பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, October 17, 2008

யாழ்ப்பாணத்தில் மீன்பிடித்துறையின் பின்னடைவு

யாழ்ப்பாணத்தில் மீன்பிடிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை காரணமாக சுமார் 19 ஆயிரம் கடற்றொழிலாளர் குடும்பங்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இரவு நேர மீன்பிடிக்கு நிரந்தரமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாசையூர், கொழும்புத்துறை, குருநகர் ஆகிய இடங்களில் சுமார் 250 படகுகள் தொழிலில் ஈடுபட்டு வந்தன.

எனினும் அவை இப்போது 40 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டில் சுமார் 19 ஆயிரம் கடற்றொழிலாளர் குடும்பங்கள் நிவாரணங்களாக 1200 ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களைப் பெறுகின்றனர்.

எனினும் அவை குறித்த குடும்பங்களுக்குப் போதுமானவையல்ல.

யாழ்ப்பாணத்தில் மீன்பிடித்துறையில் 1983 ஆம் ஆண்டு 48 ஆயிரத்து 677 மெற்றிக்தொன் மீன்கள் பிடிக்கப்பட்டன.

எனினும் 2007 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 963 தொன் மீன்கள் பிடிக்கப்பட்டன.

No comments: