பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, September 26, 2008

தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மிக மோசமாக அதிகரிப்பு[11 - February 2008]

K.S.அனோஜி
தெற்கு, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மோசமாக அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்தவருடம் சராசரி பணவீக்கம் இலங்கையில் 21.6 சதவீதமாக காணப்பட்ட அதேசமயம் நவம்பரில் 26.2 சதவீதமாக படுமோசமாகஅதிகரித்திருந்தது.கடந்தவருடம் இறுதி காலாண்டில் இந்தோனேசியாவின் பணவீக்கம் 7 சதவீதமாகும். தாய்லாந்தில் 2.6 சதவீதமாகவும் மலேசியாவில் 2 சதவீதமாகவும்சிங்கப்பூரில் 2.9 சதவீதமாகவும் பிலிப்பைன்ஸில் 3 சதவீதமாகவும் இந்தியாவில் 6 சதவீதமாகவும் பங்களாதேஷில் 11.2 சதவீதமாகவும் இருந்ததைசுட்டிக்காட்டியுள்ள லிர்னே ஏசியாவின் பிரதம பொருளியலாளரும் புத்திஜீவியுமான ஹர்ஷா டி சில்வா, "நாங்கள் மக்களை துன்பத்திற்கு இட்டுச்செல்வதில் சம்பியன்களாக இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.இலங்கையின் நிதிக் கொள்கைகள் தொடர்பான தமது பிந்திய கட்டுரையிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.அதிக விலை கொடுத்து எண்ணெய் இறக்குமதி செய்வதே பணவீக்கம் அதிகரிப்புக்குக் காரணமென அரசாங்கம் கூறுகின்றது.ஆனால், எரிபொருள் விலை அதிகரிப்பு ஒரு காரணமாக இருந்தால் எண்ணெய் இறக்குமதி செய்யும் ஏனைய தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும்பணவீக்கம் அதிகரித்து இருக்க வேண்டுமே என்று கேள்வி எழுப்புகின்றர். பங்களாதேஷை தவிர்த்து ஏனைய நாடுகளில் பணவீக்கம் மிகத் தாழ்ந்தமட்டத்தில் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.பொருத்தமான கொள்கைகளை நடை முறைப்படுத்துவதால் இந்த நாடுகள் பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் ஆனால்,இலங்கையில் அந்த நிலைமை இல்லையென்றும் பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.பணவீக்கம் மோசமான அளவுக்கு அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தேவையற்றஅபரிமிதமான செலவினமும் வரவு செலவுத்திட்டத்தில் துண்டுவிழும் தொகையை ஈடுகட்ட மத்திய வங்கியால் அச்சிடப்படும் பாரிய தொகைபணமுமே காரணமென ஹர்ஷா டி சில்வா கூறுகின்றார்.2007 மே மாதத்திற்கும் செப்டெம்பர் மாதத்திற்கும் இடையில் மத்திய வங்கி 4900 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.கடந்த ஜூலை ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் நாணய இறுக்கத்தை நிறுத்தியமை பணவீக்கம் அதிகரித்ததற்கு பங்களிப்பை செலுத்தியுள்ளதென்று2007 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொடர்பான அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.அரசாங்கத்தின் நிதித்தேவைகளில் அதிகமானவை மத்திய வங்கி பணத்தை அச்சிடு வதன் மூலமே பூர்த்தி செய்யப்படுவதால் இலங்கையில் பணவீக்கம்அதிகமாக இருப்பதாக எச்.எஸ்.பி.சி.யின் உயர்மட்ட பொருளியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.அதிகளவு பணத்தை வெளியிடுவதை மத்திய வங்கி மறுத்துள்ள போதும் கடந்த அக்டோபரில் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அமைச்சர் பந்துலகுணவர்த்தன வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பணத்தை அச்சிடும் நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டதை ஏற்றுக்கொண்டார்.இதனால், மேலதிகமாக பணவீக்கம் ஏற்பட்டதென்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.பணத்தை அச்சிடுவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு தெரிவு இல்லையெனவும் 2007 டிசம்பரில் அமைச்சர் குணவர்த்தன கூறியிருந்தார்.வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணை அண்மையில் அரசாங்கம் மறுசீரமைப்புச் செய்திருந்தது. நடைமுறையிலிருக்கும் சுட்டெண் முறைகாலாவதியானதொன்று என்று அரசு தெரிவித்திருந்தது.புதிய வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணின் பிரகாரம் 2007 இல் பணவீக்கம் 20.8 சதவீதமெனவும் 21.6 சதவீதமல்ல எனவும் அரசாங்கம்தெரிவித்திருந்தது.பழைய வாழ்க்கைச்செலவு சுட்டெண் பலவழிகளில் காலத்திற்கு பொருத்தமானதாக இல்லையென்பதை ஏற்றுக்கொள்ளும் பொருளியலாளர்கள்,அதேசமயம், புதிய வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணும் யதார்த்தபூர்வமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர். செலவினத்தின் முக்கியவிடயங்கள் இந்தப் புதிய சுட்டெண்ணில் சேர்க்கப்படவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கு ஹர்ஷா டி சில்வா உதாரணமொன்றைக் கூறியுள்ளார். இலங்கையில் சராசரியாக வருமானத்தில் 2.2 சதவீதம் மதுபானம், சிகரெட்டுக்காகசெலவிடப்படுகின்றது. புதிய சுட்டெண்ணில் இது உள்ளடக்கப்படவில்லை என்று ஹர்ஷா டி சில்வா கூறுகிறார்.இத்தொகையானது கல்விக்காக குடும்பமொன்று தனது வருமானத்தில் செலவிடப்படும் தொகைக்கு ஏறக்குறைய சமமானதாகும். கல்விக்காககுடும்பமொன்று சராசரியாக வருமானத்தில் 2.3 சதவீதத்தை செலவிடுகிறது.

No comments: