பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Thursday, September 25, 2008

இலங்கை கைத் தொழில் சபை

K.S.அனோஜி
இலங்கை கைத்தொழில் சபை‚ 1982ம் ஆண்டு 35ம் இலக்க தேசிய கைத்தொழில் கவுன்சில் மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் 1983ம் வருடம் 17ம் திகதி நிறுவப்பட்டது. ஸ்ரீ லங்கா கைத்தொழில் சபையானது ”லக்சல” என நன்கு பிரசித்தி பெற்றிருப்பதோடு கைத்தொழிலாளர்களின் மரபுமுறை திறன்களை பேணிக்காக்கவும் அபிவிருத்தி செய்யவும் கிராமிய கைத்தொழில் மற்றும் சுய தொழில் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமாகும். இச்சபையானது கிட்டத்தட்ட 3500 முன்னணி கைத்தொழில் வல்லுனர்களோடும்‚ இலாப நோக்கோடு கிராம குடிசை கைத்தொழில் மட்டத்தில் கைத்தொழிலில் பொருட்களை உற்பத்தி செய்கின்றவர்களோடும் தொடர்புகளை கொண்டுள்ளது. லக்சல ஒன்றுதான் கைத்தொழில் பொருட்களை சந்தைப் படுத்துதலையும‚ ஏற்றுமதி செய்தலையும் அதனை உயர்த்துவதையும் கைத்தொழிலாளர்களுக்கு பயிற்சி நல்குவதற்குமான ஏற்பாடுகளை கொண்டுள்ள அரசுரிமை கொண்ட கைத்தொழில் சந்தைப்படுத்தல் நிறுவனமாகும். இச்சபையானது அதன் குறிக்கோள்களை எய்தும் நோக்கோடு 140 பயிற்சி நிலையங்களையும்‚ 10 விற்பனை வினியோக நிலையங்களையும் மற்றும் 11 மாகாண மட்டத்திலான கொள்வனவு நிலையங்களையும் செயற்படுத்தி வருகின்றது.

No comments: