பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Thursday, December 11, 2008

நாணய மதிப்பிறக்கத்திற்கு மத்திய வங்கி அனுமதி டொலர் 110 ரூபாவாக வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் மட்டுப்படுத்தப்பட்ட நாணய மதிப்பிறக்க கொள்கை தீர்மானத்தை அடுத்து அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை நாணயப் பெறுமதி [30 October 2008] வியாழக்கிழமை 110 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. அண்மைக்காலங்களில் டொலரொன்றுக்கு எதிராக இலங்கை நாணயப் பெறுமதி 108 ரூபாவாக இருந்து வந்தது.
உலகமய பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சியடையக் கூடிய சாத்தியம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஏற்றுமதி விலைகளிலும், ஏற்றுமதிக்கான கேள்விகள் குறைவடையலாம் என்ற எதிர்பார்ப்பிலும் ஏற்பட்டிருக்கும் சடுதியான வீழ்ச்சி மற்றும் முக்கிய சர்வதேச நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டொலரின் அண்மைக்கால சடுதியான பெறுமதி உயர்வு போன்ற விடயங்களே மத்திய வங்கியின் இந்த தீர்மானத்துக்கு வழி வகுத்திருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பிட்ச் ரேடிங்ஸ் அறிக்கைக்கு மத்திய வங்கி விளக்கம்


பேரினப் பொருளாதாரம் பலவீனம் அடைந்து செல்வதால் நிதிக் கம்பனிகள் மீது திரவத்தன்மை கோரி அழுத்தம்" என்ற தொனிப்பொருளில் பிட்ச் ரேடிங்ஸ் நிறுவ னத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பதில் அனுப்பி வைத்துள்ளது. பிட்ச் நிறுவனத்தின் இந்த அறிக்கையானது உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை முன்வைப்பதாக தெவித்துள்ள மத்தியவங்கி இதுதொடர்பில் மேலும் விளக்கமளித்திருப்பதாவது கடந்த முன்று ஆண்டுகளாக பொருளாதாரம் 6 சதவீதத்திற்கு மேலாக வளர்ந்து வந்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டின் முதற் கா லாண்டில் 6.2 சதவீதமும்இ இரண்டாம் காலாண்டில் 7.0 சதவீதமும் வளர்ச்சி கண்டிருக்கிறது. பொருளாதாரத்தின் முன்று பெரும் பிரிவுகளும் 2008 இன் முதல் அரையாண்டில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி கண்டிருக்கின்றது. விவசாயம் மற்றும் தொழிற்துறை தலா 6.5 சதவீத வளர்ச்சியையும் சேவைகள் பிரிவு 6.7 சதவீத வளர்ச்சியையும் கண்டிருக்கிறது. வெளிநாடுகளுடன் தொடர்புபட்ட துறைகளில் ஏற்றுமதித்துறை 2008 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 4.7 பில்லியன் டொ லர்களுக்கு உயர்ந்து 12 சதவீத வளர்ச்சியை காட்டியுள்ளது. இதே காலப்பகுதியில் இறக்குமதிகள் 35 சதவீதத்தினால் உயர்ந்து 8.3 பில்லியன் டொலர்களாகியுள்ளது. ஏற்பட்டிருந்த வர்த்தகப் பற்றாக்குறை வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனுப்பி வைக்கும் அதிகரித்தளவு பண அனுப்பீடுகள் மற்றும் அர சாங்கத்தினதும்இ தனியார் துறையினதும் முலதனங்கள் என்பவற்றினால் ஈடு செய்யப்படுகிறது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும் ஊழியர் பண அனுப்பீடுகள் 22 சதவீதத்தினால் அதிகரித்து 1.5 பில்லி யன் டொலர்கள் வரை உயர்ந்ததுஇ அன்னிய நேரடி முதலீ டுகள் மற்றும் முதலீட்டுப் பட்டியல் மொத்தம் முறையே 360 மில்லியன் டொலர்களாகவும். 355 மில்லியன் டொலர்களாகவும் முதல் அரையாண்டில் உயர்ந்தது. இவற்றைத் தொடர்ந்து மொத்த கொடுப்பனவு மீதி முதல் அரை யாண்டில் 390 மில்லியன் டொலர்களாகவும் மிகையாக இருந்தன. அத்துடன் மொத்த ஒதுக்கங்கள் 3.5 பில்லியன் டொலர்களாக 2008 யூலையில் அதிகரித்தன. அதாவது 2007 இறுதியில் இத்தொகை 3.1 பில்லியனாக இருந்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலர் இலங்கை ரூபா நாணய மாற்று வீதம் தளம்பாமல் இருந்தது. வருவாய் துறையை எடுப்போமாயின்இ 2008 முதல் அரையாண்டில் அரச வருமானம் 24.2 சதவீதம் அதிகரித்து ரூபா 312.5 பில்லியன் ஆகியது. 2007 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வரிவருவாய் 22.6 சதவீதத்தினால் அதிகரித்தது. மீண்டுவரும் செலவினம்இ முலதனச் செலவினம் அதிகரிப்பு காரணமாக செலவினமும் 22.5மூ மாக அதிகரித்து ரூபா 476.6 பில்லியனை எட்டியது. உரமானியம் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் காரணமாக மீண்டுவரும் செலவினத்தில் பெரும் அதிகரிப்பு காணப்பட்டது. முலதன செலவின அதிகரிப்பு துரித அபிவிருத்தி திட்டங்களால் ஏற்பட்டது. முக்கியமாக வீதி அபிவிருத்திஇ மின்னுற்பத்திஇ நீர்ப்பாசனம் வேறும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பனவே இதற்கான காரணமாகும். 2007 இல் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 85.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த உள்நாட்டுக் கடன்கள் தொடர்ந்தும் அதேபோக்கையே காட்டுகின்றன. 2008 இறுதியில் மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பணக்கொள்கை விடயத்தில் மத்திய வங்கி இறுக்கமான கொள்கைப் போக்கினைக் கொண்டுள்ளது. நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதை அது முக்கிய இலக்காக கொண்டுள்ளது. இவ்வாண்டில் இரு தடவைகள் பண ஒதுக்க இலக்குகளை கீழ் நோக்கி நகர்த்தியது. இதனால்இ சேமவைப்பு பணம் மற்றும் மொத்தப் பணம் என்பவற்றின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தனியார் துறைக்கான கடன் வசதிகள் 12 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டன. மேலுயர்ந்து சென்ற பணவீக்க நிலை யூலை மாதம் வரையில் பின்நோக்கி நகரத் தொடங்கியது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த கொழும்பு பாவனையாளர் விலைச்சுட்டெண் 2008 ஓகஸ்ட்டில் 24.9 சதவீதத்திற்கு இறங்கியது. இன்றைய நாணயக் கொள்கையை தொடரும் அதேவேளை பேரினப் பொருளியற் சூழலையும் முன்னேற்றும் போது இவ்வாண்டில் பணவீக்கம் மேலும் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்படும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது. பதிவு செய்யப் பட்ட நிதிக்கம்பனிகள் நிதிமுறைமையின் மொத்தச் சொத்துக்களில் 3 சதவீதத்தை கொண்டிருக்கின்றன. பணவைப்புக்களை ஏற்கும் பெரும் நிறுவனங்களின் மொத்த பணவைப்பு பொறுப்புகளின் 5 வீதத்தினை கொண்டிருக்கின்றன. மேலும் நிதிக்கம்பனிகள் வழங்கிய கடன்கள் மொத்த உள்நாட்டுக் கடனில் 5 வீதமாக இருக்கிறது நிதிக்கம்பனிகள் கொண்டிருக்கும் சொத்துக்கள் மற்றும் வைப்புக்களின் அளவுகளை கருத்தில் கொள்ளும் போது நிதிக்கம்பனிகள் தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள போக்குகள் நிதித்துறையின் உறுதிப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை இல்லை எனலாம். அத்துடன் பிரச்சினை தரமதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளவாறு இன்றைய பேரினப் பொருளியல் சூழல் திரவத்தன்மைக்கான அழுத்தத்தை அதிகரிக்காது. எனவேஇ இலங்கையின் பேரினப் பொருளியல் நிலை பலவீனமான தன்று. ஆனால்இ இலங்கை அதிகாரிகளின் சரியானதும் பொருத்தமானதுமான நாணய கொள்கைகள் காரணமாக அது முன்னேற்றம் கண்டுவருகிறது. ஆகவே பொருளாதார துறையின் பல பிரிவுகளின் நிறைவேற்றங்கள் மற்றும் பேரினப் பொருளியல் துறையின் முக்கிய முன்னேற்றங்களின் முன்னிலையில் பேரினப் பொருளியற் சூழல் பலனவீனமடைந்துள்ளது என விவரிப்பது தவறாக இட்டுச் செல்வதாகும். எனமத்திய வங்கி தெரிவித்துள்ளது

Wednesday, December 10, 2008

உலகின் பொது நாணயம் : டாலர் vs யூரோ - 1

உலகின் பொது நாணயமாக (World's reserve currency) அமெரிக்க டாலர் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி வலுப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த வாரம் ஹிந்து நாளிதழில் கூட இது பற்றிய ஒரு தலையங்கம் வெளியாகி இருந்தது.உலகின் பொது நாணயமாக டாலர் இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பில் ஒரு நிலையான தன்மை இருக்க வேண்டும். மாறாக டாலரின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நிலையில்லாமல் இருக்கிறது. இந் நிலையில் அதற்கு மாற்றாக யூரோ அல்லது சீனாவின் RenMinBi நாணயம் உருவாகக்கூடும் என்று கருதப்படுகிறது. சீனாவின் நாணயம் கட்டுப்படுத்தப்பட்ட நாணயமாக இருப்பதால் டாலருக்கு மாற்றாக யூரோ தான் பெரும்பாலானோரால் முன்வைக்கப்படுகிறது.1944 உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனுக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார பாதிப்பால் அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகிய சூழலில் டாலர் உலகின் பொது நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த முறையின் படி மற்ற நாட்டின் நாணயங்கள் அமெரிக்க டாலருடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்தில் நிலையாக பிணைக்கப்பட்டது. உதாரணமாக 1 அமெரிக்க டாலர் = 10 இந்திய ரூபாய். இதில் எப்பொழுதும் எந்த மாற்றமும் இருக்காது. இதனை Fixed Exchange Rate என்று சொல்வார்கள். இது போலவே அமெரிக்க டாலருடன் தங்கமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிணைக்கப்பட்டது.இந்த முறை மூலம் ஏற்பட்ட பல பொருளாதார பிரச்சனைகளால் 1970க்குப் பிறகு இந்த முறை மாற்றப்பட்டு சந்தை வர்த்தகம் மூலம் ஒரு குறிப்பிட்ட நாணயத்திற்கு இருக்கும் தட்டுப்பாடு, தேவை போன்றவை கொண்டு நாணயத்தின் மதிப்பை கணக்கிடும் முறை அமலுக்கு வந்தது - Floating. இதுவே தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும், சக்தி வாய்ந்த வல்லரசாகவும் அமெரிக்கா இருப்பதால் இதில் எந்தப் பிரச்சனையும் இருக்க வில்லை. ஆனால் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அது அமெரிக்காவின் டாலருக்கு போட்டியாகவே கொண்டு வரப்படுவதாக அனைவரும் கருதினர்.உலகின் பொது நாணயத்திற்கு ஏன் இந்தப் போட்டி ?உலகின் பொது நாணயமாக டாலர் இருப்பதால் அமெரிக்காவிற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அமெரிக்காவின் இறக்குமதி/ஏற்றுமதி நிலவரங்களில் கடுமையான பற்றாக்குறை உண்டு. அதன் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். இந்தப் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து நீடிப்பது எப்படி ?அது தான் உலகின் பொது நாணயம் கொடுக்கும் நன்மைஉலகின் பல்வேறு வர்த்தகங்கள் டாலர் மூலமாகவே நடக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் போன்றவை. கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமெனில் டாலர் வேண்டும். அதனால் உலகில் உள்ள ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் டாலரை வாங்குகின்றன. இது தவிர ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமெனில் அதன் நாணயத்தின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். ஏற்றுமதி அதிகரித்தால் தான் நாட்டின் பொருளாதாரம் உயரும். கடும் போட்டியிருக்கும் ஏற்றுமதியில் பல நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க முயலுகிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அவர்களுக்கு டாலர் வேண்டும். அதற்காக நிறைய டாலரை வாங்குகிறார்கள். அமெரிக்கா வெளியிடும் Treasury Bonds போன்றவற்றையும் பெற்று தங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உலகின் பெரும்பங்கு டாலர் கையிருப்பு ஆசிய நாடுகளிடம் தான் உள்ளது. அமெரிக்க டாலரில் 55% முதல் 70% அமெரிக்காவிற்கு வெளியே தான் இருக்கிறது.பல ஆசிய நாடுகள் ஏராளமான அமெரிக்காவின் பாண்ட்களை வைத்திருக்கிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்க டாலரை தங்கள் கையிருப்பில் இந்த நாடுகள் தேக்கிக் கொள்கின்றன. இதனால் ஆசிய நாடுகளின் நாடுகளின் நாணய மதிப்பு குறைவாக இருக்கிறது. இதன் மூலம் அவர்களால் அமெரிக்காவிற்கு குறைந்த விலைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. இந்த தேக்கம் அமெரிக்காவிற்கு வட்டியில்லா கடன் போலத் தான். டாலர் உலகின் பொது நாணயமாக இருக்கும் வரையில் இது திருப்பி தரத் தேவையில்லாத கடனாக அமெரிக்காவிற்கு கிடைக்கிறது. அமெரிக்கா நிறைய இறக்குமதிகளை செய்தாலும் உலகின் பொது நாணயமாக இருப்பதால் கிடைக்கும் கடனை கொண்டு குறைந்த விலைக்கு ஆசிய நாடுகளின் பொருட்களை பெற்றுக் கொண்டு சுகமாக காலம் கழிக்க முடிகிறது.உதாரணமாக சீனாவின் நாணயத்தை எடுத்துக் கொண்டால் அது அமெரிக்க நாணயத்துடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்த விகிதத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. இதனால் டாலர் சரியும் பொழுதெல்லாம் அதன் நாணயமும் சரிகிறது. நாணயம் சரிவதால் அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. அதன் பொருட்களும் மலிவாக கிடைக்கிறது. இவ்வாறான முறையை சீனா கைவிட வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் சீனா கண்டுகொள்வதில்லை. சீனாவுடனான அமெரிக்காவின் ஏற்றுமதி/இறக்குமதி ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம். அமெரிக்காவின் மொத்த வர்த்தக ஏற்றத்தாழ்வில் கால்வாசி சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வாலேயே ஏற்படுகிறது.சீனா இம் முறை தனக்கு வசதியாக இருக்கும் வரை இதனையே பின்பற்றும். ஆனால் கூடிய விரைவில் உலக வர்த்தக மையத்தின் சட்டதிட்டங்களுக்கேற்ப இதனை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் பொழுது தனது நாணயத்தின் கட்டுப்பாட்டு தன்மையை நீக்கும். அப்பொழுது சீனாவின் நாணய மதிப்பு உயரும். அமெரிக்காவில் மலிவாக கிடைக்கும் ஏராளமான சீனப் பொருட்கள் விலையும் உயரும். பல சீனப் பொருட்களை நம்பி இருக்க வேண்டிய சூழலில் அமெரிக்கா இருக்கிறது. பொருட்களின் விலை உயரும் பொழுது பணவீக்கம் அதிகரிக்கும். மக்களின் வாழ்க்கை தரத்திற்கு சவால் எழுகிறது.

Thursday, December 4, 2008

உலக உணவுப் பாதுகாப்பு சில தீர்மானங்கள்

கடந்தஆண்டு ஜீன் முதல் வாரத்தில் ரோம் நகரில், “உலக உணவுப் பொருள் நிலை” பற்றிய உயர்நிலை மாநாடு நடைப்பெற்று சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம் மாநாட்டில் 180 உலக நாடுகள் பங்கேற்று விவாதித் திருப்பது உலக உணவுப் பொருள் நிலைகுறித்த முக்கியத்துவத்தையும், அவசரத்தையும் நமக்கு நன்கு உணர்த்துகிறது. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளும் சரி, வளர்ந்து வரும் நாடுகளும் சரி, உணவுத் தேவையை முன்கூட்டியே கணக்கிட்டு உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருவது யாவரும் அறிந்ததே!
உணவு தானியப் பற்றாக்குறை அல்லது தொடர்ந்து வாட்டும் வறுமையில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் சில நாடுகளைக் கூட (எத்தியோப்பியா, சோமாலியா) மற்றநாடுகளின் அபரிமிதமான தானிய உற்பத்தியைக் கொண்டு காத்து வந்திருக்கின்றோம். 1930களின் இறுதியில் நிலவிய உலகப் பெருமந்தம் (Great Depression of World Economy) அதன்பிறகு ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றின் தாக்கம் உலக நாடுகளைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. தொழிற்துறை வளர்ச்சி வேகம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவை நிர்ணயிக்கும் முக்கிய காரணி என்று மிகவும் நம்பப்பட்ட அந்தக் காலகட்டத்தில் வேளாண்மைத் துறையின் வளர்ச்சியும், உணவு உற்பத்தியுமே ஒரு நாட்டில் நிலையான வளர்ச்சியை ஊக்கப் படுத்தும் என்ற உண்மை உணரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும், அன்றைய ஒருங்கிணைந்த ரஷ்யாவும் 1940 மற்றும் 1950 களில் உணவு உற்பத்தி பெருக்கத்தில் பெரிதும் தனது கவனத்தையும், ஆய்வையும் செலுத்தியது. அவரவர் வசதிக்கும், தேவைக்குகேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டன. உயர் விளைச்சல் தரும் ரகங்கள், அதிகரிக்கப்பட்ட விளைநிலங்கள், நீர்ப்பாசன வசதி, ரசாயன உரக் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு, வேளாண்மையில் இயந்திரங்களின் அறிமுகம் ஆகியவை மேற்கூறிய காலகட்டத்தில் வேளாண்மைப் புரட்சிக்கு உலக அளவில் வித்திட்டது.
இதன் தாக்கம் நம் நாட்டிலும் பெரிதும் உணரப்பட்டது. இதன் விளைவாக 1930 மற்றும் 1940களில் வறுமையிலும், பஞ்சத்திலும் பாதிக்கப்பட்ட நமது நாடு நவீன வேளாண் உற்பத்தியின் அவசியத்தையும், முக்கியத்துவத் தையும் உணர்ந்து ரஷ்யப் பொருளாதார முறையின் ஐந்தாண்டு திட்டங்களைப் போல் வகுத்துச் செயல்பட முனைந்தது. முதல் மற்றும் இரண்டாவது திட்ட காலத்தில் (1951-56 மற்றும் 1956-1961) வேளாண் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட வழிவகை ஏற்பட்டது. அதிவேகமாக வளர்ந்து வந்த மக்கள் தொகையின் அளவிற்கு ஏற்ப உணவளிக்கச் சாத்தியப்பட்டது. இன்றுவரை உலகின் இரண்டாவது மக்கள் தொகையைப் பெற்றிருக்கும் நமது நாட்டில் உணவுப் பற்றாக்குறையும், பட்டினிச்சாவும் இல்லை என்பது நமது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால் சமீபத்தில் ரோம் நாட்டில் கூடிய 180 உலக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் “உலக உணவு நிலை” பற்றி விரிவாக விவாதிக்க வேண்டியதின் அவசியத்தையும், நம்முன் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வரும், காலநிலை மாற்றம் பற்றியும் உயிரி எரிசக்தி பற்றியும் சில உண்மை நிலைமையையும், எதிர் கொள்ள வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் அலசி ஆராய்ந்துள்ளனர்.
இன்றைய நிலையில், மிகவும் கவலை அளிக்கக்கூடிய செய்தியாக, நாளும் உலக அளவில் அதிகரித்துவரும் உணவுப் பொருட் களின் விலைதான் என்று இம்மாநாடு சுட்டிக் காட்டியுள்ளது. இதே நிலை தொடருமானால் வரும் ஆண்டுகளில் கிட்டத்திட்ட 100 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் தள்ளப்படுவார்கள் என்கிற கணக்கும் இம்மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (ஊஅஞ) டைரக்டர் ஜெனரல் ஜேக்ஸ் டயாஃப் இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது, உணவுப் பற்றாக்குறை என்பது வருங்காலத்தில் தவிர்க்க முடியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம், வளர்ந்துவிடும் மக்கள் தொகை, உணவு உற்பத்தி செய்யும் நாடுகளின் வேளாண்மைத் தேக்கம், உலக வாணிபம் ஆகியவற்றைநாம் கடுமையாக எதிர்கொண்டு சமாளிக்கவில்லை என்றால் 2015க்குள் திட்டமிட்டுள்ள உலக வறுமை ஒழிப்பு எனும் தீர்மானம் பயனற்றதாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.
சமீபத்திய ரோம் மாநாட்டின் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது உலகின் உணவுப் பொருள் உற்பத்தி நிலையை ஆராய்ந்து வேளாண் பொருட்களின் வழங்கலை உலகம் முழுக்க சீர் செய்வதுடன் அவற்றின் விலையை நிலைப்படுத்துவதும் ஆகும். இம்முயற்சி மேற் கொள்ளப்படாவிட்டால், சீரற்றவேளாண் உற்பத்தியும், நிலையற்றவேளாண் பொருட்கள் விலையும் உலக அரங்கில் ஒரு பெரிய பொருளாதார சீர்கேட்டை உருவாக்கிவிடும் என்ற அச்சமும் இம்மாநாட்டில் முன்வைக்கப் பட்டுள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகை ஒருபுறம், உயர்தரம் வாய்ந்த வாழ்க்கை நிலையில் உள்ள நாடுகள் மறுபுறம், உணவுத் தேவைக்கே அல்லல்படும் நாடுகள் இன்னொருபுறம் என்றநிலையை இனியும் மாற்றாவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்றகருத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவுப் பொருள் பற்றாக்குறைஅல்லது தட்டுப்பாட்டிற்கு சமீபத்திய காரணியாக உயிரி எரிபொருள் (க்ஷண்ர்-ச்ன்ங்ப்) உருவெடுத்துள்ளதாகவும் கருத்து வெளிப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எழுந்துள்ள முக்கிய தீர்மானம் அல்லது முடிவு என்ன வென்றால் வளர்ந்துவரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும் மற்றவற்றையும் விட வேளாண் துறைவளர்ச்சிக்கும், உணவு உற்பத்திக்கும் முக்கியத்துவமும், உதவியும் அளிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து நாடு களும் வேளாண்துறைமுதலீட்டையும், வேளாண்சார்ந்த வாணிபத்தையும், கிராமப் புறவளர்ச்சியையும் ஊக்குவிக்கவேண்டும். குறிப்பாக வேளாண்சந்தை சீர்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.
இத்தீர்மானத்தில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், சில நாடுகள் இக்கருத்தை விமர்சனம் செய்யத் தயங்கவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளின் வேளாண் மானியமுறையும் ஐ.எம்.எஃப், உலகவங்கி போன்ற அமைப்பினை நாம் அதிகமாக சார்ந்திருப்பதாலும் வேளாண் கொள்கையில் பெரிய மாற்றத்தை உலக நாடுகள் ஏற்படுத்த முடியவில்லை என்றகருத்தை அர்ஜென்டினா, மற்றும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகள் இம்மாநாட்டில் வலியுறுத்தியுள்ளன.
வாணிப தாராளமயமாக்கலைப் பற்றி நாம் பேசும் போதும், எழைகளின் வாழ்வாதாரத் தையும் உணவுப் பாதுகாப்பையும், ஏழை விவசாயிகளின் இன்றைய உண்மை நிலைமை யும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார். இது நமக்கு மகிழ்ச்சியளித்தாலும் உலக வேளாண் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தில் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்தாக மற்ற நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. வேளாண் துறைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டு உணவுப் பொருள் ஏற்றுமதி மேற்கொள்ளுதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். ஆனால் வளர்ந்து வரும் நாடுகள் உணவுத் தட்டுபாட்டில் மேலும் சிக்கிக் கொள்ளும் என்பது தென் அமெரிக்கா, கியூபா, நிகரகுவா, ஈக்வடார் ஆகிய நாடுகளின் ஒத்த கருத்தாக இம்மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தியா, வியட்நாம், சீனா மற்றும் 10 நாடு களில் உணவு நிலை ஓரளவு சீராக இருந்தாலும் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறைஏற்படும் என்ற அச்சம் இருப்பதால் உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு கணிசமான அளவு தடை விதித்துள்ளன. ஏற்றுமதிக்கு தடை விதிப்பதால் மட்டுமே நிலைமை சீராகிவிடுமா என்றகேள்வி இத்தருணத்தில் எழுவது நியாயமே. வளர்ந்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேளாண் தொழில் முற்றிலும் பாதுகாக்கப் படவேண்டும். விளைநிலங்களின் அளவு எக் காரணம் கொண்டும் குறைய அனுமதிக்கக் கூடாது. அதேபோல் மக்கள் தொகை பெருகு வதை கட்டுப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட வேண்டும். மேற்கூறிய தீர்மானங்கள் இந்தியாவிற்கு இன்றைய அவசரத் தேவையாகும்.
இத்தருணத்தில் நாம் மற்றொரு உலகளாவிய பெரும் பிரச்சனையை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டியள்ளது. அதாவது, பருவநிலையிலும் காலநிலையிலும் ஏற்படும் மாற்றம் உலக வேளாண்துறையிலும், உணவுப் பொருள் உற்பத்தியிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இப்பிரச்சனை குறித்தும் ரோம் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது. சமீப காலமாக மழையின் அளவிலும், காலநிலையிலும் ஏற்பட்டு வரும் மாற்றம் நமக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. வரும் காலங்களில் இப்பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இயற்கையின் தன்மையை சலனப்படுத்தாமல், பசுமையைக்காத்து, நீர் ஆதாரங்களை சிறப்புடன் நிர்வகித்து, இயற்கை சார்ந்த வாழ்வு முறைக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நிலைமை சீர்படும் என்றும் இம்மாநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Monday, November 10, 2008

பயோ எரிபொருளும் சோளம் உற்பத்தியும்


இன்றைக்கு உலகின் பெருமளவில் பேசப்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று எரிபொருட்கள் தொடர்பான சர்ச்சைகள். அனு ஆற்றலோ, பெட்ரோலிய குழாய் திட்டமோ, எரிவாயு திட்டப்பணியோ, இன்றைக்கு சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தும் இந்த எரிபொருள் சர்ச்சை காலப்போக்கில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை நழுவிக்கொண்டிருக்கிறது நம்மில் பலருக்கு. இந்த நிலையில் வளர்ந்த முன்னேறிய நாடுகள் பல மாற்று எரிபொருள் என்ற திசையில் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகளையும் வளர்ச்சியயும் ஊக்குவித்ததோடு, அவற்றில் பயன்பாட்டையும் படிப்படியாக அதிகரித்து சுகவாசிகளாக சிரித்துக்கொண்டுள்ளன. வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் அல்லது வளரும் நாடுகளோ இன்றைக்கு செல்வந்த நாடுகளின் பிடியில் உள்ள எண்ணெய் வளங்களின் சந்தை பேரத்தில் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை இழந்துகொண்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல் வாசத்தோடு கொஞ்சம் அரசியல் வாசமும் வீசுவதுபோல தோன்றுகிறதா, சரி விடயத்திற்கு வருவோம். ஆக இன்றைக்கு எரிபொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் தோண்டத்தோண்ட சுரக்கும் கேணிபோன்ற நிலை கடந்து, சரக்கு தீர்ந்தது அடுத்த கிணறை பார் என்ற நிலைக்கு ஆளாகிக்கொண்டுள்ளன. ஒரு விதை ஊன்ற ஐம்பதாய், எழுபதாய், நூறாய் பலன் தரும் பயிர்கள் போல் இந்த பெட்ரோலும், டீசலும் இருந்தால் இன்றைக்கு பெட்ரோல் பயிர்கள் நிறைந்த பரப்பாகத்தான் பூமி காட்சியளித்திருக்கும். கற்பனையில் மட்டுமே சாத்தியமாகும் பெட்ரோல் பயிர் உண்மையில் சாத்தியம் என்றால்..?? அட போப்பா கிண்டலடிக்கத்தான் இவ்வளவு நேரம் பேசினது என்று சலிக்கவேண்டாம். உண்மையில் பெட்ரோல் விளையும் பயிர்கள் உண்டு நேயர்களே. ஓ, என்ன மறுபடியும் மூலிக பெட்ரோல் கதையா? என்கிறீர்களா. இல்லை, இல்லை. உண்மையில் பெட்ரோல் விளையும் பயிர்கள் உண்டு. ஆனால் அப்பயிர்கள் பெட்ரோல் என்ற பெயரோடு அழைக்கப்படுவதுமில்லை, அவை பெட்ரோலை தருவதுமில்லை. விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், பயிர்கள் மூலம் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் தயாரிப்பது சாத்தியம் என்பதை இன்றைக்கு பல நாடுகள் ஏற்றுக்கொண்டதோடு, அவற்றை பரவலான அளவில் பயன்படுத்தவும் தொடங்கியுள்ளன. பயோடீசல், எத்தனால் ஆகியவை சோளம், கரும்பு போன்ற பயிர்களிலிருந்து தயாரிக்கப்பட்டு செல்வந்த நாடுகள் பலவற்றில் பயனபடுத்தப்படு வெற்றிகரமான, லாபகரமான எரிபொருளாக மாறியுள்ளன.
வடமேற்கு சீனாவின் சோள விவசாயிகளுக்கு சுன் ஜியாங்ஹொங்கின் சோளத் தட்டுகள், சோளக் கதிர்களின் மீதான் ஆர்வம் மட்டில் வியப்பு மேலிடுகிறது. எதற்காக இந்த நபர் நம்மிடம் வந்து சோள அறுவடைக்கு பின்னர் பயனில்லாமல் வீசி எறியப்படும் தண்டுகள் அல்லது சோளத் தட்டுகளை கேட்கிறார் என்ற கேள்விகள் அவர்களுக்கு உண்டு. வழமையாக கால்நடைத் தீவனமாக அல்லது வெற்றாக எரியூட்டப்பட்டுவிடுகிற இந்த சோளத் தட்டுகளை பயன்படுத்தி எத்தனால் எனப்படும் எரிபொருளை தயாரிக்கும் ஒரு ஆலையை நிறுவவேண்டும் என்பதுதான் சுன் ஜியாங்ஹொங்கின் எண்ணம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? எத்தனால் மற்றும் பயோடீசல் எரிபொருள் பயன்பாட்டிலும், சந்தையிலும் ஒரு புரட்சியே செய்யும் அளவுக்கு உலகின் எரிபொருள் தேவை இருக்கிறது. பயனில்லாதது என்று தூக்கியெறிப்பட்ட, கொளுத்து குளிர் காயப்பட்ட இது போன்ற பயிர்களின் மிச்சங்களில் எரிபொருள் தயாரித்து வளரும் நாடுகள் தங்களது தேவையை நிறைவு செய்ய முயற்சிக்கலாம் என்பது மகிழ்ச்சியான சேதியல்லவா. ஆனால் இதெல்லாம் எளிதில் நிகழ்ந்துவிடக்கூடிய மாய வித்தை அல்ல. சவால்கள் நிறைந்த பணியாகும்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால், ஒரு டன் எத்தனால் தயாரிக்க நான்கு டன் சோளத் தட்டுகள் அல்லது தண்டுகள் தேவை. வீணாகப்போகும் இவற்றை சேகரிப்பதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதே சுன் ஜியாங்ஹொங்கின் அனுபவம். இது சீனா போன்ற நாடுகளின் பயோடீசல், எத்தனால் ஆகிய பயோ எரிபொருள் அல்லது உயிரி எரிபொருள் துறையின் நிலையாகும்.
சீனாவில் உயிரி எரிபொருள் என்பது வேண்டுமானால் புதியதாக இருக்கலாம் ஆனால் இந்த எரிபொருளின் தயாரிப்பில் முக்கியத்துவமிக்க கிரெயின் ஃபெர்மன்டேஷன் எனப்படும் நுண்ணுயிர் பதப்பாடு முறை சீனாவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பரிச்சயமான ஒன்று என்கிறார் சீன வேளான் பொறியியல் கழகத்தின் தலைவர் ஷு மிங்.
பயோ எரிபொருள் என்று பார்த்தால் அதிகமாக பயன்பாட்டில் இருப்பது எத்தனால் ஆகும். இது பெரும்பாலும் சோளத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர சோயாபீன்ஸிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பயோ டீசல் அமெரிக்கா, பிரேசில் நாடுகளில் அதிகம். கரும்பு உற்பத்தி அதிகம் உள்ள பிரேசில் இந்த பயோ எரிபொருள் துறையில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. அமெரிக்காவில் இந்த பயோ எரிபொருள் துறை இன்றைக்கு நேற்றல்ல, கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது. அப்போதைக்கு தேவைக்கதிகமான விளைச்சல், தானியங்கள் கூடுதலாக உள்ள நிலையில் உபரியானதை வீணாக்காமலிருக்க இந்த எத்தனால், பயோ டீசல் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் 2000ம் ஆண்டில் முற்பகுதியில் உலக பெட்ரோல் டீசல் விலை அதிகாகிக்கொண்டிருந்தபோது, மாற்று எரிபொருள் தேவை என்ற நிலையில், இந்த பயோ எரிபொருட்கள் மாற்று எரிபொருளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. புதிய ஆய்வுகள் இந்த பயோ எரிபொருட்கள் முன்பு நினைத்ததைவிட அதிகமான பயன் தருபவை, உற்பத்தித் திறன் கொண்டவை என்று வலியுறுத்துகின்றன.
அன்மையில் பெய்சிங்கில் சிங்ஹுவா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநில வேளாண்துறை உள்ளிட்ட சில துறைகளும், நிறுவனங்களும் ஏற்பாடு செய்த உலக பயோ எரிபொருள் ஆய்வரங்க கூட்டமர்வில் சீனாவின் மிகப்பெரிய அளவிலான வேளான் உற்பத்தி பொருட்கள் பயோ எரிபொருளாக மாற்றப்படும் சாத்தியங்களை உறுதிபடுத்துவதாக சீன தேசிய உயிரி மேம்பாட்டு மைய்த்தின் உயிரி தொழிநுட்பத்துறை சியு ஹொங்வேய் கருத்து தெரிவித்துள்ளார். இன்றைக்கு சீனாவின் ஹேனான், அன் ஹூய் ஹெய்லோங்சியாங், லியாவ்நிங், சிலின் ஆகிய மாநிலங்களில் வழமையான பெட்ரோலுடன், எத்தனால் எனப்படும் உயிரி எரிபொருளை, பயோ எரிபொருளை கலந்து பயன்படுத்தும் முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹேனான், அன் ஹூய் ஹெய்லோங்சியாங், மற்றும் சிலின் மாநிலங்களில் உள்ள நாஙு ஆலைகளில் எத்தனால் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. சீனாவை பொறுத்த வரை பயோ எரிபொருள் உற்பத்தியை தொழிலாகக் கொண்டால் பெருமளவு லாபம் பார்க்கமுடியாது. காரணம் இங்கே பெட்ரோல் டீசல் விலை இந்தியாவிலோ அல்லது வேறு சில நாடுகளில் உள்ளது போலவோ அதிகம் இல்லை. ஆனால் அதர்காக இந்த மாற்று எரிபொருளின் ஆக்கப்பூர்வமான பலன்களை ஒதுக்கிவுட முடியுமா என்ன. அன்மையில் சென்னையில் தேசிய வேளான் அறக்கட்டளை மையத்தில் வைத்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சந்த்த்தபோது 2020ம் ஆண்டுக்குள் உணவு உற்பத்தியை தொழில்நுட்ப உதவியுடன் இருமடங்காக அதிகரிக்க விவசாயிகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தொடர்ந்து ஒரே பயிராக பயிர் செய்யாமல் சுழற்சி முறையில் பயிர்களை மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும் என்றும் இதன்காரணமாக அதிக உற்பத்தி கிடைப்பதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கும் என்றும் கூறிய குடியரசுத் தலைவர்,
நாட்டில் டீசல் எண்ணை இறக்குமதிக்காக ரூ.13 ஆயிரத்து 500 கோடி செலவாகிறது. இந்த நிலையில் பயோ-டீசல்தான் மாற்று எரிபொருள். காட்டாமணக்கில் 22 சதவீதம் எண்ணை உள்ளது. எனவே, விவசாயிகள் பயோ-டீசல் உற்பத்திக்காகவும், தங்களது வருமானத்தை பெருக்கிக்கொள்ளவும், விளைநிலங்களில் காட்டாமணக்கு பயிரிட முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசின் 2006 - 2007 திருத்த நிதியறிக்கையில் விவசாயிகளது நலன் பற்றி குறிப்பிடும்போது, எத்தனால் பெட்ரோலிற்கு மாற்றாகவும், பயோ டீசல், டீசலிற்கு மாற்றாகவும் பயன்படுகிறது. முதல் கட்டமாக பெட்ரோலுடன் எத்தனால் 5 விழுக்காடு கட்டாயமாகக் கலந்து பயன்படுத்த நடுவணரசு ஆணையிட்டுள்ளது. எனவே, அத்தனை சக்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்க்கரைச் சோளம், சர்க்கரைக் கிழங்கு மூலமும் எத்தனால் தயாரிக்கலாம் என்பதனால் இவைகளை பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படும் என்றும் ஜெட்ரோப்பா எனப்படும் காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயோ டீசலாக, டீசலிற்கு மாற்றாக பயன்படும் என்பதால் தரிசு நிலங்களில் காட்டாமணக்கு விளைவிக்க ஊக்குவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக பயோ எரிபொருளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் உலகின் இரு பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஊக்கமுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்றைக்கு உலக பொருளாதார வளர்ச்சியில் தங்களது அசுர வேக வளர்ச்சியால் மற்ற எல்லா நாடுகளையும் வாயைப் பிளக்கச் செய்யும் இந்த இரு பெரும் நாடுகள் முனைப்புடன் செயல்பட்டால், வேளான்மையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடுகளின் கையில் பயோ எரிபொருட்களின் எதிர்காலம் என்பதை மாற்ற இயலாது.

Friday, November 7, 2008

பொருளாதார தாராளவாதமும் மக்கள் உரிமைகளும்

1. தாராளவாதத்தின் இரண்டு முகங்கள்: ஒரு கண்ணோட்டம்

கடந்த இரு தசாப்தங்களாக நவதாராளவாதம் உலகளாவியரீதியில் பரவி வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கின் அடிப்படையாக அமைந்திருப்பது சுதந்திரவர்த்தகக் கொள்கையும் தனியுடைமையாக்கலுமாகும். அரசியல் தாராளவாதத்தின் முக்கிய விழுமியங்களாகக் கருதப்படும் தனிமனித சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவற்றிற்கும் இந்தப் பொருளாதார அடிப்படைக் கொள்கைக்குமிடையே முரண்பாடுகள் உண்டு. அதாவது லிபரலிசத்தின் அரசியல் ஜனநாயக இலட்சியங்கள் அதன் பொருளாதார இலட்சியங்களுடன் முரண்படுகின்றன.
தாராளவாதத்தின் உலகளாவிய எழுச்சிக் காலகட்டத்தில் - அதாவது கடந்த இரு தசாப்தங்களில் - மனித உரிமைமீறல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு ஒரு முக்கிய காரணம் பல தெற்கத்திய நாடுகளில் பொருளாதார தாராளவாதக் கொள்கைகளின் அமுலாக்கல் தொழிலாளர்களினதும் பொதுமக்களினதும் அரசியல் உரிமைகளை நசுக்கிவருவதே ஆகும். தெற்கத்திய நாடுகளில் மட்டுமல்ல கிழக்கு ஐரோப்பாவிலும் இந்தநிலையைக் காணக்கூடியதாகவுள்ளது.
லிபரலிசத்தின் பொருளாதாரத்திற்கும் அரசியலுக்குமிடையிலான இந்த முரண்பாடு வரலாற்றுரீதியானது. அரசியல் ஜனநாயகமாக்கலின் வளர்ச்சியை ஏற்படுத்த சந்தைப் பொருளாதாரத்தை அரசு பலவகையில் நெறிப்படுத்தல் கட்டுப்படுத்தல் அவசியம் என்பதை மேற்கு ஐரோப்பாவின் வரலாறு நன்கு காட்டுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரித்தானியாவின் அரசியல் பொருளாதார போக்குகளை ஆய்ந்தறிந்த கார்ல் பொலன்யி கூறுவதுபோல் அந்நாட்டின் முதலாளித்துவ அபிவிருத்தியின் வரலாறு ஒரு இரட்டை இயக்கப்பாட்டினைக் கொண்டிருந்தது. ஒருபுறம் சந்தை சக்திகள் பரவி எழுந்தன. இவை பண்டமயமாக்கலை முன்தள்ளின. மறுபுறம் மனித உழைப்புச்சக்தியும் இயற்கை வளங்களும் பண்டமயமாக்கப்படும் இந்தப் போக்கிற்குச் சமூகத்திடமிருந்து பலவிதமான எதிர்ப்புக்கள் தோன்றின. தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகளைக் கோரினர். ஆளும் வர்க்கத்தினால் மூலதனத்திற்கும் உழைப்பிற்குமிடையிலான முரண்பாட்டைச் சந்தைச்சக்திகளிடம் மட்டுமே விட்டுவிட முடியவில்லை. தொழிற்சங்கங்கள் வேலைநேரம், கூலி, வேலைத்தள சூழல் போன்றவற்றைப் பிரதான போராட்ட விடயங்களாக்கின. இந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவுகளில் ஒன்று உழைப்புச்சக்திச் சந்தையின் நெறிப்படுத்தலாகும். அரசினால் பலவிதமான சட்டங்களும் விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன. இதேபோன்று பொதுமக்கள் அமைப்புக்கள், வறுமை குறைப்பு, சூழல் பாதுகாப்பு போன்றவற்றிற்காகப் போராடிச் சில வெற்றிகளைப் பெற்றன. இந்தப் போராட்டங்கள் இன்றும் தொடருகின்றன. நிலம் பண்டமயமாக்கப்பட்டபோதும் சூழல் பாதுகாப்புச் சட்டங்களும் விதிகளும் நிலச்சந்தையை சிலவழிகளில் நெறிப்படுத்த உதவுகின்றன.
சகல விருத்தி பெற்ற முதலாளித்துவ நாடுகளின் வரலாற்றிலும் முரண்பாடான இந்த இரட்டை இயக்கப்பாட்டினைக் காணலாம். இதன் செயற்பாடுகளினால் நடைமுறை முதலாளித்துவ பொருளியல் பாடநூலில் முன்வைக்கப்படும் தூயசந்தைப் போட்டி பொருளாதார மாதிரியைவிட பலவகையில் வேறுபட்டிருக்கிறது. நிறுவனமயமாக்கப்பட்டுள்ள மனிதஉரிமைகள், தொழிற்சங்கங்கள், சூழல் இயக்கங்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள் போன்றவை முதலாளித்துவத்தின் ஜனநாயக முகத்தினைச் சார்ந்தவை. இவை அதே முதலாளித்துவத்தின் மற்றைய முகத்தின் அம்சங்களான சந்தைப்போட்டி, தனியுடைமை லாபநோக்கு போன்றவற்றுடன் முரண்படுகின்றன. இறுதி ஆய்வில் இந்த முரண்பாட்டிற்கு முதலாளித்துவ அமைப்பிற்குள் தீர்வுகாணமுடியாது. ஆயினும் மக்களுரிமைகளின் குறைந்தபட்ச நிறுவனமயமாக்கலின் நடைமுறை முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. விருத்தியடைந்த முதலாளித்துவ அமைப்புகளின் இந்த வரலாற்றம்சம் இன்று முதலாளித்துவம் விருத்திபெறும் நாடுகளின் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சில பாடங்களைத் தருகின்றது. சந்தைச்சக்திகளின் பாதகமான தாக்கங்களுக்கெதிராக அணிதிரண்டு போராடுவதன்மூலமே குறைந்தபட்ச உரிமைகளையாயினும் வென்றெடுக்க முடியும். அதேவேளை இந்த உரிமைகளின் நிரந்தரமான நிறுவனமயமாக்கலையும் நியாயமான செயலாக்கலையும் உத்தரவாதப்படுத்த தொடர்ச்சியான வெகுஜன இயக்கங்களும் அவசியம்.

2. இன்று நாம் எதிர்நோக்கும் சவால்

மூலதனத்தின் சர்வதேச மயமாக்கல் இதை இன்று பூகோள மயமாக்கல் - புடழடியடணையவழைn - என அழைக்கிறார்கள். முன்னெப்போதையும்விட பரந்து ஆழ்ந்து நகரும் காலமிது. இந்தக் காலகட்டத்தில் பொருளாதார தாராளமயமாக்கல் பல தேசியப் பொருளாதாரங்களைப் பாதகமாகத் தாக்கியுள்ளது. சமீப காலங்களில் ஜப்பானையும் தென்கிழக்காசிய நாடுகளையும் தாக்கிய பொருளாதார நெருக்கடிகள் உலகப்பொருளாதார அமைப்பின் நெறிகெட்ட இயக்கத்தன்மைகளை நன்கு வெளிப்படுத்தின. ஆசியநாடுகளின் நெருக்கடிகள் தொடரும் அதேவேளை கிழக்கு ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் நெருக்கடிகள் ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கக்கண்டமும் பல பாதகமான விளைவுகளை அனுபவிக்கிறது.
மேலும் குறிப்பாகக் கூறுவதாயின் பல்வேறு வறிய நாடுகளில் வேலையில்லாதோர் தொகை அதிகரித்துள்ளது. அரசாங்கங்கள் சமூகவிருத்திக்கான செலவினத்தைக் குறைத்ததால் பள்ளிக்கூடம் செல்லமுடியாத குழந்தைகளின் தொகையும் பொதுமக்களின் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன. கல்வி, சுகாதாரத்துறைகளின் தனியுடைமையாக்கலினால் கணிசமானோர் இந்த வசதிகளிலிருந்து நிரந்தரமாக வெளிவாரிப்படுத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் உரிமைப்போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. விலைவாசியேற்றம் தொழிலாளர்களை மட்டுமல்ல விவசாயிகளையும் பாதிக்கிறது.
இன்று உழைக்கும் மக்கள் தமது உரித்துடைமைகள் பலவீனமாக்கப்படுவதைத் தடுக்க முடியாத நிலையிலுள்ளனர். ஒருபுறம் அடிப்படைச் சமூகசேவைகளுக்கான அரசசெலவு குறைக்கப்படுகிறது. இச்சேவைகள் படிப்படியாக தனியார்துறைமயமாக்கப்படுகின்றன. மறுபுறம் உழைப்பாளிகளின் ஊதியம் போதியளவு வளரவில்லை. தரமான சமூகசேவைகளை விலைகொடுத்து வாங்குமளவிற்கு பெரும்பாலான தொழிலாளரிடம் கொள்வனவு சக்தியில்லை. இதனால் இவர்கள் படிப்படியாகத் தரம் குறைந்துகொண்டிருக்கும் அரச சமூகசேவை நிலையங்களிடம் செல்கிறார்கள். அரசினால் வழங்கப்படும் சமூகசேவைகளின் தரம் உயர்த்தப்படாவிட்டால் இந்த மக்களின் எதிர்கால சந்ததிகளின் கல்வி, சுகாதார நலன்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும். நகர்ப்புறத் தொழிலாளர்கள், கிராமப்புற வறிய விவசாயிகள், கூலியுழைப்பாளர்கள் (தோட்டத்தொழிலாளர்கள் உட்பட) போன்ற சமூகப்பிரிவுகளும் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வாழும் மக்களும் தரம்குறைந்த சமூகசேவைகளின் நீண்டகால பாதகமான விளைவுகளை அனுபவிக்கிறார்கள்.
இத்தகைய சமூக அரசியல் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையிலும் சர்வதேச நிதிநிறுவனங்களும் மேற்கத்தைய அரசியல் தலைமைகளும் பொருளாதார தாராளவாதத்திற்கு தொடர்ந்தும் புகழ்பாடுகின்றன. இந்தப் பிரச்சினைகள் தற்காலிகமானவை, தவிர்க்கமுடியாதவை என சர்வதேசநாணய நிதியமும் உலகவங்கியும் கூறுகின்றன. இதுதான் நீண்டகால அபிவிருத்திக்கு சமூகம் கொடுக்கும் விலை. ஆனால் இந்த விலையைவிட வரப்போகும் சமூகநன்மைகளின் பெறுமதி அதிகமானதென அவை ஆறுதல் கூறுகின்றன. ஆனால் எனது அபிப்பிராயத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு இப்போ தீர்வு கிடைக்காவிடில் சமூகத்தின் கணிசமானோர் நீண்டகாலத்தில் பெரிதும் பாதிக்கப்படப்போகின்றனர்.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இன்றைய பொருளாதார தாராளவாதிகளுக்கான பதிலை விருத்திபெற்ற முதலாளித்துவநாடுகளின் வரலாறு கொடுக்கிறது. அந்த வரலாற்றின் இரட்டை இயக்கப்பாட்டினை நாம் புரிந்துகொள்ளல் இன்றைய சவாலை எதிர்நோக்க ஓரளவு உதவும். இங்கு நான் குறிப்பிட்ட சமூக அரசியல் பிரச்சினைகளை மற்றைய பல பிரச்சினைகளுடன் இணைத்துப் பார்த்தலும் அவசியமாகும். இப்படி அணுகும்போது நாடுகளிற்கிடையிலான விசேட வேறுபாடுகள் முக்கியத்துவம் அடைகின்றன. உதாரணமாக இலங்கையை எடுத்துக்கொள்வோம். இங்கு குறிப்பிட்ட பிரச்சினைகள் எல்லாம் இருக்கும் அதேவேளை இலங்கையில் இன்னும் தீர்த்துவைக்கப்படாத தேசியஇனப்பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இராணுவமயமாக்கப்பட்டுள்ள இப்பிரச்சினை மற்றைய பிரச்சினைகளை அரசியல்ரீதியில் பின்தள்ளியுள்ளது. ஆயினும் மற்றைய பிரச்சினைகளும் தொடர்ந்து ஆழமாகிவருகின்றன. அதுமட்டுமல்ல அரசின் உள்நாட்டு யுத்தக்கொள்கையும் நடைமுறையும் தமிழ்மக்களை பெரிதும் பாதிக்கும் அதேவேளை சகலமக்களினதும் அடிப்படை சுதந்திரங்களையும் பாதிக்கின்றது. தென்னிலங்கை அரசியலையும் துப்பாக்கிக் கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது. வன்செயல்களற்ற ஒரு உள்@ர்த் தேர்தலைக்கூட அரசாங்கத்தினாலும் பிரதான எதிர்க்கட்சியான ரு.N.P.யினாலும் நடத்த முடியவில்லை.
இலங்கைபூராவிலும் மக்கள் உரிமைகள் மீறப்பட்டுவரும் இந்த நிலையில் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள், உரிமைமீறல்களை மேலும் வலுப்படுத்துகின்றன. ஆனால் தொழிலாளர் உரிமைகளுக்கான சமூகநல உத்தரவாதங்களுக்கான போராட்டங்கள் மற்றைய ஜனநாயகப் போராட்டங்களுக்கு ஒரு பலமான ஆதர்ஷத்தையும் நேரடி உந்துதலையும் வழங்கவல்லன. தேசியஇனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு இல்லாவிடில் உள்நாட்டு யுத்தம் தொடரும். இது தொடர்வது பொதுவான உரிமை மறுப்புகளுக்கு உதவுகிறது. இங்கு நாம் இலங்கையின் தெற்கில் வாழும் மக்களின் உரிமைப்போராட்டத்திற்கும் வடகிழக்கில் வாழும் மக்களின் உரிமைப்போராட்டத்திற்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பினைக் காண்கிறோம். தமிழ்மக்களின் இனவிடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டினை வலுப்படுத்த இந்தத் தொடர்பு பயன்படும். அதேநேரம் தெற்கில் இடம்பெறும் மக்களுரிமைப் போராட்டங்கள் வடகிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஆதர்ஷத்தை வழங்கும். அங்கே ஜனநாயகத்திற்கான போராட்ட நிலைமைகள் இராணுவமயப்படுத்தலாலும் துப்பாக்கிக் கலாச்சாரத்தாலும் நசுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய உலகின் அரசியல் பொருளாதாரப் போக்குகளின் உள்நாட்டுத்தாக்கங்களையும் இவற்றிற்கெதிராக தொழிலாளர்களும் பொதுமக்களும் எடுக்கும் முயற்சிகளையும் கணக்கிலெடுக்காது இனவிடுதலைக்கு வியாக்கியானம் கொடுக்க முடியாது. இந்தப்பரிமாணத்தை உள்வாங்குதல் சகல இனவிடுதலைப்போராட்டங்களின் கடமை. இந்த உள்வாங்கல் இனஎல்லைக்கோடுகளைக் கடந்து செயற்படும் பிரச்சினைகளுக்கும் இனரீதியாகத் தாக்கும் பிரச்சினைகளுக்கும் இடையிலான உறவுகளைப் புரிந்துகொள்ள உதவும். அந்தப்புரிந்துணர்வு பல மட்டங்களில் இடம்பெறும் உரிமைப்போராட்டங்களுக்கிடையிலான தொடர்புகளைப்பலப்படுத்த உதவும்.

3. முடிவுரை

பொருளாதார தாராளவாதத்தின் நடைமுறைகள் மக்களுரிமைகளை மறுப்பதையும் அதை எதிர்த்து அணிதிரண்ட தொழிலாளர் மற்றும் பொதுமக்கள் அமைப்புக்களுக்கூடாக போராட்டங்கள் நடத்தவேண்டிய அவசியத்தையும் பற்றிப் பார்த்தோம். இன்றையநிலையில் இந்தப் போராட்டங்களை நீண்டகாலநோக்கில் அணுகி அவற்றை மக்கள் ஜனநாயகப் புரட்சிமீட்டெடுப்பின் அம்சங்களாக்குவது அடிப்படைச் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவும். மக்கள் ஜனநாயகப்புரட்சியின் மீட்டெடுப்பிற்கு அப்புரட்சிபற்றிய மீள்சிந்திப்பு அவசியமாகும். இது தனிமனிதர்களால் அன்றி போராட்ட இயக்கங்களின் கூட்டுமுயற்சிக்கூடாக செயற்படுத்துதலே சரியான நடைமுறையாக எனக்குப்படுகிறது. இந்தக்கூட்டு முயற்சியும் போராட்டங்களும் இன்றைய முதலாளித்துவத்திற்கு அப்பால் ஒரு புதிய சமூகஅமைப்பு பற்றிய கற்பிதத்திற்கு அவசியமாகும். அதாவது சோசலிசம்பற்றிய புதிய கற்பிதத்திற்கான வழிமுறையாக இது அமைகிறது.

Thursday, October 30, 2008

இலங்கையின் மிகமோசமான பணவீக்கத்துக்கு

இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு இலங்கை அரசு தெரிவிப்பதுபோல எண்ணெய் இறக்குமதிக்கு அதிக நிதி பயன்படுத்துவது காரணமல்ல எனத் தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் சிறந்த பொருளாதாரக் கொள்கைகள் மூலம் உள்ளூர் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையில் 2006 முதல் 2007 வரையான காலப்பகுதிக்குரிய பணவீக்க நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் செல்வாக்கிற்கு உட்படாத வெளிக்காரணிகளான எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவையே பணவீக்கத்திற்கு காரணம் என அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றபோதிலும் இவ்விவகாரத்துக்கு இந்த விளக்கம் போதுமானதல்ல என அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.எண்ணெய் விலைஅதிகரிப்பு இந்தப் பிராந்தியத்தின் சகல நாடுகளுக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ள போதிலும், ஏனைய நாடுகளை விட இலங்கையில் பணவீக்கம் அதிகமாகவுள்ளமை, இதற்கு எண்ணெய்விலை காரணமன்று என்பதைப் புலப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பிட்ட ஆய்வின் முடிவில் இலங்கையின் பணவீக்க அதிகரிப்பிற்கு உள்நாட்டுக் காரணிகளே அடிப்படை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் உள்ளூர் பணவீக்கத்தைத் தீர்மானிப்பதில் எண்ணெய் விலை போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றாததால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் கொள்கைகள் மிக முக்கியமானவையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் நுகர்வோர் விலையில் 29 வீதமாகவும் பணவீக்கத்தில் 32 வீதமாகவும், மாத்திரமே எண்ணெய் விலையின் தாக்கம் காணப்படுகின்றது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக உள்ளூர் காரணிகளே இலங்கையில் பணவீக்க அதிகரிப்பிற்கு காரணம் என்பது உறுதியாவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, October 28, 2008

பண்டம்

நுகர்விற்கு உட்படுத்தப்படகூடியதும், நுகருவதால் பயன்பாட்டினை அதிகரிக்ககூடியதும் இவை காரணமாக சந்தையில் ஒரு குறிப்பிட்ட விலையில் விற்கப்படகூடியதாகவுள்ள பொருளோ (object) சேவையோ பொருளியலில் பண்டம் (Good) எனும் பொதுப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மதிப்பு உள்ள மகிழுணர்வு போன்ற துல்லியமாக அளவிடமிட முடியாதவற்றையும் கூட மெய்யியலில் பண்டமாகவே கருதுவர்.
கணக்கீடு மற்றும் பேரின பொருளியலில் பண்டங்கள் எனப்படுவது கொள்வனவு ஒன்றின்போது விற்பனையாளரிடமிருந்து வாடிக்கையாளருக்கு உரிமம் மாற்றலாகக் கூடிய தன்மையினைக் கொண்ட ஒர் பௌதீக உற்பத்தியை மட்டும் குறிக்கும் சேவைகள் உள்ளடக்கப்படாது.

பண்டங்களின் வகைகள்
பண்டங்களின் வகைகள்
கூட்டுரிமைப் பண்டம் (social good) - தனியார் உரிமப் பண்டம் - பொதுப் பண்டம் - common-pool resource - குழுவுரிமைப் பண்டம் - மக்களுரிமைப் பண்டம்
போட்டிப் பண்டம் மற்றும் விலக்கமுடியாப் பண்டம்
இணைப்புப் பண்டம் எதிர் பிரதியீட்டுப் பண்டம்
இலவசப் பண்டம் எதிர் அருமைப் பண்டம், positional good
durable good - non-durable good - இடைப் பண்டம் (producer good) - final good - நுகர்வுப் பண்டம் - மூலதனப் பண்டம்.இழிவுப் பண்டம் - இன்றியமையாப் பண்டம் - ஆடம்பரப் பண்டம் - வெப்லன் பண்டம் - கிப்பன் பண்டம் - superior goodதேடு பண்டம் - (post-)experience good - merit good - credence good - demerit good

இணைப்புப் பண்டம்

இணைப்புப்பண்டம் அல்லது நிரப்பிப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி தனித்தல்லாது இன்னொரு பண்டத்துடன் இணைத்து நுகரப்படும் பண்டமாகும்.
பண்டங்கள் அ, ஆ ஆனது இணைப்புப்பண்டங்களாயின், அ வினது நுகர்வு அதிகரிக்க பண்டம் ;;ஆ வின் நுகர்வும் இணைந்து அதிகரிக்கும்.
உ-ம்: கமரா - பிலிம்ரோல், துவக்கு - தோட்டா, கார்பயணம் - பெற்றொல்
வலக்கால் சப்பாத்து மற்றும் இடக்கால் சப்பாத்துக்கள் முழுமையான இணைப்புப்பண்டதிற்கு உதாரணமாகும். பிரதியீட்டுப்பண்டமானது இணைப்புப்பண்டதிற்கு எதிர்நடத்தையினைக் காண்பிக்கும்.

பிரதியீட்டுப் பண்டம்


பிரதியீட்டுப் பண்டம் எனப்படுவது பொருளியலின்படி ஒரு பண்டத்திற்குப் பதிலீடாக நுகரப்படக்கூடிய வேறொரு பண்டமாகும்.
இவ்விரு பண்டங்களும் ஒரேவகையான பயன்பாட்டினைக் கொண்டிருக்கும் அத்துடன் ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றினையே நுகரவேண்டியிருக்கும். இவ்வகையான பண்டத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு வெண்ணெயும், வெண்ணெய் போன்ற மார்ஜரிக் காடி (புளிமம்) கொண்ட மார்ஜரினும் ஆகும்.
இவ்விரு பண்டங்களுக்கான கேள்விகள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது இங்கு ஒரு பொருளின் விலை அதிகரிக்குமாயின் அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி அதிகரிக்கும் மறுபக்கத்தே பொருளின் விலை குறையும்போது அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி குறையும் நடத்தையைக் காண்பிக்கும்.
எ.கா: சீனி, சர்க்கரை மற்றும் சீடி, கசட்
இணைப்புப் பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையைக் காண்பிக்கும்

இலவசப் பண்டம்

இலவசப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி கிடப்பருமையற்ற பண்டம் ஆகும். இலவசப் பண்டங்கள் உற்பத்தி செலவற்றவை, விலை பெறாது, பரந்தளவு காணப்படும், நேரடியாக நுகர்விற்கு உட்படுத்தப்படும், நுகர்வில் போட்டி காணப்படாது. இப் பண்டங்களுக்கானசந்தர்ப்பச்செலவு பூச்சியமாகும்.
உ-ம்: மழைநீர், காற்று, சூரியஓளி, சட்டக் கட்டுபாடற்ற அறிவுசார் பொருட்கள், சிந்தனைகள்
கொளவனவின்போது இலவசமாகக் கிடைக்கும் பண்டங்கள் அதாவது பூச்சிய விலைக்குக் கிடைக்கும் பண்டங்கள் எல்லாம் பொருளியலில் இலவசப்பண்டமாகாது. காரணம் இவற்றின் உற்பத்திக்கு கிடைப்பருமையான வளங்கள் உபயோகப்பட்டிருக்கும்.
இலவசப்பண்டமாக இருப்பவை கிடப்பருமை காரணமாக பொருளாதார பண்டமாக மாறும் சாத்தியமுள்ளது.

மூலதனப் பண்டம்

பொருளியலில் மூலதனத்தை பெருக்குவதில் அல்லது உற்பத்தி செய்வதில் ஈடுபடுத்தப்படும் பண்டங்கள் மூலதனப்பண்டங்கள்(Capital good) எனப்படும்.

இழிவுப் பண்டம்


பௌதீக வாழ்க்கை தரத்தை பேணுவதற்காக குறைந்த வருமானம் பெறுபவர்களால் விருப்பமின்றி நுகர்கின்ற தரக்குறைவான பண்டங்கள் பொருளியலில் இழிவுப்பண்டம் எனப்படும்.
உ+ம்: பீடி,போலிநகை
தனிநபர் வருமான அதிகரிப்புடன் இழிவுப்பண்டத்திற்கான கேள்வியும் அதிகரிக்கும் எனினும்,மேன்மேலும் அதிகரித்தால் இவற்றுக்கான கேள்வி குறைந்து செல்வதுடன் பூச்சிய நிலையையும் அடையும்.
ஆடம்பரப்பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையினைக் காண்பிக்கும்.


ஆடம்பரப் பண்டம்

ஆடம்பரப்பண்டங்கள் எனப்படுபவை பொருளியலின்படி மக்களின் வருமான அதிகரிப்புடன் கேள்வி அதிகரிப்பு ஏற்படுகின்ற வகையைச் சார்ந்த பண்டங்கள் ஆகும். இவை அவசியமான பண்டம், இழிவுப்பண்டம் ஆகியற்றிலிருந்து மாறான நடத்தையைக் காண்பிக்கும். ஆடம்பரப் பண்டமானது உயர் வருமானக்கேள்வி நெகிழ்ச்சியினைக் காண்பிக்கும். இவ் வகையான பண்டங்கள் மக்களின் அந்தஸ்து, கௌரவம், உயர் வருமானம் ஆகியவற்றை விளம்புகின்ற சின்னமாகக் கருதப்படும். மக்களின் வருமான மட்டம் அதிகரிக்கும்போது ஆடம்பரப்பண்டங்களுக்கான் கேள்வியும் அதிகரிக்கும். எனினும் வேறுபட்ட வருமான மட்டங்களில் இவை அவசியப்பண்டமாகவோ அல்லது இழிவுப்பண்டமாகவோ மாற்றமடையலாம். அதாவது மேலைத்தேசங்களில் தொலைக்காட்சியானது அவசியப்பண்டமாகக் காணப்படும் அதே சமயத்தில் கீழைத்தேசத்தில் அவை ஆடம்பரப்பண்டமாகக் கருதப்படும்.
உ-ம் :தங்கநகைகள், சொகுசுவாகனங்கள்


கிப்பன் பண்டம்

கிப்பன் பண்டம் (Giffen good) என்பது விற்பனை விலை ஏறும்போது நுகரப்படும் அளவு மிகுதியாகும் தன்மையுடைய இழிவுப்பண்டத்தைக் குறிக்கும். கிப்பன் பண்டங்கள் அனைத்து சூழல்களிலும் இத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. இவை உலகில் இருக்க வேண்டுமென்பதுகூட இல்லை. குறிப்பிட்ட மெய்யுலகு அல்லது கருத்தளவு சூழல்களில் மட்டும் இவை இத்தன்மையைக் கொண்டிருக்கலாம்.

Saturday, October 25, 2008

இலங்கையை வறுமைப் பிடியிலிருந்து மீட்கவழி என்ன?

வறுமையானது பல பரிமாணங்களைக் கொண்டது. தங்கள் அடிப்படைத் தேவைகள் தன்னும் பூர்த்தி செய்ய முடியாத வருமானமுடையவர்கள் வறியவர்கள். அத்துடன், அத்தியாவசிய தேவைகளைப் பெற முடியாத தனிப்பட்டவர்களும் வறியவர்கள். எனவே, வறுமையானது நுகர்வுத் தேவையின் ஒரு குறைந்த தொகுதியைப் பெறக்கூடிய குடும்பமொன்றின் திறனை மையமாகக் கொண்டது. நுகர்வுத் தேவையின் குறைந்த தொகுதியைப் பெற முடியாத வருமானமுடைய குடும்பமும் வறுமைக்குரிய குடும்பமாகும்.
இலங்கையில் வறுமை பற்றிய தகவல்களைச் சேகரிக்க குடிசன மதிப்பீடும் புள்ளிவிபரத்திணைக்களத் தரவுகளுமே பெரும்பாலும் உதவுகின்றன. 1991 இற்கும் 1995 இற்கும் இடையிலான 5 வருட வறுமையானது உயர் வறுமைக்கோட்டின் பிரகாரம் 33 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறைந்த வறுமைக்கோட்டின் பிரகாரம் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, எமது நாட்டின் 1995 குடி மதிப்புத் திணைக்களத்தின் படி சனத்தொகையில் 25 சதவீதத்தினர் கடுமையான நீண்டகால வறுமையில் மூழ்கியுள்ளனர். கடுமையானதாகவும் தற்காலிகமானதான வறுமையில் 45 சதவீத்தினர் மூழ்கியுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு மொத்த உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 5.1 சதவீதமாக இருந்தபோது தலைக்குரிய மொத்த உள்ளூர் உற்பத்தி 3.9 சதவீதமாக இருந்தது. எனவே, மொத்த உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி வீதமோ அல்லது அதன் விநியோக விளைவுகளோ வறுமை மட்டத்தைக் குறைக்க முயலவில்லை. மேலும், நடைபெற்ற போர்ச்சூழல் நிலையானது மொத்த உள்ளூர் உற்பத்தியை ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 2 இலிருந்து 3 சதவீதமாக குறைத்துள்ளது. 1990 இல் குடி மதிப்பீட்டுத் திணைக்கள புள்ளிவிபரப்படி ஆள் ஒன்றுக்கு மாதத்திற்கு குறைந்த வறுமைக்கோடாக ரூ.791 இனையும் 20 சதவீத உயர்ந்த வறுமைக்கோடான ரூ.950 இனையும் பயன்படுத்தியது. மத்திய வங்கியின் மதிப்பீட்டுப் படி குறைந்த வறுமைக்கோடாக ரூ.860 இனையும் 20 சதவீத உயர்ந்த வறுமைக்கோடாக ரூ.1,032 இனையும் பயன்படுத்தியுள்ளது. 1996 இல் மத்திய வங்கி குறைந்த வறுமைக்கோடாக தலைக்குரிய கணிப்புச் சுட்டெண் 19 சதவீதத்திலும் உயர்ந்த வறுமைக்கோட்டின் படி 31 சதவீதத்திலும் மதிப்பீடு செய்துள்ளது. குறைந்த வறுமைக்கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கடுமையான வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் குறைந்த மற்ற உயர்ந்த வறுமைக்கோடுகளுக்கு இடையில் வாழ்பவர்கள் அடிக்கடி ஏற்படும் தற்காலிக வறுமையினால் பாதிக்கப்பட்டும் காணப்படுகின்றனர்.
மாவட்ட மட்டத்தில் வறுமையைக் கணிப்போமாயின் கொழும்பு மாவட்டம் மிகக்குறைந்த 19 சதவீத நுகர்வு வறுமைத் தாக்கங்களையும் மிக உயர்ந்த 74 சதவீத நகர மயமாக்கலையும் கொண்டுள்ளது. குருநாகல், இரத்தினபுரி, அநுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உயர்ந்த வறுமை மாவட்டங்களாகவும் மிகக் குறைந்த நகர மயமாக்கலையும் கொண்டிருந்தன. மிக வறிய மாவட்டங்களாக மொனராகலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் ஆகிய மாவட்டங்கள் காணப்பட்டன.
வறுமைக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1997 இல் வேலை வாய்ப்பற்றோரில் 71 சதவீதத்தினர் இளைஞர்களாகியிருந்தனர். க.பொ.த. உயர்தர வகுப்புத் தகைமையாகவுள்ள 24 சதவீதத்தினர் வேலை வாய்ப்பின்றி இருந்தனர். 1990 இல் வேலை வாய்ப்பின்றி ஆண்களை விட பெண்களே அதிகம் காணப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில் ஆண்களின் வேலை வாய்ப்பின்மை வீதம் 7 சதவீதத்திற்குக் குறைவாகவும் பெண்களின் வேலை வாய்ப்பின்மை வீதம் 12 சதவீதமாகவும் காணப்பட்டன. தொழிலாளர்களில் பலர் விவசாயிகளாக இருந்தபோதும் இவர்களில் பலர் மிக உயர்ந்த வறுமைத் தாக்கத்திற்கு (52 சதவீதம்) உள்ளாயினர். மிக வறியவர்கள் நெல் உற்பத்தியில் அல்லது பெருந்தோட்ட வேலைகளில் காணப்பட்டனர். உற்பத்தி தொழிலாளர்களுக்கிடையில் வறுமை மட்டம் 38 சதவீதமாக மிக உயர்வாக காணப்பட்டது. இன்று அரசு பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பளித்துள்ள போதும் க.பொ.த. உயர்தரத்திலுள்ள வேலையற்றோர் பலர் உள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வறுமையின் நடமாட்டம் அதிகரிக்கக் காரணம் 20 வருட போர்ச் சூழலாகும். மக்கள் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, போசாக்கு ரீதியாகப் பலத்த பாதிப்புக்குள்ளாயினர். போர் காரணமாக ஏறக்குறைய 600,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 1,72,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்தனர். வீடுகள் பல சேதமாக்கப்பட்டன. 60,000 உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் 48 சதவீதமாக பெண்கள் ஊட்டச்சத்து இன்றி காணப்பட்டனர். இந்தப் போர்ச் சூழ் நிலை கட்டுப்பாடுள்ள, கட்டுபாடற்ற பிரதேசங்களை வடக்கு, கிழக்கில் உருவாக்கியது. கட்டுபாடற்ற பிரதேசங்களென அரசு பல பொருளாதாரத் தடைகளை விதித்து வறுமை மட்டத்தை அங்கு கூட்டியுள்ள நிலை இருந்தது. இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தடைகள் பல நீக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் விவசாயம் தொழிலடிப்படையில் 40 சதவீதமாகவும் மொத்த உள்ளூர் உற்பத்தியில் 18 சதவீதமாகவும் உள்ளது. எனவே, இதனை நவீன தொழில்நுட்ப உதவியுடன் குறைந்த செலவில் உற்பத்தித் திறனைக் கூட்ட முயல வேண்டும். உயர் வேலைவாய்ப்பு வீதமானது உயர் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். உயர்ந்த வருமானங்களுடனான உயர் உற்பத்தித்திறன் மிகு தொழில்களில் நாம் நாட்டம் கொள்ள வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்தை எமது நாட்டின் செழிப்பான இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் பயன்படுத்தி முன்னேற்ற முடியும். 20 வருடமாக நிகழ்ந்த போர்ச் சூழ்நிலையில் வளங்கள் சீரழிக்கப்பட்டுள்ளன. எனினும், முன்னேற்றத்தை நாடி வளங்களைப் பயன்படுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி வீதங்கள் எமது நாட்டின் 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரையே காணப்படுகிறது. இதை மாற்றி 10 சதவீத பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடையும் இலக்காக நாம் கடைப்பிடிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரித்து வருமானங்களை உயர்த்த வேண்டும்.
அரசாங்கமானது இன்று உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் நோக்குடன் நிலக்கண்ணிகளை அகற்றியும் அத்தியாவசிய சமூக சேவைகள் உட்கட்டமைப்புகளான நீர் விநியோகம், தெருக்கள் நிர்மாணம் என்பனவற்றை சீர்திருத்துகின்றது. தனியார்துறை பங்குபற்றுதலும் இன்று ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினதும் தனியார் துறையினதும் ஒன்றிணைவுடன் நவீன தொழில்நுட்ப ரீதியான முறையில் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். சிறிய நடுத்தரமான தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் கிராமிய நகர்ப்புற குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கலாம். வறுமையை இது ஓரளவு குறைக்கமுற்படும்.
மேலும், நாம் கைத்தொழில் மயப்படுத்தலில் நாட்டம் கொள்ள வேண்டும். வளங்களை அடிப்படையாகக் கொண்டு கைத்தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இதனால் வேலையற்றோருக்கு தொழில் வாய்ப்பளிக்க முடியும். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெற முடியும். நகர அபிவிருத்தியை ஏற்படுத்த காணிகளை வழங்கி அரசு உதவ வேண்டும். நகர நீர் வழங்கல் திட்டங்களில் தனியார்துறையினரை ஈடுபடுத்த வேண்டும். நகர உட்கட்டமைப்பை ஏற்படுத்த நகராட்சி மன்றங்கள், பிரதேச சபைகளுக்கு உரிய வருவாயைத் தோற்றுவிக்க வழிவகுக்க வேண்டும்.
உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் வாழ்கைத்திறன்களை உயர்வடையச் செய்யவும் தரமான கல்வி, சுகாதார, சமூக நல வசதிகளைப் பெறவும் முயல வேண்டும். கல்வி, சுகாதார நலனுக்காக நாம் தனியார் துறையினரை ஊக்குவிக்க வேண்டும். இலங்கையில் தனியார்துறையை பொருளாதார வளர்ச்சிக்கு வசதியளிக்கும்போது பல எதிர்ப்புகள் ஏற்பட இடமுண்டு. மேலும், வறுமையைக் குறைக்க முயல வேண்டும். இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகளின் உதவியுடன் வறுமையைக் குறைக்க முயல வேண்டும். எனவே, பொருளாதார வளர்ச்சியில் கூடிய நாட்டம் தேவை.
அரசாங்கம் இன்று பாரிய பற்றாக்குறைகளைச் சுமப்பதைக் காணலாம். பற்றாக்குறையின் இலக்கு மொத்த உள்ளூர் உற்பத்தியின் 8.5 சதவீதமாகும். இந்தப் பற்றாக்குறையானது பொது படுகடனில் மொத்தத் தொகையானது அதிகரிக்க வழிவகுக்கிறது. எமது பொது கடனைப் பார்ப்பின் 2002 ஆம் ஆண்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 83,200 கடன் பெற்றுள்ளதாகவே கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான பெரிய பற்றாக்குறைகள் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து செல்லுமாயின் பொதுக்கடனானது பொருளாதார வளர்ச்சியை விஞ்சுவதால் நாம் இதைத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அரசிறைப் பற்றாக்குறை காரணமாக ஏற்றுமதி, சேவை வருமானங்களின் மூலமாக பெறும் நிதியானது, கூடுதலான பொருட்கள் சேவைகள் இறக்குமதி செய்யும் நிலையினால் பாதிக்கப்படுகிறது. மேலும், நாணயமானது விரைவாக மதிப்பிறங்கியதுடன், சென்மதி நிலுவைகளின் பதிவும் மேலதிக அழுத்தத்தைக் கொடுக்கின்றன. கடன் சேவைச் செலவுகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் படுகடனில் வட்டிச்செலவை ஓர் படிப்படியான அடிப்படையில் குறைக்க வேண்டும். உயர் வட்டி கொண்ட கடன்களை விடுத்து மிகவும் குறைந்த வீதம் வட்டி கொண்ட கடனை பரிமாற்றம் செய்ய வேண்டும்.
அரசானது அரசிறைப் பற்றாக்குறையை 2001 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதத்திலிருந்து 2002 ஆம் ஆண்டில் 8.9 சதவீதமாக குறைக்க முனைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக அரசதுறைப் படுகடன் 2002 இல் 103 சதவீதத்திலிருந்து 2006 ஆம் ஆண்டில் 81 சதவீதமாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்பட்டது. இது அரசிறை திட்டத்தின் வளர்ச்சி, குறைந்த வட்டி வீதங்கள், செலவினக் கட்டுப்பாடுகள் என்பவற்றில் தங்கியுள்ளன.
இலங்கையில் சமாதான சூழ்நிலை ஏற்பட வேண்டும். 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி சமாதானத்தை ஏற்படுத்த ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் செய்தது. இந்த யுத்த நிறுத்தம் சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முதல் முயற்சியாகும். சமாதான சூழ்நிலை இருந்தால் தான் பொருளாதார வளர்ச்சிக்குக் கூடுதலான நாட்டம் செலுத்த முடியும். எனவே, வறுமையைக் குறைப்பதாயின் சமாதான வாசலைத் திறந்துவிட வேண்டும். எமது 20 வருட யுத்த காலம் எமது வளங்களை பாதித்ததை நாம் அறிவோம். எனவே, சமாதானம் முன்னெடுக்கப்படுமாயின் முன்னேற வழியுண்டு. மோதும் நிலை மாறி நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்திற்கு முயல வேண்டும்.
உயர்ந்த உற்பத்தியாற்றல் கொண்ட கைத்தொழில் மற்றும் சேவைகள் துறை உற்பத்திக்கு கிராமிய குடித்தொகையைப் பயன்படுத்த வேண்டும். எனவே, கிராமிய அபிவிருத்திக்குப் புத்துயிரளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை நாடலாம். இலங்கையில் வறிய மக்களில் 90 சதவீதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மேலும், விவசாயத்தில் உற்பத்தி ஆக்கத்திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்திச் செலவினைக் குறைக்க வேண்டும். விவசாயமான பயிர் செய்தல், விலங்கு வளர்ப்பு, மீன்பிடி, காட்டுத்தொழில் என்பவற்றில் வளர்ச்சி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.
சிறிய, நடுத்தர அளவுக் கைத்தொழில்களுக்கு நீண்டகால கொடுகடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வங்கிகள் மூலம் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு ஏற்ற கொடு கடன்களை வழங்கி ஊக்குவிக்கலாம். மேலும், தனியார்துறைக்கு முதலீடு செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்த வேண்டும்.
கைத்தொழில்துறையில் வறியவர்களை ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். இதற்கு ஏற்ற மூலப் பொருட்களையும் மூலதனப் பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். புதிய தொழில் முயற்சிகளுக்கும் விரிவாக்கத்திற்கும் இறை ஊக்குவிப்புகள் வழங்க வேண்டும். கைத்தொழில் பேட்டைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். கைத்தொழில் முயற்சிகளுக்கு நீண்டகால கடன் வழங்கமுற்பட வேண்டும். தொழில் முயற்சிகளில் செலவுகளைக் குறைக்கும் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், நகரங்களில் கைத்தொழில் வலயங்களை நிறுவ அரசு மாத்திரமல்ல தனியார்துறைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம். சூழல், சுற்றுலா வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகுக்கும். சுற்றுலாக் கைத்தொழில் வளர்ச்சிக்கு சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காக சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட வேண்டும், பேணப்பட வேண்டும். சூழல், சுற்றுலா பாதுகாப்பு என்பன பேணப்பட வேண்டும். சுற்றுலா அபிவிருத்தியுடன் சிறிய வியாபாரங்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பான 6.6 மில்லியன் ஹெக்டயர் நிலத்தில் 28 சதவீதம் காடுகளாகும். 1.65 மில்லியன் ஹெக்டயர் பாதுகாக்கப்பட்ட காடுகளாகும். காடழிப்பும் வேகமான மண்ணரிப்பும் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனாலும் சுற்றாடல் சூழல் என்பவற்றில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை அரசானது கவனத்தில் எடுத்து சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

Friday, October 24, 2008

திறைசேரியில் வெளிநாட்டவர்களும் முதலிடலாம்: மத்திய வங்கி

மொத்த திறைசேரி உண்டியலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 10 வீதம் வரையான முதலீட்டினை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திறைசேரி உண்டியல் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

திறைசேரி சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நுழையும்பட்சத்தில், மூன்று மாத காலப்பகுதியில் இச் திறைசேரி உண்டியலின் விளைதிறன் 18.51 வீதமாகவும், ஆறு மாத காலப்பகுதியில் 18.96 வீதமாகவும், ஒரு வருடத்தில் 19 வீதமாகவும் குறைவடையும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக சந்தையில், தற்போது சில வர்த்தகர்கள் அதிகமான உண்டியல்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருபபினும், இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் அவதானங்களின் அடிப்படையிலேயே இந்த முயற்சியின் வெற்றி தங்கியிருக்கும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Wednesday, October 22, 2008

பொருளியல் என்னக்கருக்கள்

கிடைப்பருமை

எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்ய முடியும் அளவிற்கு வளங்களானது போதியளவு காணப்படாமை பொருளியலில் கிடைப்பருமை(Scarcity) எனப்படும். வேறுவிதமாக கருதினால் ஒரு குமுகத்தின் (சமூகத்தின்) இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைபருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. பொருளியலாளரான லயனல் ராபின்சன் என்பவர் கிடைப்பருமையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பொருளியலுக்கு அளித்த வரைவிலக்கணம் பின்வருமாறு:
மாற்றுப் பயன் உள்ள கிடைப்பருமையான வளங்களைக்கொண்டு தனது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் மனித நடப்புகளை ஆராயும் அறிவியலே பொருளியலாகும். (economics is a science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses.)

நுகர்வு

பொருளியலில் நுகர்வு (consumption) என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறுதற்குரிய இறுதிப் பயன்பாட்டைக் குறிக்கும்.

கெயின்ஸ் பொருளியலும் கூட்டு நுகர்வும்

கெயின்ஸ் பொருளியலில், கூட்டு நுகர்வு என்பது, மொத்தத் தனியாள் நுகர்வு ஆகும். இது, வருமானத்தில் இருந்து அல்லது, சேமிப்பில் இருந்து அல்லது கடன் வாங்கிய நிதியின் மூலம் வாங்கப்படும் நடப்பில் உற்பத்தி செய்யப்பட்ட, பண்டங்களையும் சேவைகளையும் வாங்குவதைக் குறிக்கும்.

வரலாறு

ஜான் வேனார்ட் கெயின்ஸ் (John Maynard Keynes) என்பவர் நுகர்வுச் செயற்பாடு என்னும் எண்ணக்கருவை உருவாக்கினார். இதன்படி நுகர்வு என்பது இரு பகுதிகளைக் கொண்டிருக்கிறது:
--- (Induced consumption)
--- (Autonomous consumption)

ஆய்வுகள்

நுகர்வு பற்றிய ஆய்வுகள், சமூகமும், தனியாட்களும் (தனி நபர்களும்) எவ்வாறு, ஏன் பண்டங்களையும், சேவைகளையும் நுகர்கிறார்கள் என்றும், எப்படி இது சமூக மற்றும் மனிதத் தொடர்புகளைப் பாதிக்கிறது என்பதையும் அறிய முயல்கின்றன. இன்றைய ஆய்வுகள், பொருள் விளக்கம், அடையாள உருவாக்கத்தில் நுகர்வின் பங்கு, நுகர்வோர் சமூகம் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்துகின்றன. முன்பு, உற்பத்தி, அதனைச் சூழவுள்ள அரசியல், பொருளாதார விடயங்களோடு ஒப்பிடுகையில், நுகர்வு என்பது முக்கியமற்ற ஒன்றாகவே நோக்கப்பட்டது. நுகர்வோர் சமூகத்தின் வளர்ச்சியும், சந்தையில் வளர்ந்துவரும் நுகர்வோர் சக்தியும், சந்தைப்படுத்தல், விளம்பரம் செய்தல், நெறிமுறைசார் நுகர்வின் (ethical consumption) வளர்ச்சி, போன்றவையும், நுகர்வை, நவீன வாழ்க்கை முறையின் முக்கிய விடயமாக ஏற்றுக்கொள்ள வைத்துள்ளன. நுகர்வு சார்ந்த சமூகவியல், வெப்லென் (Veblen) என்பாரின் கவனத்தை ஈர்க்கும் நுகர்வு பற்றிய ஆரம்பகால ஆக்கத்தைக் கடந்து வெகுதூரம் முன்னேறிவிட்டது. உற்பத்தியாளர்களாலும், சமூக நிலைமைகளாலும் பாதிக்கப்படுபவர்களாக நுகர்வோரை நோக்கும் அணுகுமுறை வளர்ந்து வருவதனால், இன்றைய கோட்பாடுகள், நுகர்வைக் கட்டுப்படுத்தும் பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளைப் பற்றி ஆராய்கின்றன

சிற்றினப்பொருளியல்

சிற்றினப்பொருளியல் (Microeconomics) ஒர் சமூகவிஞ்ஞானமாகும். பொருளாதார நடவடிக்கை பற்றியும் அதற்கான காரணங்களயும் இது ஆராய்கின்றது. அத்துடன் உற்பத்தி, வருமானம், விநியோகம் என்பனவும், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பொருளாதார நடத்தையும் இதன் ஆய்வுப் பரப்பினுள் அடங்கும்.
பொருளடக்கம்
1 சிற்றினப்பொருளியல் அடிப்படைக்கருத்துகள்
2 நுகர்வு கோட்பாடு
3 உற்பத்தி,விலை கோட்பாடு
4 Industrial organization

சிற்றினப்பொருளியல் அடிப்படைக்கருத்துகள்
நெகிழ்ச்சி,நுகர்வோன் மிகை,

நுகர்வு கோட்பாடு
இணைபயன் வளையீ, பயன்பாடு, எல்லைப்பயன்பாடு, வருமானம்

உற்பத்தி,விலை கோட்பாடு
Production theory basics,உற்பத்திக்காரணிகள், உற்பத்திசாத்திய வளையீ, உற்பத்திச் சார்புகள், விலை பேதப்படுத்தல்,

Industrial organization
நிறைவுப்போட்டி, தனியுரிமைப்போட்டி, தனியுரிமை, இருவருரிமை

சந்தை

சந்தை (Market) எனப்படுவது பொருளியலில் வாங்குபவர்களும் விற்பவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்கின்ற விரிந்த முழுமையான பரப்பைக் குறிக்கும். இது ஒர் இடத்தைக் (Place) குறிக்காமல் வாங்குபவர்கள் விற்பவர்கள் இருவரும் தொடர்பு கொள்ளும் பரப்பினைக் குறிக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வோர் விதமான சந்தை காணப்படும். அவ்விதமான சந்தைகள் அப் பெயர் கொண்டு அழைக்கப்படும். உதாரணமாக, பணச்சந்தை, பங்குச்சந்தை, தேயிலைக்கான சந்தை.

பொருளடக்கம்

1 சந்தைகளின் இயல்புகள்
2 சந்தையின் பரப்பு
3 சந்தைப்பகுப்புக்கள்
4 இவற்றையும் பார்க்க
சந்தைகளின் இயல்புகள்

வாங்கி விற்கின்ற பண்டம் ஒன்று காணப்படல்,
விற்பனை, கொள்வனவிற்கான இடம் காணப்படல்
வாங்குபவர்கள், விற்பவர்களிடே போட்டியொன்று காணப்படல் வேண்டும்.

சந்தையின் பரப்பு

தடையற்றவணிகம், விற்பனைத்திறன், விளம்பரம், போக்குவரத்துவசதிகள் போன்ற காரணிகள் சந்தையின் பரப்பினை(Extent of Market) விரிவடையச்செய்யும். தேவை அதிகமாக உள்ள பொருட்கள், நீண்டகால பாவனை பொருட்கள், மற்றும் நிரம்பல் அதிகமாக உள்ள பொருட்கள் என்பனவற்றிக்கு விரிவான சந்தை காணப்படும். அதே நேரம் குறுகியகால பாவனையுள்ள பொருட்கள், அழியக்கூடிய பொருட்களுக்கு ஒடுக்கமான சந்தையும் காணப்படும்

சந்தைப்பகுப்புக்கள்

பொருட்களின் இயல்பின் அடிப்படையில்
விளைபொருட் சந்தை
உற்பத்திச் சந்தை
Bullion Market
பங்குச்சந்தை
பரப்பின் அடிப்படையில்
உள்ளூர்ச்சந்தை (Local market)
தேசியச்சந்தை (National market)
உலகச்சந்தை/பன்னாட்டுச்சந்தை (International market)
போட்டியின் அடிப்படையில்
நிறைவுப்போட்டி (Perfect competition)
தனியுரிமை (Mopoly)
தனியுரிமை போட்டிச்சந்தை (Monopolistic competition)
இருவரிமைப்போட்டி (Duopoly)
சிலருரிமைப் போட்டி (Oligopoly)

இவற்றையும் பார்க்க
அரசதனியுரிமை
சிற்றினப்பொருளியல் தலைப்புக்கள்
கிடைப்பருமை - சந்தர்ப்பச்செலவு - இணைபயன் வளையீ கேள்வி-நிரம்பல் - நுகர்வோர்மிகை - சந்தைச் சமனிலை - சந்தை உற்பத்தி - செலவு

நிறைபோட்டி

எண்ணிறைந்த உற்பத்தியாளர்களும் எண்ணிறைந்த வாங்குபவர்களும் ஒரு பொருளை விற்கவும் வாங்கவும் போட்டி போடுகின்ற நிலமையே பொருளியலில் நிறைபோட்டி அல்லது நிறைவுப்போட்டி (Perfect competition) எனப்படும்.
இவ்வாறான நிலமை காணப்படும் சந்தை அமைப்பு ‘’’நிறைவுப்போட்டி சந்தை’’’ எனப்படும்.இச்சந்தை அமைப்பில் பண்டங்களுக்கான விலையானது சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் நிரம்பல் மாற்றங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கபடும்.உற்பத்தியாளனோ அல்லது நுகர்வோனோ பண்டங்களின் விலையில் ஆதிக்கம் செலுத்தமுடியாது.இச் சந்தை அமைப்பின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

தேவைகள்

சந்தை அமைப்பில் நிறைபோட்டி நிலவ சிலஅம்சங்கள் தேவையாக உள்ளது அவைகள்,
எண்ணிறைந்த உற்பத்தியாளர்களும் எண்ணிறைந்த வாங்குபவர்களும் காணப்படல்
விலை தொடர்பில் உற்பத்தியாளர்க வாங்குபவர்களின் ஆதிக்கம் இல்லாதொழிக்கப்படுகின்றது
ஒரினத்தன்மையான பண்டங்களை உற்பத்தி செய்தல்
பிரவேச சுதந்திரம் காணப்படல்
நிறுவனங்கள் உட்பிரவேசிக்கவும்,வெளியேறவும் சுதந்திரம் காணப்படுவதால் சந்தையை கட்டுபடுத்தும் ஆற்றல் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் குவிவது காணப்படாது. இதற்கு எதிரானது தனியுரிமை
உற்பத்தியாளரும் நுகர்வோனும் சந்தை பற்றிய பூரணஅறிவுள்ளவராகக்காணப்படல்
பொருள் பற்றி அனைவருக்கும் தெரியுமாதலால விளம்பரப்படுத்தல் காணப்படாது.
இவ்வாறான தேவைகளை பூர்த்தி செய்யுமிடத்தே அங்கு நிறைவுப்போட்டி தோன்றும், உலகநடைமுறையில் இச்சந்தை அமைப்பு காணப்படுவது அரிது

இவற்றையும் பார்க்க
சந்தை
Perfect competition

அரசதனியுரிமை

ஒரு குறிப்பிட்ட பண்டம் அல்லது சேவைகள் தொடர்பில் சந்தையானது போட்டி எதுவுமின்றி முழுவதுமாக அரச துறையால் கட்டுப்படுத்தப்படுமாயின்,அத்தகைய நிலமையினை பொருளியலில் அரசதனியுரிமை அல்லது அரசமுற்றுரிமை (government monopoly) எனப்படும்.இங்கு போட்டியானது சட்ட கட்டுப்பாடின் மூலம் நீக்கப்படும், இதன் காரணமாக சந்தையில் வேறு நிறுவனக்கள் காணப்படாது.இந் நிலையிலிருந்து government-granted monopoly வேறுபடும் இங்கும் பண்டம் அல்லது சேவைகள் தொடர்பில் தனியுரிமை காணப்படும் இத் தனியுரிமை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு சட்ட கட்டுப்பாடுகளுடன் அரசால் வழங்கப்படும்.(உ+ம்) இலங்கையில் சிகரட் உற்பத்திஅரச தனியுரிமையானது அரசாங்கத்தின் எந்த ஒரு மட்டத்தினாலும் (தேசிய,மாகாண,மாவட்ட ...)நடாத்தப்படலாம்,

பல நாடுகளில் காணப்படும் தபால் சேவைகள் சமூகநல சேவைகள்,ரயில் சேவைகள் போன்றவைகள் அரச தனியுரிமையின் உதாரணங்களாக்கும்,
இக் காலகட்டத்திலே சந்தையில் அரச தனியுரிமை இல்லாது அழிக்கப்படுவதும் தனியார்மயமாக்கல் துரிதப்படுத்தப்படும் போக்கும் காணப்படுகின்றது

தனியார்மயமாக்கல்

தனியார்மயமாக்கல் (Privatization) என்பது அரசதுறையின் கட்டுபாட்டிலுள்ள நிறுவனங்களின் உடைமைகள் அல்லது முகாமையினை தனியார்துறையிடம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மாற்றம் செய்யும் நடவடிக்கையினைக் குறிக்கும்.
தேசியமயமாக்கல் (nationalization), municipalization என்பன இதற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகும்.
1948 ம் ஆண்டு காலப்பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந் நடவடிக்கை 1980 இன் பின்னர் ஒரு சிறந்த பொருளாதார நடவடிக்கையாகப் பொருளியளாலர்கள், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய வைப்பகம் (சர்வதேச நாணய நிதியம்) என்பவற்றால் பரவலாக முன்நிறுத்தப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.
"

ஆடம் சிமித்




ஆடம் சிமித்
மேல்நாட்டுப்பொருளியலாளர
தொன்மைப்பொருளியல்
(தற்காலப் பொருளியல்)

முழுப் பெயர் ஆடம் சிமித்
பிறப்பு ஞானஸ்நானம்
(அகவை 67)
முக்கிய ஆர்வங்கள் அரசியல் மெய்யியல்,
நெறிமுறை, பொருளியல்

குறிப்பிடத்தக்கஎண்ணக்கருக்கள் மரபுப் பொருளியல்,தற்கால
கட்டற்ற சந்தை
ஆடம் சிமித் (Adam Smith - ஞானஸ்நானம் ஜூன் 16, 1723ஜூலை 17,1790 [பழைய முறை: ஜூன் 5, 1723 – 17 ஜூலை 1790]) ஓர் ஒழுக்கநெறி மெய்யியலாளரும் அரசியல் பொருளியலின் முன்னோடியும் ஆவார். ஸ்காட்டிய அறிவொளி இயக்கத்தின் முதன்மையானவர்களில் ஒருவரான சிமித், ஒழுக்க உணர்வுக் கோட்பாடு (The Theory of Moral Sentiments), நாடுகளின் செல்வத்தின் இயல்புகள், காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் இரண்டாவது நூல் அவருடைய மிகச் சிறந்த ஆக்கம் என்பதுடன், தற்காலப் பொருளியலின் முதலாவது நூல் என்றும் கருதப்படுகிறது.
சிமித், ஒழுக்க மெய்யியலை கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். பட்டம் பெற்றபின்னர், எடின்பரோவில் பல வெற்றிகரமான விரிவுரைகளை நிகழ்த்தினார். பின்னர் ஸ்காட்டிய அறிவொளிக் காலத்தில் அவர் டேவிட் ஹியூம் (David Hume) என்பவருடன் சேர்ந்து பணியாற்றினார். ஒழுக்க மெய்யியல் கற்பிப்பதற்காக சிமித்துக்கு கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி கிடைத்தது. இக்காலப்பகுதியில்தான் இவர்ஒழுக்க உணர்வுக் கோட்பாடு என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இவர் தனது வாழ்வின் பிற்காலங்களில் பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கொண்ட பல கற்பித்தல் வாய்ப்புக்களைப் பெற்றார். இவற்றின் மூலம் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த பல அறிவுத்துறை சார்ந்த தலைவர்களைச் சந்தித்தார். பின்னர் சொந்த நாடு திரும்பிய அவர் அடுத்த பத்து ஆண்டுகளையும் நாடுகளின் செல்வம் என்னும் நூலை எழுதுவதில் செலவிட்டார். இது 1776 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1790 ஆம் ஆண்டில் சிமித் காலமானார்.
"

Tuesday, October 21, 2008

விலைமதிப்பு தினைக்கழத்தின் செயற்பாட்டு விளக்கம்

விலைமதிப்பீட்டுப் பிரிவு

திணைக்களத்தின் பணி “பொதுவான விலைமதிப்பீடு” மற்றும் “வீதவரியிடல் விலைமதிப்பீடு” என நன்கு அடையாளங் காணப்படக்கூடியதாகவுள்ளவிடத்து, விலைமதிப்பீடு மற்றும் ஆதன நிருவாகம் என்னும் துறையில் அரசுக்கும் அதனோடு இணைந்த நிறுவகங்களுக்கும் திணைக்களம் சேவைகளை வழங்குகிறது.

அ) பொதுவான விலைமதிப்பீடு (விலைமதிப்பீடுகள் மற்றும் சேவைகள் தொடர்பிலான மூலதனப் பெறுமானமும் வாடகைப் பெறுமானமும்)-
  1. காணி கொள்ளல் சட்டத்தின் பிரிவு 38(அ) இன்கீழ் பகிரங்க நோக்கத்துக்காகக் கட்டாயமாகக் கொள்ளப்பட்ட தனிப்பட்ட காணிகள் தொடர்பில் நிபந்தனையான அறிக்கைகளைத் தயாரித்தலும், மற்றும் அதன்பின்னர் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் கொள்ளப்பட்ட அத்தகைய காணிகள் தொடர்பிலான இழப்பீட்டுக் கொடுப்பனவுக்காக விலைமதிப்பீடுகளைத் தயாரித்தலும்.
  2. காணி கொள்ளல் சட்டத்தின்கீழ் கொள்ளப்படவுள்ள காணிகள் தொடர்பில் நியதிகளைக் குறித்தொதுக்குவதற்காக மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
  3. தனிப்பட்ட உடன்படிக்கை கணக்கிடும் நோக்கங்களுக்காகவும் மற்றும் குத்தகை நோக்கங்களுக்காகவும் கொள்வனவுகள், கொடுத்துத்தீர்த்தல் என்பன உட்பட்ட வௌ;வேறு நோக்கங்களுக்காக அசைவற்ற மற்றும் அசைவுள்ள ஆதனங்களை விலைமதிப்பிடல்.
  4. மேலும் நியதிச்சட்ட ஏற்பாடுகளின்கீழ் அத்தகைய விலைமதிப்பீடுகளைச் செய்வதற்காக விலைமதிப்பீட்டாளர் தேவைப்படுத்தப்பட்டுள்ளவிடத்து அல்லது தத்துவமளிக்கப்பட்டுள்ளவிடத்து, விலைமதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. கீழே குறிப்பிடப்பட்ட ஏனைய பின்னைய நியதிச்சட்டங்கள், விசேட நோக்கங்களுக்காக ஆதனத்தின் கட்டாயக் கொள்வனவை வேண்டுவனவும், சந்தைப்பெறுமதியின் நியதிகளிலான இழப்பீட்டுடன் தலையீடு செய்துள்ளனவும் அத்துடன் ஆதனங்கள் அரசினால் கட்டாயமாகக் கொள்ளப்படுமிடத்து அல்லது சட்டத்தின் வலுவுடைமை காரணமாக அரசுக்குரித்தாக்கப்படுமிடத்து இழப்பீட்டுக் கொடுப்பனவின்மீது விலைமதிப்பீட்டை நிர்ணயிப்பதில் குறித்தசில மட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் சூழ்நிலைகளையும் சுமத்தியுள்ளதுமானவையுமே இவை
  • - 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம்
  • - 1979ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம்
  • - 1978ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க பாரிய கொழும்பு பொருளாதார (முதலீட்டுச் சபைச்) சட்டம்
  • - 1946ஆம் ஆண்டின் பட்டின மற்றும் நாடு திட்டமிடல் கட்டளைச்சட்டம்
  • - 1972ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க காணி சீர்திருத்தச் சட்டம்
  • - 1972ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க காணி சீர்திருத்த ஆணைக்குழுச் சட்டம்
  • - 1968ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க கொழும்பு மாவட்ட (தாழ் நிலை இடப்பரப்பு) மீட்பு மற்றும் அபிவிருத்தி சபைச் சட்டம்
  • - 1972ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க வாடகைச் சட்டமும் 1980ஆம் ஆண்டின் 55ஆம் இலக்க, மற்றும் 2002ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க அதன் திருத்தச் சட்டங்களும்- 1972ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம்
  • - 1973ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வீடமைப்பு ஆதனங்களின் உச்சவரம்புச் சட்டம்
  • - 1973ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க இருப்பிடக்கூறுகள் சொத்தாண்மைச் சட்டம்
  • - 1968ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க உல்லாசத்துறை அபிவிருத்திச் சட்டம்- கரையோரம் பேணல் சட்டம்
  • - 1979ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க கமத்தொழிற் சேவைகள் சட்டம்
  • - 1956ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க மற்றும் 1973ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க தெருக்களும் பொதுவழிப்பாதைகளும் சட்டம்
  • - 1979ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டம்
  • - 1958ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வளவ காணிகள் சட்டம்
  • பகிரங்க தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழுவின் வேண்டுகோளின்மீது, தனியார் மயமாக்கல் நோக்கங்களுக்காக, திணைக்களம், பகிரங்க தொழில் முயற்சிகளின் விலைமதிப்பீட்டையும் பொறுப்பேற்கிறது.
  • குத்தகைக்கு விடல் நோக்கங்களுக்கும் அடையாளங் காணப்பட்ட அவர்களது ஆதன உடைமை தொடர்பில் அல்லது அத்தகைய நிறுவகங்கள் தங்களது பயன்பாட்டுக்காகவும் இருப்பாட்சிக்காகவும் தனியார் ஆதனங்களைத் தேவைப்படுத்துவதும் தொடர்பில், வாடகை விலைமதிப்பீடுகள் அரசுக்கு அல்லது அரசுத் துறையினருக்கு கொடுத்துதவப்படுகின்றன.
  • இழப்பீட்டுப் பிணக்குகளை விசாரித்துத் தீர்மானிக்கும் சட்ட நீதிமன்றங்கள் மற்றும் பல்வேறுபட்ட ஏனைய நியாயமன்றுகள் என்பவற்றுக்கு, நிபுணத்துவ சான்றினை வழங்குவதில் உதவி செய்கிறது. இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாநகரசபைக்குள் உள்ள ஆதனங்களைத் தவிர்த்து, திணைக்களத்தின் அலுவலர்கள், வாடகைச் சபைகளில் பிரதான விலைமதிப்பீட்டாளரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

ஆ) வீத வரியிடல் விலைமதிப்பீடு

வீத வரிகளை (உள்ளுர் வரியிடல்) அறவிடுவதற்காக, கொழும்பு மாநகரசபை எல்லையினுள் அமைந்துள்ளவை தவிர்ந்த நாட்டிலுள்ள அநேகமான எல்லா உள்ளுரதிகார சபைகளதும் ஆதனங்களினதும் வரிமதிப்பீடுகளையும், மீள் வரிமதி;ப்பீடுகளையும் திணைக்களம் செய்து வருகிறது. அத்துடன் அத்தகைய வரிமதிப்பீடுகள் தொடர்பில் இன்னலுறுகின்ற வீதவரி செலுத்துநர்களால் செய்யப்பட்ட ஆட்சேபனைகளைத் தீர்மானிப்பதில் உதவியும் செய்கிறது. உள்ளுர் வரிக்கான அடிப்படையாக, பாரம்பரியமான ஆண்டுப்பெறுமானத்துக்காக ஒரு தொகையைப் பெறுதலே வீதவரியிடலுக்கான விலைமதிப்பீட்டின் நோக்கமாகும். சம்பந்தப்பட்ட சட்டவாக்கங்களில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டவாறாக, “ஆண்டுப் பெறுமானத்தை மதிப்பீடு செய்வதே இங்கு விலைமதிப்பீட்டாளரது கடமையாகும். இலங்கையில் “வீதவரிகள்” அல்லது “ஆதன வரி” யை அறவிடுவதை தத்துவமளிக்கும் சட்டவாக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1947ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்

– 230ஆம் பிரிவு

மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள ஒவ்வொரு விவரணத்திலுமான எல்லா வீடுகளும், கட்டிடங்களும் மற்றும் எல்லா காணிகளும் மற்றும் குடியிருப்புகளும், “உள்ளுர் வரி” க்குப் பொறுப்பாதல் வேண்டும்.

327ஆம் பிரிவு (“ஆண்டுப் பெறுமானத்தின்” வரைவிலக்கணம்)

“ஆண்டு வாடகை” என்பது வாடகையை கோரி நிற்கத்தக்க நிலையிலே காணப்படத்தக்க வீடு, கட்டிடம் காணி அல்லது குடியிருப்பு மனையைப் பேணுவதற்கு அவசியமான ஏதேனும் காப்புறுதி, திருத்தங்கள், பராமரிப்பு மற்றும் பேணுவதற்கான செலவுகள் இருப்பின் அவற்றை வீட்டுச் சொந்தக்காரரினால் செலுத்தப்படுவதாகவும் அத்துடன் எல்லா வீதவரிகள் மற்றும் வரிகளுக்கான வாடகைக் குடியிருப்பாளரினால் செலுத்தப்படுவதாகவும் இருப்பின் ஏதேனும் ஒரு வீடு, கட்டிடம், காணி அல்லது குடியிருப்பு மனைக்கு செலுத்துவதற்கான ஒரு வாடகை, குடியிருப்பாளரால் ஒவ்வொரு வருடமும் நியாயமாக எதிர்பார்க்கப்படும் வாடகையாகும்.

1939ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க நகரசபைக் கட்டளைச் சட்டம் (முன்னைய நகர மாவட்ட சபைகள்)

பிரிவு 160

பட்டினத்தினுள் அமைகின்ற ஏதேனும் அசைவற்ற ஆதனம் அல்லது அசைவற்ற ஆதனத்தின் ஏதேனுமொரு தொகுதியானது “உள்நாட்டு வரி” செலுத்தப்படுவதற்குப் பொறுப்பானதாதல் வேண்டும்.

பிரிவு 249(1)- (ஆண்டு பெறுமதிக்கான வரைவிலக்கணம்)

“ஆண்டு வாடகை” என்பது வாடகையை கோரி நிற்கத்தக்க நிலையிலே காணப்படத்தக்க வீடு, கட்டிடம் காணி அல்லது குடியிருப்பு மனையைப் பேணுவதற்கு அவசியமான ஏதேனும் காப்புறுதி, திருத்தங்கள், பராமரிப்பு மற்றும் பேணுவதற்கான செலவுகள் இருப்பின் அவற்றை வீட்டுச் சொந்தக்காரரினால் செலுத்தப்படுவதாகவும் அத்துடன் எல்லா வீதவரிகள் மற்றும் வரிகளுக்கான வாடகைக் குடியிருப்பாளரினால் செலுத்தப்படுவதாகவும் இருப்பின் ஏதேனும் ஒரு வீடு, கட்டிடம், காணி அல்லது குடியிருப்பு மனைக்கு செலுத்துவதற்கான ஒரு வாடகை, குடியிருப்பாளரால் ஒவ்வொரு வருடமும் நியாயமாக எதிர்பார்க்கப்படும் வாடகையாகும்.1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம் (முன்னைய பட்டின சபைகள் கட்டளைச்சட்டம் மற்றும் கிராம சபைக் கட்டளைச்சட்டம)பிரிவு 134உதவி ஆணையாளரின் அனுமதியுடன் உள்ளுர் அதிகாரசபையினால் கட்டப்படக்கூடிய இடங்களாக வெளிப்படுத்தப்பட்ட இடப்பிரதேசங்களில் அமைந்துள்ள ஏதேனும் அசைவுள்ள ஆதனம் அல்லது அசைவற்ற ஆதனத்தின் ஏதேனும் தொகுதியானது உள்ளுர் வரிக்குப் பொறுப்பிக்கப்படுதல் வேண்டும்.பிரிவு 226- (ஆண்டுப் பெறுமானத்துக்கான வரைவிலக்கணம்)“ஆண்டு வாடகை” என்பது வாடகையை கோரி நிற்கத்தக்க நிலையிலே காணப்படத்தக்க வீடு, கட்டிடம் காணி அல்லது குடியிருப்பு மனையைப் பேணுவதற்கு அவசியமான ஏதேனும் காப்புறுதி, திருத்தங்கள், பராமரிப்பு மற்றும் பேணுவதற்கான செலவுகள் இருப்பின் அவற்றை வீட்டுச் சொந்தக்காரரினால் செலுத்தப்படுவதாகவும் அத்துடன் எல்லா வீதவரிகள் மற்றும் வரிகளுக்கான வாடகைக் குடியிருப்பாளரினால் செலுத்தப்படுவதாகவும் இருப்பின் ஏதேனும் ஒரு வீடு, கட்டிடம், காணி அல்லது குடியிருப்பு மனைக்கு செலுத்துவதற்கான ஒரு வாடகை, குடியிருப்பாளரால் ஒவ்வொரு வருடமும் நியாயமாக எதிர்பார்க்கப்படும் வாடகையாகும்.ஆயின், ஆண்டுப் பெறுமானத்தைக் கணித்து மதிப்பீடு செய்வதில்-(அ) அத்தகைய காப்புறுதி, திருத்தம், பராமரிப்பு, மற்றும் பேணுவதற்கான சாத்தியப்படக்கூடிய சராசரி செலவு கழிக்கப்படல் வேண்டும்.(ஆ) குடியிராத ஏதேனும் காலத்திற்கான எந்தவொரு சலுகையோ அல்லது தள்ளுபடியோ செய்யப்படலாகாது.


திறன்கள் அபிவிருத்தி நிலையம்

  • மட்டுப்படுத்தப்பட்ட பௌதீக மற்றும் மனிதவளங்களின் சேர்க்கையின் உருவாக்கத்தில், அடிப்படைகள், நீண்ட வாழ்க்கை முறை கற்றல் மற்றும் செயல்நிறைவேற்ற தர மதிப்பீட்டினூடாக உழைப்பின் மதிப்பு, அர்ப்பணிப்பினூடாக திறன் மற்றும் திறன்களின் அபிவிருத்தியுடன் கூடிய செயல் தூண்டுதல் என்பன அடையாளங் காணப்பட்டு, 2006ஆம் ஆண்டிலே நிறுவப்பட்டதும், முன்னர் காணப்பட்ட திணைக்களத்தின் பயிற்சிப் பாடசாலையின் இடத்தை எடுத்துக்கொண்டதும், உதவி பிரதான விலைமதிப்பீட்டாளரின்கீழ் தொழிற்படுவதுமான திறன்கள் அபிவிருத்தி மையத்தின் கருப்பொருளாக இருப்பது “அறிவு, மனப்பான்மை மற்றும் திறன் என்பதாகும்.திறன்கள் அபிவிருத்தி நிலையத்தினால் வழங்கப்படும் வசதிகள் உள்ளக மற்றும் வெளியகமானவை என இரு பிரதான பிரிவுகளின்கீழ் பின்வரும் விரிவான பிரிவுகளுக்கு வழங்கப்படுகின்றன:
  • உள்ளக நிகழ்ச்சிகள் (உள்ளக உயர்தொழில்சார் மற்றும் முகாமைத்து ஊழியர் கோப்பு):(அ).தொழிற்பயிற்சி நிகழ்ச்சிகள் பற்றியது(ஆ).விடயங்களை மையமாகக் கொண்ட பயிற்சி நிகழ்;ச்சிகள் மற்றும் கள ஆய்வுகள்(இ).பரீட்சையினை மையமாகக் கொண்ட பயிற்சி நெறிகள்@ அத்துடன்(ஈ).அறிவினைப் பகிர்கின்ற நெறிகள் மற்றும் கள ஆய்வுகள
  • வெளிவாரி நிகழ்ச்சிகள்: (அ).கிராமசேவை அலுவலர்களுக்கான பயிற்சி நெறிகள்(ஆ).அரசிறை வரி அலுவலர்களுக்கான பயிற்சி நெறிகள் மற்றும் கள ஆய்வுகள்(இ).ஆதன முகாமைத்துவ பட்டமுன் பட்டதாரிகள் (டீளுஉ) விலை மற்றும் மதிப்பீட்டு பட்டமுன் பட்டதாரிகளுக்கான சேர்க்கப்பட்ட நிகழ்ச்சிகள்(ஈ).ஆதன முகாமைத்துவ பட்டமுன் பட்டதாரிகள் மற்றும் விலைமதிப்பீட்டு பட்டமுன் பட்டதாரிகளுக்கான தொழிலை மையமாகக் கொண்ட பயிற்சி நிகழ்ச்சிகள்@ மற்றும்(உ).கொள்ளல் அதிகாரிகளுக்கான கள ஆய்வுகள் மற்றும் பயிற்சி நெறிகள்.வங்கி, காப்புறுதி மற்றும் ஆதன முகாமைத்துவ பிரிவிலுள்ள ஏனைய திணைக்களங்களதும் நிறுவனங்களதும் தேவைப்பாடுகளை எதிர்கொள்வதற்கு சுங்கப்பகுதியினால் செய்யப்படும் கள ஆய்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் கவனத்தின்கீழ் உள்ளன.


ஒருங்கிணைப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு (ஊழுசுநு)

ஒருங்கிணைப்பு

  • உயர்தொழில் சார்ந்தவை பின்வருவன போன்ற பாரிய அளவிலான விலை மதிப்பீடுகளை ஒருங்கிணைத்தல்
  • நாடளாவிய ரீதியில் சிதறியுள்ள சொத்துக்களுடன் கூடிய பாரிய நிறுவனங்களின் ஆதனங்களின் விலைமதிப்பீடுகள்.
  • விரைவான திறன்மிக்க சேவைக்கான, தனியார் மயப்படுத்தல் நோக்கத்துக்காக, பகிரங்க தொழில் முயற்சிகளின் விலைமதிப்பீடு.


பொதுவானவை

  • திணைக்கள கட்டளைகள், திணைக்கள சுற்றறிக்கைகள், கையேடுகள், வழிகாட்டிகள் முதலியவற்றை வரைந்து வெளியிடுதல்.
  • தொழில் விவரணங்கள் மற்றும் நடத்தைக் கோவைகளைத் தயாரித்தல்
  • ஆண்டுச் சுற்றறிக்கைகள், கருத்திட்ட முன்மொழிவுகள் மற்றும் கருத்து ஆவணம் முதலியவற்றைத் தயாரித்தல்
  • மாதாந்த அறிக்கை மற்றும் விலைமதிப்பீட்டு சஞ்சிகையை ஒருங்கிணைத்தல்
  • செயல் நிறைவேற்ற சுட்டிக்காட்டிகள் மற்றும் செயல் நிறைவேற்ற தரமதிப்பீடு என்பவற்றைத் தயாரித்தல்
  • தலைவர்களின் மாதாந்தக் கூட்டங்கள், பிரிவுகளின் தலைவர்களின் கூட்டங்கள் முதலியவற்றை ஒருங்கிணைத்தல்
  • திணைக்கள பொது பதிவு அறையைப் பராமரித்தல்
  • செய்தித்தாள்கள் மற்றும் பருவ சஞ்சிகைகளை வழங்குதலும் அத்துடன் தொலைத்தொடர்பு வசதிகளை முகாமை செய்தலும்
  • திணைக்களத்திற்கான விஜயங்கள், கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல்
  • திணைக்கள திறன் எல்லைப் பரிசோதனைகள் மற்றும் சேவை பரிசோதனைகளை ஒழுங்குசெய்தலும் நடாத்துதலும்
  • கண்காட்சிகளுக்கு பிரதிநிதித்துவங்களை ஒழுங்கு செய்தல்
  • துண்டுப் பிரசுரங்கள், வெளியீடுகள் மற்றும் கையேடுகள் போன்றவற்றை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல், திணைக்களத்தின் தகவல்களைக் கொண்டு செல்லல் அத்துடன்
  • தகவல் தொழினுட்ப பிரிவுடன் இணைந்து திணைக்களத்தின் இணையத் தளத்தினைக் கொண்டிருத்தல்


ஆராய்ச்சி


தகவல் தொழில்நுட்பம் (ஐவு)

  • பிராந்திய விலைமதிப்பீட்டாளர் தலைமையிலும் பிரதான விலைமதிப்பீட்டாளரின் நேரடி மேற் பார்வையின்கீழும் தொழிற்படும் (திணைக்களத்தின் உயர்தொழில்சார் மற்றும் நிருவாக அம்சங்களை உள்ளடக்குகின்ற) ஒரு புஐளு சார்ந்த கணனி மயப்படுத்தப்பட்ட பாரிய விலைமதிப்பீட்டு முறைமை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக உத்தேச கணனிமயப்படுத்தப்பட்ட விலைமதிப்பீட்டு முறைமையை அமுல்படுத்தலுடன், ஒரு ஏயுமுறைமை (முழு அலுவலக வலையமைப்பினையும் தொடர்புபடுத்துகின்ற) விரிவுபடுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தலை நோக்காகக் கொண்டு ஒரு டுயுN முறைமைக்கான காகித (எழுத்து) வேலை ப+ர்த்தி செய்யப்பட்டுள்ளது. பின்வருவன தொடக்க மற்றும் படிப்படியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுள் சிலவாகும்.
  • திணைக்களத்தின் முன்னேற்றத்தின் தொடர்ச்சியான பகுப்பாய்வு மற்றும் மீளாய்வினைச் சாத்தியமாக்குகின்ற, தனிப்பட்ட அலுவலர்களுக்கும் மற்றும் முழு திணைக்களத்துக்குமான கணனிமயப்படுத்தப்பட்ட முன்னேற்ற கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் அமுல்படுத்தவும்பட்டுள்ளது. இது தனிப்பட்ட அலுவலர்களின் ஆற்றல்களை அதிகரிக்கச் செய்வதுடன், திணைக்களத்தினால் கையாளப்படுகின்ற உயர்தொழில்சார் சேவைகளின் தரம் மற்றும் அளவினை உச்ச மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உருமாதிரிகளில், நியமங்களில் பேணிக்காக்கின்றது.
  • திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் நிருவாக பிரிவுகளிற்கு துணைபுரியும் கட்டண கணிப்பான்கள் போன்ற கணனிமயப்படுத்தப்பட்ட கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அமுல்படுத்தவும்படவுள்ளன.
  • திணைக்களத்திற்காகப் பணிபுரியும் உயர் தொழிலர்களுக்கான விற்பனை மற்றும் வாடகை பகுப்பாய்வுடன்கூடிய அடிப்படை விலைமதிப்பீட்டு முறைமை, அளவுகளின் விலைப்பட்டியல்களைத் தயாரிப்பதற்கான கணனிமயப்படுத்தப்பட்ட இலகுவில் பயன்படுத்தத்தக்க அமைப்பு போன்ற கணினி மயப்படுத்தப்பட்ட உதவி கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனை மட்டத்தின் கீழும் உள்ளன.
  • சிறிய வீதவரியிடும் மற்றும் விலைமதிப்பீட்டு அலகொன்றின் கையாலைச் சாத்தியமாக்குகின்ற மைக்ரோசொப்ட் அக்சஸ் இனை அடிப்படையாகக் கொண்ட வீதவரியிடல் விலைமதிப்பீட்டு அமைப்பு ஒன்று ஒரு அலுவலரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் தகவல் தொழினுட்ப பிரிவின் மீளாய்விலும் உள்ளது.
  • வீதவரியிடல் அலகு கண்காணிப்பு முறைமை ஒன்றானது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதோடு, தக்க திருத்தங்களுடன் மீளாய்விலும் உள்ளது.
  • சகலவித விலைமதிப்பீட்டுடனும் தொடர்புபட்ட பன்மடங்காக்கிகளைச் சிறப்பாகக் கையாளத்தக்க புத்தகக் கருத்துக்களினது புறம்பே வைத்திருக்கும் கணனி மயப்படுத்தப்பட்ட கணிப்பான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பூர்த்தியாகும் கட்டத்திலும் உள்ளது. தகவல் தொழினுட்பப் பிரிவின் பொறுப்புக்களாவன:
  • கணனிமயப்படுத்தலுக்கான ஒரு சூழலை ஏற்படுத்தல்@
  • கணனி விழிப்புணர்வு நிகழ்ச்சி வசதிகளை அலுவலர்களுக்கு ஏற்பாடு செய்தல்@
  • கணனியறிவில் அலுவலர்களைப் பயிற்றுதல்@
  • கணனிமயப்படுத்தப்பட்ட பாரிய விலைமதிப்பீட்டு முறைமையில் வடிவமைப்பு மற்றும் அறிமுகப்படுத்தலில் துணைபுரிவதுடன், அதன் அமுல்படுத்தலிலும் பேணிவருதலும் துணைபுரிதலும்@
  • கணனி தேவைப்பாடுகளைப் புரிந்துகொள்வதுடன் அவற்றை வழங்குதலும் பேணிவருதலும்
  • திணைக்களத்தின் இணையத் தளத்தினை வைத்திருத்தலும் பேணிவருதலும்.


சட்டப் பிரிவு

இச்சட்டப்பிரிவானது சட்டத்தரணியாகத் தகுதியுடைய மூன்று சட்ட உதவியாளர்களின் உதவியினால் சட்ட அலுவலரின் தலைமையில் இயங்குகிறது. செயலாளருக்குரிய வேலையானது சபைக்கு நியமிக்கப்பட்ட ஒரு செயலாளரினால் கையாளப்படுகின்றது. கட்டாயக் கொள்ளலுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட இழப்பீடுகளுடன் அரசு சார்பாக திணைக்கள விலைமதிப்பீட்டாளர்களின் நிபுணத்துவ சாட்சிகள் வழங்கல் என்பன அரசாங்கத்தின் சார்பாக திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நம்பத்தக்க விலைமதிப்பீடுகள் திருப்திப்படாத திறத்தினர்களின் மேன்முறையீடுகளை விசாரிக்கும் நோக்கத்துக்காக, 1950ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க காணி கொள்ளல் ஏற்பாடுகள் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் நிறுவப்பட்ட காணி கொள்ளல் மீளாய்வு சபைக்கு உதவி செய்வதே திணைக்களத்தின் சட்டப்பிரிவின் பிரதானமான குறிக்கோளாகும். மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளல், மேன்முறையீட்டாளர்களுக்கு அறிவிப்புகளை வழங்குதல், வழக்குகளை விசாரிப்பதற்கான சபைகளை தீர்மானித்தல், அழைத்தல், மேன்முறையீட்டாளர்களுக்கு சபையின் தீர்மானங்களைத் தெரியப்படுத்துதல் மற்றும் காணி கொள்ளல் மீளாய்வு சபைக்கு எதிரான மேன்முறையீடுகளுக்கான ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளல் போன்ற மீளாய்வு சபைக்கு முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளுடன் தொடர்பான நிருவாகம் மற்றும் தாபன வேலை எனும் காணி கொள்ளல் மீளாய்வு சபையின் சகல தொழிற்பாடுகளும், சட்டப்பிரிவினால் மேற்கொள்ளப்படும் தொழிற்பாடுகளுள் அடங்கும்.காணி கொள்ளல் மீளாய்வு சபைக்கு உதவி புரிவதைத் தவிர பிரதான விலைமதிப்பீட்டாளரும் பிரதிவாதியாகக் காணப்படுகின்ற நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஏனைய வழக்குகளுக்கான ஆவணங்களைத் தயாரித்தல் போன்ற சட்டம் சார்ந்த விடயங்களில் பிரதான விலைமதிப்பீட்டாளருக்கு துணைபுரிவதும் சட்டப்பிரிவின் கடமை மற்றும் பொறுப்பாக அமைந்துள்ளது.மேன்முறையீட்டு நடைமுறையானது, 1950ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க காணி கொள்ளல் சட்டத்தின் 19 தொடக்கம் 29 வரையான பிரிவுகளிலே குறிப்பிடப்பட்டுள்ளது.கட்டாயக் கொள்ளலுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட இழப்பீடுகளில் திருப்தியடையாத திறத்தினர்களினால் செய்யப்பட்ட மேன்முறையீடுகளை விசாரிக்கும் நோக்கத்திற்காக, 1950ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க காணி கொள்ளல் சட்ட ஏற்பாடுகளின்கீழ் தாபிக்கப்பட்ட காணி கொள்ளல் மீளாய்வு சபை ஒன்று உள்ளது. எட்டு சட்டத்தரணி உறுப்பினர் மற்றும் எட்டு விலைமதிப்பீட்டாளர் உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினாறு உறுப்பினர்களைக் கொண்ட மூன்று வருட காலத்துக்கான ஒரு மீளாய்வு சபையினை ஜனாதிபதி நியமித்தல் வேண்டும். இதன் தலைவராக ஒரு சட்டத்தரணி உறுப்பினரும், உப தலைவராக இன்னொரு உறுப்பினரும் சனாதிபதியால் நியமிக்கப்படுதல் வேண்டும்.


நிருவாகக் கிளை

நிருவாக அலுவலர் ஒருவரின் தலைமையிலான நிருவாக சபையானது முழுத் திணைக்களத்தினதும் நிருவாக மற்றும் தாபன வேலைக்குப் பொறுப்பாக உள்ளது. தனிப்பட்ட பதிவுக்கோவைகளைப் பேணுதல், ஆட்களை வேலைக்கமர்த்தல், உறுதிப்படுத்தல், பதவியுயர்வு வழங்கல், இடமாற்றம் செய்தல், வருடாந்த சம்பள அதிகரிப்பு, ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் விடுமுறைகள் என்பன இப்பிரிவின் பிரதான தொழிற்பாடுகளுள் சிலவாகும்.


கணக்குக் கிளை

  • பிரதான விலைமதிப்பீட்டாளரே நிதிசார் ஒழுங்குவிதியின்கீழ் திணைக்களத்திற்கான கணக்கீட்டு அலுவலராவார். அத்துடன் பிரதான கணக்கீட்டு அலுவலருக்கு (உதாரணம்: நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கான அமைச்சுச் செயலாளருக்கு) பொறுப்பானவருமாதல் வேண்டும். (திணைக்களத்திற்கான கணக்கீட்டு அலுவலரான) பிரதான விலைமதிப்பீட்டாளரின் மேற்பார்வையின்கீழ் கணக்கீட்டு அலுவலரின் எல்லாப் பணிகளும் கணக்குக்கிளையினால் மேற்கொள்ளப்படும்.பின்வருவன பிரதான பணிகளாகும்:
  • வருடாந்த வரவுசெலவுத்திட்;டத்தைத் தயாரித்தல்
  • வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பில் பணக்கொடுப்பனவைத் தயாரித்தல்
  • எல்லா நிதி அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பித்தலும் அத்துடன் கணக்காய்வாரள் தலைமையதிபதியினதும் உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தல். அத்துடன் ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவுகளையும் முற்பணக் கொடுப்பனவுகளையும் கொடுத்தல் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் என்பவற்றை மீளளித்தல் போன்ற நிதியுடன் தொடர்புபட்ட ஏனைய கருமங்களுக்கும் பொறுப்பாக உள்ளது.


நலன்புரி மற்றும் வளவுகள

வளவு அலுவலர்களினால், ( கௌரவப் பதவி) தலைமைவகிக்கப்படுகின்றது. நலன்புரி மற்றும் வளவுப் பிரிவுகளின் பொறுப்புக்கள்:

நலன்புரி -

இத்திணைக்களத்தின் பணியாட்களின் நலனுடன் தொடர்புபட்ட எல்லா நடவடிக்கைகளைக் கவனித்தலும் ஒருங்கிணைத்தலும்வளவுகள் -
திணைக்களத்திற்குச் சொந்தமான அலுவலகக் கட்டிடத் தொகுதிகள் மற்றும் சுற்றுலா ஒற்றை மாடி வீடுகளைப் பேணுதல் மற்றும் பராமரித்தல்
திணைக்களத்திற்கு வாடகைக்குஃகுத்தகைக்கு விடப்பட்ட அலுவலகக் கட்டிடங்களைப் பேணுதல் மற்றும் பராமரித்தல்,
திணைக்களத்திற்கு வாடகைக்குஃகுத்தகைக்கு விடப்பட்ட அலுவலகக் கட்டிடங்களின் வாடகைஃகுத்தகை ஒப்பந்தங்களின் புதுப்பித்தல்