பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Wednesday, September 24, 2008

2007ல் இலங்கையில் 124 வெளிநாட்டு தொழ்ற்சாலைகள் முடப்பட்டுள்ளன:

K.S.அனோஜி
இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த 124 தொழிற்சாலைகள் கடந்த 2007 ஆம் ஆணடில் மூடப்பட்டது என இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 24 தொழிற்சாலைகள் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் யோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் எனவும் சபை குறிப்பிட்டுள்ளது. இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் தலா 500 தொழிலாளர்கள் பணியாற்றி வந்ததாகவும் இவை மூடப்பட்ட நிலையில் 12 ஆயிரம் பேர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் முதலீட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது. இலங்கை முதலீட்ச் சபையின் அனுமதியின் கீழ் 2006ஆம் ஆண்டில் ஆயிரத்து 852 தொழிற்சாலைகள் இயங்கின. எனினும் 2007ஆம் ஆண்டில் ஆயிரத்து 788 தொழிற்சாலைகள் மாத்திரமே செயற்பட்டன. 2006ஆம் ஆண்டில் 187 ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கிய போதிலும் 2007ஆம் ஆண்டில் இந்த தொகை 163 வாக குறைவடைந்தது. இதேவேளை 2006ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 91 மில்லியன் ரூபா நேரடி வெளிநாட்டு முதலீகள் மேற்கொள்ளப்பட்டது எனினும் 2007ஆம் ஆண்டு அந்த தொகை 2 ஆயிரத்து 659 மில்லியன் ரூபாவாக குறைவடைந்தது எனவும் இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது

No comments: