பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Saturday, September 27, 2008

இலங்கையில் தளர்வான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது-'ஸ்டான்டர்ட் சார்டட்' வங்கி

K.S.அனோஜி
ஏனைய நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் தளர்ச்சியான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றபோதிலும், உள்நாட்டு பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொள்ளும்போது இலங்கையில் அதனை கடைப்பிடிக்க முடியாது என 'ஸ்டான்டர்ட் சார்டட்' வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி க்லைவ் ஹாஸ்வெல் தெரிவித்துள்ளார்.

உலகத் தரங்களை இலங்கை கவனமாக நோக்கவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், வட்டிவீதங்களை அதிகரிக்கும்போது மிகக் கவனமாக நடந்துகொள்வது அவசியம் எனவும், இந்த வருடம் இலங்கையில் வட்டிவீதம் குறைவடைவதற்கான சாத்தியங்கள் நிச்சயமாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பணவீக்கம் உச்சக்கட்டத்தில் இருக்கின்ற நிலையில், வட்டி வீதம் குறைவடைவது சாத்தியமற்றது என்றும் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி க்லைவ் ஹாஸ்வெல் தெரிவித்துள்ளார்.
சமகால உலக பொருளாதார நிலைமைகள் காரணமாக, உலகிலுள்ள பாரிய சர்வதேச வங்கிகள் கூட கடுமையான அழுத்தங்களைச் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்போது பணவீக்கமும், வட்டி வீதமும் அதிகரிப்பதானது தவிர்க்கமுடியாதது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: