பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Tuesday, October 7, 2008

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிச்சலுகை ரத்தாகும் ஆபத்து என்கிறது மத்திய வங்கி

அந்நிலையை எதிர்கொள்ளத் தயாராகும்படியும் அழைப்பு
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2007 இல் 6.8 வீதமாகக் காணப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ள மத்தியவங்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிக்கான "ஐ.எஸ்.பி.' என்ற விசேட சலுகை அற்ற சூழ்நிலையில் செயற்படுவதற்கு கைத்தொழில் துறை தயாராக வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2007 இல் 6.8 வீதமாகக் காணப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ள மத்தியவங்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிக்கான "ஐ.எஸ்.பி.' என்ற விசேட சலுகை அற்ற சூழ்நிலையில் செயற்படுவதற்கு கைத்தொழில் துறை தயாராக வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.பொருளாதாரத்துடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக இச்சலுகை விலக்கப்படலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ள மத்திய வங்கியின் அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தீவிரமடைந்துள்ள பயங்கரவாதத் தாக் குதல்கள் காரணமாகப் பாதுகாப்புக் கரிச னைகள் அதிகரித்தமை, சர்வதேச சந்தை யில் பெற்றோல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பால் விலை ஸ்தி ரத்தன்மை அச்சுறுத்தல்க ளுக்குள்ளா னமை போன்ற சவால் மிகுந்த சூழலில் 6.8 வீத பொருளாதார வளர்ச்சி மிகவும் பாராட் டத்தக்கது.இலங்கை மத்திய வங்கி அறிமுகப் படுத் திய கடுமையான நாணய கொள்கை கார ணமாக 2007 இன் முதல் காலாண்டுப் பகுதி யில் பணவீக்கத்தைக் குறைக்க முடிந்தது.2007 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச் சிக்கு கைத்தொழில்துறை மற்றும் சேவைத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியே காரணம்.கைத்தொழில்துறையின் நடவடிக்கை களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் "ஜி.எஸ்.பி.' விசேட ஏற்றுமதிச் சந்தை சலுகையும் இரு தரப்பு பிராந்திய பொருளா தார உடன்படிக் கைகளுமே அனுகூலமாக அமைந்தன.எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் "ஜி.எஸ்.பி.' சந்தை வாய்ப்புச் சலுகை பொருளாதாரத்துடன் தொடர்பற்ற கார ணங்களுக்காக விலக்கப்படலாம் என்ப தால் கைத்தொழில்துறை இவ்வாறான சலு கைகள் அற்ற நிலையிலும் செயற்படத் தயாராக வேண்டும்.இலங்கை 2007 இல் 73 கோடி 40 லட் சம் டொலர் வெளிநாட்டு நேரடி முத லீட் டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. என்று தெரிவிக் கப்ப ட்டிருக்கின் றது.

No comments: