பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Monday, October 13, 2008

ஏற்றுமதி வர்த்தகத்தில் வளர்ச்சி

நாட்டின் உள்ளூர் ஏற்றுமதியானது இவ்வருடம் 15.4 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 41சத வீதம் விவசாயப் பொருட்களேயாகும்.
கடந்த வருடம் தேயிலைக்கான உற்பத்தியில் சிறிய வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் அதன் ஏற்றுமதி 2008 ஆம் ஆண்டு 38 சத வீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. கிலோ தேயிலைக்கான ஏற்றுமதி விலை இவ்வருடம் அமெரிக்க டொலர் 3.83 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சிறு கைத்தொழில்களுக்கான ஏற்றுமதி 5.7 வீதமாகவும் ஆடையுற்பத்தி ஏற்றுமதி 4 வீதமாகவும் இவ்வருடத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி மூலம் பெற்ற மாத வருமானம் 565 மில்லியன் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் பெற்ற வருமானம் அதிகமாகவே காணப்படுகின்றது.

No comments: