பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Tuesday, September 30, 2008

ICT முதலீடும் தனியார்துறை அபிவிருத்தியும்

உள்நாட்டு ICT துறை மற்றும் இலங்கையின் ICT ஏற்றுமதிக் கைத்தொழில் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கும் சமாந்தரமான நோக்கங்களை இவ்வேலைத் திட்டம் கொண்டுள்ளது. உள்நாடடுத் துறையைப் பொறுத்த வரை, நாட்டிலுள்ள சகல தனியார் துறை சார்ந்தவர்களிடையே ICT பாவனையை அதிகரிக்க ICTA முயற்சி எடுக்கிறது. ICT உற்பத்திகள், சேவைகள் மற்றும் முதலீடுகளுக்குச் சிறந்ததொரு தெரிவு இடமாக மீண்டும் இலங்கையை இலங்கச் செய்வது அதன் இரண்டாவது நோக்காகும். இலங்கையில் நிலைத்தகவுள்ள பொருளாதார வளர்ச்சியையும் தொழில் உற்பத்தியையும் அடைவதற்காக இவ்விரண்டு நோக்கங்களும் உதவும்.

தூர நோக்கு:
குறிப்பிட்ட உலகச் சந்தைகளுக்கு சிறந்த ICT தீர்வுகளைத் தயாரிப்பதில் வினைத்திறனுடைய அரசாங்க மற்றும் தனியார் துறையொன்றை உறுதிப்படுத்துவதற்காக ICT இனை வெற்றிகரமாகப் பாவிக்கும் நாடாக மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி அத்துடன் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக வர்த்தகச் செயற்பாட்டு புறவளத் தெரிவு அமைவிடமாக இலங்கையை இலங்கச் செய்வது.

உத்திகள்:


அரசாங்கத்துக்கு ICT தீர்வுகளையும் சேவைகளையும் வழங்குவது மூலம் தனியார் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.


உள்நாட்டுக் கைத்தொழிலுக்கு மற்றும் அதன் மூலம் பொதுமக்களுக்கு ஆளுமையை வழங்கி, மேலும் பரவலாக வர்த்தகம் அத்துடன் வணிகத்தில் ICT இனை பாவிப்பது கொண்டு கிடைக்கும் இலாபங்களை அவர்கள் அடைவதற்கு வழிவகுத்தல்.


உலகச் சந்தையில் உள்நாட்டு ICT உற்பத்திகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தல்.


உலகளாவிய சர்வதேச கூட்டுத்தாபனங்கள் தம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான (வெளிநாட்டு நேரடி முதலீடு) கவர்ச்சிமிக்கதொரு அமைவிடமாக இலங்கைக்கு வர்த்தகச் சின்னத்தைப் பெற்றுக் கொடுத்தல்.


வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்காகவும் உலகச் சந்தைகளில் உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் முக்கியமானதொரு பங்கினைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிப்பதற்காகவும் சிறந்த மத்திகளை நிறுவுதல்.

கருத்திட்டங்கள்:


ICT திறமையைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்



e-இலங்கை PC கருத்திட்டம்



IT இனால் இயலுமாக்கப்பட்ட சேவைகள் (ITeS)


நோக்கம் :

இலங்கையில் வெற்றிகரமானதொரு ITeS கைத்தொழிலுக்குச் சாதகமானதொரு சூழலை உறுதிப்படுத்தல்.

விளக்கம் :

உட்கட்டமைப்பு வசதி, மனித வளங்கள் மற்றும் பாவிக்கும் பொருட்களின் விலை ஆகியவை ITeS கைத்தொழில் வளர்ச்சிக்கு வசதியளிக்கும் முக்கிய காரணிகள் என இனங்காணப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு வசதி மற்றும் பொருட்களின் செலவு தொடர்பான பரவலான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து இக்கருத்திட்டம் செயற்படும். ஆயினும், ஆரம்ப நடவடிக்கையாக வளர்ந்து வரும் இக்கைத்தொழிலுக்கு தரமான ஆளணியினரை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். இது தொடர்பாக, ITeS கைத்தொழில் துறையில் கிடைக்கும் தொழில் வாய்ப்புக்கள் பற்றி பாடசாலை விட்டகழ்வோர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான செறிவுள்ளதொரு அறிவூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இக்கருத்திட்டத்துக்குச் சமாந்தரமாக, ITeS பயிற்சிக் கருத்திட்டம் ஒன்றுக்கும் ICTA வசதியளிக்கும். ICT மனித வள திறனைக் கட்டியெழுப்பும் ICTA இன் நான்காம் வேலைத்திட்டத்தின் கீழ் இக்கருத்திட்டம் அமைந்துள்ளது.

இலக்குப் பார்த்த குழு :


தமது நடவடிக்கைகளுக்கான புற வளங்களைத தேடும் சர்வதேச கம்பெனிகள்.


பாடசாலை விட்டகழ்வோர்


பகுதி நேர மாணவர்கள்.


பெற்றோர்


ஆசிரியர்கள்

கருத்திட்டப் பெறுபேறுகள்


இக்கைத்தொழிலுக்குச் சேவை வழங்குவதற்கான பெரியதொரு மற்றும் சிறந்த தகைமையுடைய ஆளணி.


அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கம்பெனிகள் தமது புறவள நடவடிக்கைகளை இலங்கையில் நிறுவுதல். கருத்திட்ட நன்னமைகள்


வளர்ச்சி மற்றும் மூலதனத்தை உந்தும் விதத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (எவ்டிஐ) இலங்கைக்கு கிட்டுதல்.


உள்நாட்டுக் கம்பெனிகள் மேலும் இலாபகரமாகச் செயற்படல்.


திறமையுள்ள உள்நாட்டவர்களை இலங்கையில் வைத்திருத்தல் மற்றும் மேலும் அதிக தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல்.


இலங்கை ICT கைத்தொழிலின் வெற்றிவாகை சூடிய கதைகள்
இலங்கையின் ICT கைத்தொழில் நல்லதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தரத்தை அத்தாட்சிப் படுத்தும் பல விருதுகளை வென்று அண்மைக் காலங்களில் பல இலங்கைக் கம்பெனிகள் உலக அரங்கில் பிரகாசமாகத் தோற்றமளித்துள்ளன. அப்படியான கதைகள் சிலவற்றை இங்கு நாம் தருகிறோம்.
மேலும் வாகிக்க

ICT தனியார் துறையுடன் ஒன்றோடொன்று இணைந்து ICTA செயற்படுகிறது.
சகல துறைகளினதும் பங்களிப்பு இன்றி நாடு முன்னேற முடியாது என்பதை ICTA உறுதியாக நம்புவதோடு, முன்னேற்றத்தில் தனியார் துறை முக்கியமானதொரு பங்காளர் என அது கருதுகிறது. e-ஸ்ரீ லங்கா இனை ICT கைத்தொழிலின் துடிப்பான பங்களிப்புடன் எவ்வாறு எய்தலாம் என்பது பற்றிய அர்த்தமுள்ளதொரு கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்காக, ICT தனியார் துறையுடன் காலாண்டுக் கூட்டங்களை நடாத்துவதற்கு ICTA உறுதி பூண்டுள்ளது.

No comments: