பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, September 26, 2008

இலங்கை மத்திய வங்கி ஆளுனரின் கருத்து

சர்வதேச ரீதியில் உணவு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகம். இப்படி மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ரோய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.எனினும் இவ்வருடம் இலங்கை ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்படுதை அவர் நிராகரித்துள்ளனர். கிழக்கில் முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள் ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.இவ்வருட பொருளாதார வளர்ச்சி ஏழுசத வீதமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள இலங்கை வங்கியின் ஆளுநர், எண்ணெய் விலை, உணவு விலை அதிகரிக்காத பட்சத்தில் உள்நாட்டு யுத்தத்தின் மத்தியிலும் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.யுத்தத்த༢r />?? விட எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பே பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீத அதிகரிப்பை ஏற்படுத்தும். விவசாயத்துறை, மீன்பிடித்துறை மூலமும் திருகோணமலையில் அனல் மின் நிலையத்தை ஏற்படுத்துவதன் மூலமும் இது சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச ரீதியில் எண்ணெய் விலைகள் குறைவடைந்தால் இலங்கையின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அஜித் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.வருடத்தின் நான்காவது மாதமே தற்போது நடைபெறுகின்றது. எண்ணெய் விலை குறைவடையுமென சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அது இடம்பெற்றால் பணவீக்கத்தைக் குறைக்கலாம். இல்லையேல் நிலைமை கடினமாக விளங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.உணவுப் பொருட்களின் விலைகள் தற்போதைய அளவில் தொடர்ந்தும் காணப்பட்டால் பணவீக்கம் எவ்வாறு காணப்படும் என்பது குறித்து எதுவும் கூற மறுத்துள்ள மத்திய வங்கி ஆளுநர் உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற் பட்ட விடயமாகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கி நாணய விநியோகம் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயல்கின்றது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையையும் ஓரளவு பாதித்துள்ளது.இலங்கையின் வெளிநாட்டு முதலீடு கடந்த வருடம் மிக உயர்ந்து காணப்பட்டது. யுத்தநிறுத்த உடன்படிக்கை முறிவடைந்தமை மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் குறித்து முதலீட்டாளர்கள் அதிக அக்கறை கொள்ளவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

No comments: