பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Saturday, October 4, 2008

உலக உணவு நெருக்கடிக்கான செயல் திட்டத்துக்கு உலகத் தலைவர்கள் சம்மதம்

[K.S.அனோஜி]
உலக உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற் கான செயல் திட்டத்தை உருவாக்குவதில் உலகத் தலைவர்கள் நேற்று ரோம் நகரில் ஈடுபட்டிருந்தனர்.
உலக மக்கள் உணவு விலையேற்றம் மற்றும் உணவுப் பொருட்கனின் பற்றாக் குறையால் அல்லலுற்நிருக்கும் வேளையில் இதற்குத் தீர்வு காண்பதற்காக இத்தாலி யின் ரோம் நகரில் 3 நாள் மாநாடு இடம் பெற்றது.
ஐ.நா. கூட்டிய இந்த மாநாடு செவ்வா யன்று ஆரம்பமாகி நேற்று முடிவுற்றது.
இச்செய்தி எழுதப்படும் வரையில் மாநா ட்டின் இறுதித் தீர்மானங்கள் தொடர்பான விவரங்கள் எமக்கு கிடைக்கவில்லை.
எனினும், விலை அதிகரிப்பினால் பாதி க்கப்பட்ட உலக மக்களுக்கு உதவும் வகை யில், தம் வசமுள்ள அனைத்து வழிமுறை களையும் கையாள்வதற்கு உலகத் தலைவ ர்கள் உறுதி பூண்டிருப்பதாக மாநாட்டின் நகல் தீர்மானத்தில் குநிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரதியொன்று ஏ.எப்.பி செய்திச் சேவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும், தாவர எரிபொருள் தொடர் பான சர்ச்சை குநித்து நகல் வரைபில் பூசி மெழுகப்பட்டிருப்பதாக ஏ.எப்.பி தெரிவிக் கிறது.
தாவர எரிபொருள் தயாரிப்புக்கு பல நாடு கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோதும். அமெரிக்கா அதனை ஊக்குவிக்கிறது.
தாவர எரிபொருள் தயாரிப்புக்காக பயன் படுத்தப்படும் நிலத்தில் மக்களது உணவுத் தேவைக்கான பயிர்ச்செய்கைகளை மேற் கொள்ள முடியுமென தாவர எரிபொருள் தயாரிப்புக்கு எதிரான நாடுகள் கூறுகின் றன. உலக உணவு நெருக்கடியைத் தீர்ப்ப தற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் புதி தாக ஒதுக்கப்படுமென ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் வருடாந்தம் இதற்காக 20 பில் லியன் அமெரிக்க டொலர் தேவை என் கிறார் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன்.
உலகில் கடந்த 3 வருட காலத்தில் உண வுப் பொருட்கனின் விலைகள் 3 மடங்காக அதிகரித்துள்ளன. இந்த விலை உயர் வினை அடுத்து எகிப்து, ஹெய்ட்டி மற் றும் பல ஆபிரிக்க நாடுகள், பிரேUல், வியட்நாம், இந்தியா போன்ற நாடுகனில் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, உலக உணவு நெருக்கடித் தீர்வு குநித்த செயற்திட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும் ஜீ-8 மாநாட்டில் சமர்ப்பிக்கப்படுமென பிரிட்டிஷ் அதிகாரி யான ஜோன் ஹோம்ஸ் கூநினார்.
உணவு விலை உயர்வுக்கு வழி வகுக்கும் வர்த்தகத் தடைகள் விலக்கிக் கொள்ள ப்பட வேண்டுமென உலக வங்கித் தலைவர் ரொபர்ட் ஸோலிக் தெரிவித்தார்.
“உணவு ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு களை `க்குவதற்கு நாம் சர்வதேச [தியாக அழைப்பு விடுக்க வேண்டும்” என்றார் அவர்.
“இந்தக் கட்டுப்பாடுகள் பதுக்கல் வியாபாரத்துக்கு வழி வகுத்ததுடன் விலைகளை அதிகரித்து வநிய மக்களுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன” எனவும் அவர் குநிப்பிட்டார்.
இதேவேளை, “விலை அதிகரிப்பு என்ற தற்காலிக பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு மட்டும் முயலக்கூடாது. இந்த பிரச்சினை யின் அடிவேரை இனங்காண வேண்டும். உலகில் விவசாயத்துறை புறக்கணிக்க ப்பட்டதே இதற்குக் காரணமாகும். இத் துறையில் போதுமான வகையில் முதலி டப்படவில்லை” என பான் கி மூன் கூநி னார்.
“இந்தப் போரில் நாம் தோற்றுவிட முடி யாது. எமது எதிரி பட்டினி. நாம் இது வரை காலமும் எதற்காகவெல்லாம் போராடி வந்தோமோ அவற்றை எல்லாம் இந்தப் பட்டினி அர்த்தமில்லாமல் செய்து விடும்” என்றார் பான் கி மூன்.
இதேவேளை, விவசாய உற்பத்தியில் உலக நாடுகள் ஒத்துழைத்து செயற்பட வேண்டுமென இம்மாநாட்டில் சீன விவ சாய அமைச்சர் சுன் ஸெங்காய் தெரிவி த்தார்.
அத்துடன் அனைத்து நாடுகளும் விவ சாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கூநினார்.

No comments: