2009

வணிக வங்கி

வணிக வங்கி (Commercial bank) என்பது வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புக்களை மீளப் பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம் ஆகும்.இதுவும் ஒருவகை வங்கியியல் முறைமையாகும்.இவற்றின் நடவடிக்கைகள் நாடுகளின் சட்டத்தினாலும் மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படும். வணிக வங்கியால் சகலவிதமான வைப்புக்களையும் பேணமுடியும்,இவற்றில் முக்கியமானது நடைமுறை கணக்குகளை பேணல் மற்றும் கடனாக்கம் செய்தல் (accepting deposits and making loans, as well as other fee based services) என்பனவாகும்

பொருளடக்கம்

1 வணிக வங்கிகளின் சேவைகள்

2 வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்

3 இலங்கையின் சில வணிக வங்கிகள்

4 இவற்றையும் பார்க்க

வணிக வங்கிகளின் சேவைகள்


இவற்றின் பிரதான தொழிற்பாடு


பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைப்(Deposit) பெறல் அவர்கள் கேட்கும் பொழுது அவற்றினைமீளளித்தல்


மேலதிக பற்றுகள்(Over Draft),கடன் வழங்கள்.( loans)


பிணைகள்,முறிகள் (Bonds) போன்றவற்றில் முதலீடல்.


காசோலை(Cheque) வழங்கல்.


ஏனைய தொழிற்பாடுகளாக


நிலையான வைப்புகளை பேணல்.


வெளிநாட்டு நாணய கணக்குகளைப் பேணல்.


வங்கி பாதுகாப்பு பெட்டக வசதிகளை ஏற்ப்படுத்தல்.


நகை அடகுபிடித்தல்.


நாணயமாற்றம் செய்தல்.


சர்வதேச கொடுக்கல் வாங்கல்களப் பேணல்.


ATM அட்டை,கடனட்டை(Credit card) வழங்கள்.
போன்றனவாகும்.

வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்


நடைமுறைக்கணக்கு (Current Deposits)

சேமிப்பு கணக்கு (Savings Deposits)

நிலையான வைப்பு(Fixed Deposits)

அழைப்பு வைப்பு (Call Deposits)


இலங்கையின் சில வணிக வங்கிகள்

  1. இலங்கை வங்கி
  2. மக்கள் வங்கி
  3. கொமர்ஷியல் வங்கி
  4. ஹட்டன் நசனல் வங்கி
  5. சம்பத் வங்கி
  6. செலான் வங்கி
  7. பான் ஏசியா வங்கி
  8. யூனியன் வங்கி
  9. நேசன் டிரஸ்ட் வங்கி
வங்கி

வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.

வங்கியால் வழங்கப்படும் சேவைகள்

வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல் கடன்களை வழங்குதல் (loans) காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்) கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல். பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல் நாணய மாற்று செய்து கொடுத்தல் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல். வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன கருமபீடம் அல்லது அலுவலகம் வழியாக நேரடியாக ATM

மின்னஞ்சல்
தொலைபேசி

இணையம்

வங்கி அமைப்புக்கள்


வணிக வங்கி (Commercial bank) - காசோலை வரைவதன் மூலம் தனது வாடிக்கையாளருக்கு தனது கணக்கிலிருந்து பணத்தினை மீளப்பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வங்கிகள் வர்த்தகவங்கியாகும்.இத்தகைய நிதிச்சேவையை ஏனைய வங்கி அமைப்புகள் மேற்கொள்ளவதில்லை

  1. சேமிப்பு வங்கி (Savings bank)
  2. வியாபார வங்கி (Merchant banks)
  3. கூட்டுறவு வங்கி (Cooperative Banks)
  4. அபிவிருத்தி வங்கி
  5. மூதலீட்டு வங்கி (Investment banks)
  6. மத்திய வங்கி (Central Bank) -

பொருளாதார உறுதி,பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஒரு நாட்டின் பணநிரம்பல்,வங்கி முறைமை போன்றவற்றை நெறிப்படுத்தும் கேந்திர நிலையமாகும். இஸ்லாமிய வங்கி (Islamic banks) - இஸ்லாமிய சட்டப்படி இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் வட்டி வழங்கப்படமாட்டாது. இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது


தனிநபர் நிதி

அடமானக் கடன்
கடன் அட்டை
காப்புறுதி
சொத்து வரி
வருமான வரி

அடமானக் கடன்

அடமானக் கடன் என்பது நிலம், வீடு, தொழில், அல்லது இதர அசையாப் பொருட்களை ஒரு வங்கி போன்ற ஒரு நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்து பெறப்படும் கடன் ஆகும். பொதுவாக இப்படிப் பொறப்படும் நிதி தவணை முறையில் வட்டியுடன் செலுத்தப்படும். செலுத்த முடியாமல் போனால் அடமானம் வைக்கப்பட்ட பொருள் அந்த நிதி நிறுவனத்துக்க் சொந்தமாகும்.

கடன் அட்டை

கடன் அட்டை என்பது பணம் செலுத்தும் முறை. ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்த அவருக்கு வங்கியோ வேறு ஒரு வணிக நிறுவனமோ கடன் வழங்கும். கடன் அட்டையில் நிதி விபரமும் இதர தகவல்களும் சேமிக்கப்படும். ஒவ்வொருமுறை பயன்படுத்தப்படும் பொழுது இத்தகவல்களை கணக்குக்கு ஏற்ப இன்றைப்படுத்தப்படும்.
பொதுவாக இப்படி வழங்கப்படும் கடனுக்கு அதிக வட்டி அறவிடப்படும்.

காப்புறுதி

காப்புறுதி என்பது ஒரு இழப்பு அல்லது இடர் ஏற்படக்கூடிய சூழலில் அதில் இருந்து பாதுகாப்பதற்காக அல்லது மீழ்வதற்காக முன்னேற்பாட்டின் படி வழங்கப்படும் நிதி. எவ்வளவு பணம் பெறப்படும் என்பது எவ்வளவு காப்பீட்டு கட்டணம் கட்டப்பட்டது என்பதையும், இடர் எத்தகையது என்பதையும் பொறுத்தது ஆகும். சில தொழிற்பாடுகளுக்கு காப்புறுதி கட்டாயம் தேவைப்படும். எடுத்து காட்டாக கார் ஓட்டும் ஒருவர் காப்புறுதி வைத்திருக்க வேண்டும்.
பெரும்பான்மை காப்புறுதிகள் வணிக நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுபவை. சில காப்புறுதிகள் கூட்டுறவுகளால் நிர்வகிக்கப்படுபவை. அரசும் மருத்துவம் போன்ற சில சேவைகளுக்கு காப்புறுதி வழங்குவதில்லை

சொத்து வரி

சொத்து வரி என்பது தனிநபரின் அல்லது நிறுவனத்தின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி. பொதுவாக அந்த நபர், அல்லது நிறுவனம் வதியும் இடத்தை நிர்வகிக்கும் அரசு அல்லது அரசுகள் வரியை விதிக்கும். நிலம், நிலத்தில் உள்ள தென்னை மா பலா போன்ற மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் என பல தரப்பட்ட சொத்துக்கள் மீது வரி விதிக்கப்படுகிறது.

வருமான வரி
வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும். முற்போக்கு, சம விகிதம், Regressive ஆகியவை முக்கிய மூன்று வரி முறைமைகள் ஆகும்.

வரி

வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு. வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன. பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன.

வரி அறவிடுவதன் நோக்கங்கள்
அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:

சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், சொத்துக்களைப் பாதுகாத்தல், பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கிப் பேணுதல், பொது வேலைகள் (public works), சமூகப் பொறியியல் (social engineering), அரச செயற்பாடுகள். பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன: கல்வி முறைமைகள், உடல்நலம் பேணல் முறைமைகள், வயோதிபர்களுக்கான ஓய்வூதியம், வேலையற்றோர் கொடுப்பனவுகள், சக்தி, நீர் வழங்கல், மற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து. அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்: வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பாரிடையே பரவலாக்குதல். தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதியளித்தல், பொருளாதாரத்தின் பருவினப்பொருளியல் செயற்பாட்டு விளைவுகள்மீது செல்வாக்குச் செலுத்துதல் (இதற்கான அரசின் வழிமுறைகள் அதன் நிதிக் கொள்கை எனப்படுகின்றது), குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன்மூலம், பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.


அறிவுசார் சொத்து


தனித்த மாறுபட்ட, முற்றிலும் வெவ்வேறு பொருட்களையும், சட்டங்களையும் பிரதிபலிக்கின்ற பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரை ஆகிய மூன்று விஷயங்களையும் ஒரே குட்டையில் போட்டு "அறிவுசார் சொத்து" என்று குழப்புவது வாடிக்கையாகிவிட்டது. இது ஏதோ விபத்தில் விளைந்த விபரீதம் அல்ல. இதனால் இலாபமடையும் நிறுவனங்கள் வளர்த்துவிட்ட குழப்பம். இந்த குழப்பத்தினை தவிர்க்க இப்பதத்தை முற்றிலும் புறக்கணிப்பதே தெளிவான வழி.
"அறிவுசார் சொத்து" என்கிற இப்பதமானது 1967 ல் "உலக அறிவுசார் சொத்து நிறுவனம்" நிறுவப்பட்ட பின்னர், பின்பற்றப்படத் துவங்கி சமீபத்தில் தான் மிகவும் பிரபலமானது என்கிறார் ஸ்டான்போஃர்டு சட்டப் பள்ளியில் தற்பொழுது பேராசிரியராக இருக்கும் மார்க் லேமேய். "உலக அறிவுசார் சொத்து நிறுவனம்" முன்னர் ஐநா சபையின் அங்கமாய் இருந்தது. ஆனால் உண்மையில் பதிப்புரிமை, சுய உரிமை மற்றும் வர்த்தக முத்திரை உடையோர்களுடைய விருப்பங்களைத் தான் அது பிரதிபலித்தது.

இப்பதத்திலுள்ள பாரபட்சத்தினை கண்டறிவது மிகச் சுலபம். இது பௌதீக பொருட்களின் மீதுள்ள சொத்துரிமையைப் போல பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரை ஆகியவற்றைக் கருதச் சொல்கிறது. (அறிஞர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரைகளுக்கான சட்ட விளக்கங்களோடு இந்த ஒப்பீடானது முரண்படுகிறது.) உண்மையில் இச்சட்டங்கள் பௌதீக சொத்துரிமைச் சட்டங்களைப் போலில்லை என்றபோதும் இப்பதத்தினை அவ்வர்த்ததிலேயே பிரயயோகப்படுத்துகின்ற காரணத்தினால் சட்டமன்றத்தினர் இதனை அங்ஙனமே மாற்ற முனைகின்றனர். பதிப்புரிமை, சுயயுரிமை மற்றும் வர்த்தகமுத்திரைகளைப் கடைபிடிக்கின்ற நிறுவனங்கள் இம்மாற்றத்தினையே விரும்புகிறார்கள் என்பதால் "அறிவுசார் சொத்து" என்பதின் பாரபட்சம் நன்கு புலப்படும்.
இந்த பாரபட்சம் ஒன்றே இப்பதத்தினை முற்றிலும் புறக்கணிக்க போதுமான காரணமாகும். மேலும் இவையனைத்தையும் உள்ளடக்கிய புதிய பெயரொன்றையும் பரிந்துரைக்குமாறு மக்களில் பலர் எம்மிடம் கேட்டுள்ளதோடு, அவர்களே முன்வந்து (வேடிக்கையான) பல பரிந்துரைகளையும் செய்துள்ளனர். அவைகளுள் சில தான் திணிக்கப்பட்ட ஏதேச்சாதிகார உரிமைகள் மற்றும் அரசிடமிருந்து தோற்றுவிக்கப் பட்டு சட்டபூர்வமாக செயல்படுத்தப்பட்ட ஏதேச்சாதிகாரங்கள் முதலியன. ப்ரத்யேக உரிமையுள்ள அதிகாரங்கள் என்று கூட சிலர் கூறியதுண்டு. ஆனால் தளைகளை உரிமைகளாக மொழிவது என்பது இரட்டிப்பு வேலைதான்.
இம்மாற்றுப் பரிந்துரைகளுள் சில பொருத்தமாகக் கூடத் தோன்றலாம்.ஆனால் "அறிவுசார சொத்து" என்பதற்கு மாற்றுச் சொல்லினைத் தேடுவது தவறு. அதிகம் பரவலாக்கப்பட்டிருக்கும் இப்பதத்தின் ஆழமான பிரச்சனையை மாற்றுப் பெயர்களால் நிரப்ப இயலாது. "அறிவுசார் சொத்து" என்ற ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு கானல் நீர். அதிகம் பிரபலப்படுத்தப் பட்டிருக்கும் காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் தனித்துவம் வாய்ந்த துறையாக அது காட்சியளிக்கிறது.

அடிப்படையில் மாறுபட்ட இச்சட்டங்களை ஒன்றாய் வழங்குவதற்கு கிடைத்த அருஞ்சொல்லே "அறிவுசார் சொத்து" என்பதாகும். வழக்குரைஞர் அல்லாத ஏனையோர் இப்பதம் இச்சட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அறியும் போது இவையனைத்தும் ஒரே கொள்கையாலும் ஒத்த செயல்திட்டத்தாலும் உந்தப்பட்டதாக பாவித்துக் கொள்கிறார்கள்.
இதைத் தாண்டி இதில் சொல்வதற்கொன்றுமில்லை. தனித்தனியே தோன்றியதாகவும், பலவகைகளில் பரிணாமம் பெற்று மாறுபட்ட செயல்களை உள்ளடக்கியதாகவும் , வெவ்வேறான பொதுக் கொள்கைகளை எழுப்பியவையாகவும் இச்சட்டங்கள் அமைகின்றன.
பதிப்புரிமை சட்டமானது கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. ஒரு பணி வெளிப்படுத்தப்படும் விவரங்களை உள்ளடக்கியது. சுயயுரிமை சட்டமோ பயனுள்ள சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டி அதனை வெளிப்படுத்துபவருக்கு சில காலத்திற்கு அச்சிந்தனை மீது முழு அதிகாரம் கொடுக்க முனைகிறது. இந்த விலை சில துறைகளில் கொடுக்க வல்லது மற்ற சில துறைகளில் அவசியமற்றது.

மாறாக வர்த்தக முத்திரைச் சட்டமோ தனித்தன்மை வாய்ந்த எந்தவொரு வெளிப்பாட்டினையும் ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப் படவில்லை. மாறாக நுகர்வோருக்கு தாங்கள் எதை வாங்குகிறோம் என்பதை அறியத் துணை புரிகிறது. "அறிவுசார் சொத்து" என்கிற மாயையின் காரணமாக சட்டமன்றத்தினர் விளம்பரத்திற்கு ஊக்கதொகை வழங்கும் ஒரு திட்டமாக இதனை மாற்றி விட்டனர்.
இச்சட்டங்கள் மூன்றும் தனித்தனியே இயற்றப் பட்டதால், ஒவ்வொரு அம்சத்திலும் அவை மாறுபட்டு விளங்குகின்றன. மேலும் இவற்றின் அடிப்படை முறைகளும் நோக்கங்களுமே மாறுபட்டு நிற்கிறது. ஆக பதிப்புரிமை பற்றி தங்களுக்கு தெரிந்திருந்தால் சுயயுரிமை வேறுபட்டது என்பதை சுயமாகவே யூகித்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் தாங்கள் தவறிழைப்பது மிகவும் கடினம்.

ஏதோ ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த வகையைச் சுட்டும் பொருட்டு "அறிவுசார் சொத்து" என மக்கள் அடிக்கடி சொல்கிறார்கள். உதாரணத்திற்கு பணக்கார நாடுகள் ஏழை நாடுகளிடமிருந்து பணம் பிடுங்க வேண்டி அநியாயமான சட்டங்களை சுமத்துகிறார்கள். அவற்றுள் சில தான் அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள். சில சட்டங்கள் அப்படி இருப்பதில்லைதான். எது எப்படியோ, இந்நடைமுறைகளை விமர்சிப்போர் அப்பதம் தங்களுக்கு பரிசயமான காரணத்தினால் அதனை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளனர். அதைப் பிரயோகப் படுத்தும் காரணத்தினால் பிரச்சனையின் தன்மையை தவறாக புரிந்துக் கொள்ளச் செய்கிறார்கள். இதற்கு மாறாக "சட்டபூர்வமாக காலனியாதிக்கம்" போன்ற மெய்ப்பொருளையுணர்த்த வல்ல சரியான சொற்களை பயன்படுத்தலாம்.

சாதாரண மக்கள் மட்டும் இதனால் குழப்பத்திற்கு ஆளாகவில்லை. சட்டப் பேராசியர்களே "அறிவுசார் சொத்து" எனும் இப்பதத்தில் உள்ள மாயையால் கவரப்பட்டு சிந்தை சிதறடிக்கப் பட்டு நிற்கிறார்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களோடு முரண்படுகிற பொதுவான அறிவிப்புகளை செய்கிறார்கள். உதாரணத்திற்கு பேராசிரியரொருவர் பின்வருமாறு எழுதினார்,
''அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்பினை வடிவமைத்தோர், தற்போது உலக அறிவுசார் சொத்துரிமை கழகத்தில் பணிபுரிகின்ற தங்களின் வழித்தோன்றல்களைப் போலல்லாது, அறிவுசார் சொத்து விஷயத்தில், போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கக் கூடியதான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்கள். உரிமைகள் அவசியமானதுதான் என்பதை அவர்கள் உணர்ந்திருந்த போதிலும் காங்கிரஸின் கைகளை கட்டிப்போட்டு அதன் அதிகாரங்களை பல வழிகளிலும் கட்டுப்படுத்தியிருந்தார்கள்.''

அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 1, பகுதி 8ன் உட்பிரிவு 8னை மேற்குறிப்பிடப்பட்ட வாசகம் மேற்கோள் காட்டுகிறது. இந்த உட்பிரிவிற்கும் வர்த்தக முத்திரைச் சட்டத்திற்கும் தொடர்பே கிடையாது. "அறிவுசார் சொத்துரிமை" என்கிற பதம் இப்பேராசிரியரை மிகைப்படுத்தி கூறவைத்தது.

சொற்பமான சிந்தனைக்கும் "அறிவுசார் சொத்து" என்கிற இப்பதமானது மக்களை இட்டுச் செல்கிறது. பொதுவாக இருக்கக் கூடிய அற்பமான அம்சங்களுக்காக வேவ்வேறாக விளங்கக் கூடிய இச்சட்டங்களை ஒப்பு நோக்க வைக்கிறது. இச்சட்டங்கள் ஒவ்வொன்றும் பொது மக்களின் மீது விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகள், அதனால் ஏற்படக்கூடிய கூடிய விளைவுகள் போன்ற அடிப்படை விவரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இவை ஏதோ செயற்கையான வசதிகளை சிலருக்கு வழங்குவதாகக் கருதச் செய்கிறது. இந்த சொற்பமான சிந்தனை இப்பிரச்சனைகளின்பால் பொருளாதார அணுகுமுறையினை ஊக்குவிக்கின்றது.
பரிசோதிக்கப் படாத அனுமானங்களில் சவாரி செய்தவாறெ இங்கேதான் பொருளாதாரம் எப்பொழுதும் போல தனது வேலையைக் காட்டத் துவங்குகிறது. சுதந்திரமும் வாழ்க்கை முறையும் முக்கியமன்று மாறாக எவ்வளவு உற்பத்தி என்பதே பிரதானம் போன்ற மதிப்பீடுகளால் எழுகின்ற அனுமானங்களுக்கு வழிவிடுகின்றது. இசைமீதான பதிப்புரிமை இசைக் கலைஞர்களை ஆதரிக்கவும், மருந்துகள் மீதான சுயயுரிமை உயிர் காக்கும் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுவதாகவும், ஏட்டளவில் கூறப்படுகின்ற தவறான யூகங்களும் ஏற்படுகிறது.

இப்படி பலவகையான சட்டங்கள் எழுப்புகின்ற குறிப்பிட்ட பிரச்சனைகள் "அறிவுசார் சொத்து" என்பதன் பரந்த நோக்கில் காணாது போய்விடுகின்றன. இப் பிரச்சனைகள் அவற்றுக்குரிய சட்டங்களுக்கேயான குறிப்பிட்ட அம்சங்களால் எழுபவை. "அறிவு சார் சொத்து" என்கிற பதம், மக்கள் இவற்றை புறக்கணிக்க ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு இசையை பகிர்ந்து கொள்வது தகுமா என்பது பதிப்புரிமை சட்டத்தில் வருகின்ற பிரச்சனை. சுயயுரிமைச் சட்டத்திற்கு இதில் எந்தவொரு இடமும் இல்லை. பணம் குறைந்த நாடுகள் உயிர் காக்கும் மருந்துகளை தயார் செய்து குறைந்த விலைக்கு உயிர் காக்கும் பொருட்டு விற்பனை செய்யலாமா என்பது சுயயுரிமைச் சட்டத்தில் வருகின்றது. பதிப்புரிமைச் சட்டத்திற்கு இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை.

மிகைப்படுத்தப்பட்ட குறுகிய பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இவற்றை பார்க்கின்ற எவராலும் இவ்வித்தியாசங்களை உணர முடியாது. ஏனெனில் இவை இரண்டுமே தமக்குள் உடன்படாதவை. மேலும் இவையிரண்டும் முழுமையான பொருளாதாரப் பிரச்சனைகளும் அல்ல. இவ்விரண்டினையும் ஒரே கண்ணோட்டத்தில் தாங்கள் பார்க்க முற்பட்டால், அது இவற்றை தாங்கள் தனித்தனியே தெளிவாக பார்கக் கூடிய திறனுக்கு முட்டுக்கட்டையாய் அமையும்.

ஆக, அறிவுசார் சொத்து என்ற பொருளைப் பற்றிய கருத்துக்களும் அதை மிகைப் படுத்த மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் முட்டாள் தனமானவை. இவையனைத்தையும் ஒன்றென கருத தாங்கள் முற்பட்டால் மிதமிஞ்சிய மிகைப்படுத்தப்பட்ட சிந்தனைகளிலிருந்தே தங்களின் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும். இது நிச்சயமாக நல்லதல்ல.
சுயயுரிமை, பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை எழுப்பும் பிரச்சனைகளைப் பற்றி தெளிவாக சிந்திக்க தாங்கள் விரும்பினால் இவையனைத்தையும் ஒன்றாக கோர்க்கும் எண்ணத்தை மறந்துவிடுங்கள். இவற்றை வெவ்வேறானதாகக் கருதுங்கள். அடுத்த வழி "அறிவுசார் சொத்து" என்கிற பதம் வழங்க முற்படுகின்ற குறுகிய சொற்பமான அணுகுமுறைகளை புறக்கணியுங்கள். இவற்றை அதனதன் முழுமையானப் பொருளில் வெவ்வேறானதாகக் கருதுங்கள். அங்ஙனம் செய்தால் இவற்றைப் பற்றி தெளிவாகக் கருதும் வாய்ப்பினைப் பெறுவீர்கள்.

பதிப்புரிமை © 2004, 2006 ரிச்சர்ட் எம் ஸ்டால்மேன்