பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Tuesday, October 28, 2008

பண்டம்

நுகர்விற்கு உட்படுத்தப்படகூடியதும், நுகருவதால் பயன்பாட்டினை அதிகரிக்ககூடியதும் இவை காரணமாக சந்தையில் ஒரு குறிப்பிட்ட விலையில் விற்கப்படகூடியதாகவுள்ள பொருளோ (object) சேவையோ பொருளியலில் பண்டம் (Good) எனும் பொதுப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மதிப்பு உள்ள மகிழுணர்வு போன்ற துல்லியமாக அளவிடமிட முடியாதவற்றையும் கூட மெய்யியலில் பண்டமாகவே கருதுவர்.
கணக்கீடு மற்றும் பேரின பொருளியலில் பண்டங்கள் எனப்படுவது கொள்வனவு ஒன்றின்போது விற்பனையாளரிடமிருந்து வாடிக்கையாளருக்கு உரிமம் மாற்றலாகக் கூடிய தன்மையினைக் கொண்ட ஒர் பௌதீக உற்பத்தியை மட்டும் குறிக்கும் சேவைகள் உள்ளடக்கப்படாது.

பண்டங்களின் வகைகள்
பண்டங்களின் வகைகள்
கூட்டுரிமைப் பண்டம் (social good) - தனியார் உரிமப் பண்டம் - பொதுப் பண்டம் - common-pool resource - குழுவுரிமைப் பண்டம் - மக்களுரிமைப் பண்டம்
போட்டிப் பண்டம் மற்றும் விலக்கமுடியாப் பண்டம்
இணைப்புப் பண்டம் எதிர் பிரதியீட்டுப் பண்டம்
இலவசப் பண்டம் எதிர் அருமைப் பண்டம், positional good
durable good - non-durable good - இடைப் பண்டம் (producer good) - final good - நுகர்வுப் பண்டம் - மூலதனப் பண்டம்.இழிவுப் பண்டம் - இன்றியமையாப் பண்டம் - ஆடம்பரப் பண்டம் - வெப்லன் பண்டம் - கிப்பன் பண்டம் - superior goodதேடு பண்டம் - (post-)experience good - merit good - credence good - demerit good

இணைப்புப் பண்டம்

இணைப்புப்பண்டம் அல்லது நிரப்பிப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி தனித்தல்லாது இன்னொரு பண்டத்துடன் இணைத்து நுகரப்படும் பண்டமாகும்.
பண்டங்கள் அ, ஆ ஆனது இணைப்புப்பண்டங்களாயின், அ வினது நுகர்வு அதிகரிக்க பண்டம் ;;ஆ வின் நுகர்வும் இணைந்து அதிகரிக்கும்.
உ-ம்: கமரா - பிலிம்ரோல், துவக்கு - தோட்டா, கார்பயணம் - பெற்றொல்
வலக்கால் சப்பாத்து மற்றும் இடக்கால் சப்பாத்துக்கள் முழுமையான இணைப்புப்பண்டதிற்கு உதாரணமாகும். பிரதியீட்டுப்பண்டமானது இணைப்புப்பண்டதிற்கு எதிர்நடத்தையினைக் காண்பிக்கும்.

பிரதியீட்டுப் பண்டம்


பிரதியீட்டுப் பண்டம் எனப்படுவது பொருளியலின்படி ஒரு பண்டத்திற்குப் பதிலீடாக நுகரப்படக்கூடிய வேறொரு பண்டமாகும்.
இவ்விரு பண்டங்களும் ஒரேவகையான பயன்பாட்டினைக் கொண்டிருக்கும் அத்துடன் ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றினையே நுகரவேண்டியிருக்கும். இவ்வகையான பண்டத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு வெண்ணெயும், வெண்ணெய் போன்ற மார்ஜரிக் காடி (புளிமம்) கொண்ட மார்ஜரினும் ஆகும்.
இவ்விரு பண்டங்களுக்கான கேள்விகள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது இங்கு ஒரு பொருளின் விலை அதிகரிக்குமாயின் அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி அதிகரிக்கும் மறுபக்கத்தே பொருளின் விலை குறையும்போது அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி குறையும் நடத்தையைக் காண்பிக்கும்.
எ.கா: சீனி, சர்க்கரை மற்றும் சீடி, கசட்
இணைப்புப் பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையைக் காண்பிக்கும்

இலவசப் பண்டம்

இலவசப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி கிடப்பருமையற்ற பண்டம் ஆகும். இலவசப் பண்டங்கள் உற்பத்தி செலவற்றவை, விலை பெறாது, பரந்தளவு காணப்படும், நேரடியாக நுகர்விற்கு உட்படுத்தப்படும், நுகர்வில் போட்டி காணப்படாது. இப் பண்டங்களுக்கானசந்தர்ப்பச்செலவு பூச்சியமாகும்.
உ-ம்: மழைநீர், காற்று, சூரியஓளி, சட்டக் கட்டுபாடற்ற அறிவுசார் பொருட்கள், சிந்தனைகள்
கொளவனவின்போது இலவசமாகக் கிடைக்கும் பண்டங்கள் அதாவது பூச்சிய விலைக்குக் கிடைக்கும் பண்டங்கள் எல்லாம் பொருளியலில் இலவசப்பண்டமாகாது. காரணம் இவற்றின் உற்பத்திக்கு கிடைப்பருமையான வளங்கள் உபயோகப்பட்டிருக்கும்.
இலவசப்பண்டமாக இருப்பவை கிடப்பருமை காரணமாக பொருளாதார பண்டமாக மாறும் சாத்தியமுள்ளது.

மூலதனப் பண்டம்

பொருளியலில் மூலதனத்தை பெருக்குவதில் அல்லது உற்பத்தி செய்வதில் ஈடுபடுத்தப்படும் பண்டங்கள் மூலதனப்பண்டங்கள்(Capital good) எனப்படும்.

இழிவுப் பண்டம்


பௌதீக வாழ்க்கை தரத்தை பேணுவதற்காக குறைந்த வருமானம் பெறுபவர்களால் விருப்பமின்றி நுகர்கின்ற தரக்குறைவான பண்டங்கள் பொருளியலில் இழிவுப்பண்டம் எனப்படும்.
உ+ம்: பீடி,போலிநகை
தனிநபர் வருமான அதிகரிப்புடன் இழிவுப்பண்டத்திற்கான கேள்வியும் அதிகரிக்கும் எனினும்,மேன்மேலும் அதிகரித்தால் இவற்றுக்கான கேள்வி குறைந்து செல்வதுடன் பூச்சிய நிலையையும் அடையும்.
ஆடம்பரப்பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையினைக் காண்பிக்கும்.


ஆடம்பரப் பண்டம்

ஆடம்பரப்பண்டங்கள் எனப்படுபவை பொருளியலின்படி மக்களின் வருமான அதிகரிப்புடன் கேள்வி அதிகரிப்பு ஏற்படுகின்ற வகையைச் சார்ந்த பண்டங்கள் ஆகும். இவை அவசியமான பண்டம், இழிவுப்பண்டம் ஆகியற்றிலிருந்து மாறான நடத்தையைக் காண்பிக்கும். ஆடம்பரப் பண்டமானது உயர் வருமானக்கேள்வி நெகிழ்ச்சியினைக் காண்பிக்கும். இவ் வகையான பண்டங்கள் மக்களின் அந்தஸ்து, கௌரவம், உயர் வருமானம் ஆகியவற்றை விளம்புகின்ற சின்னமாகக் கருதப்படும். மக்களின் வருமான மட்டம் அதிகரிக்கும்போது ஆடம்பரப்பண்டங்களுக்கான் கேள்வியும் அதிகரிக்கும். எனினும் வேறுபட்ட வருமான மட்டங்களில் இவை அவசியப்பண்டமாகவோ அல்லது இழிவுப்பண்டமாகவோ மாற்றமடையலாம். அதாவது மேலைத்தேசங்களில் தொலைக்காட்சியானது அவசியப்பண்டமாகக் காணப்படும் அதே சமயத்தில் கீழைத்தேசத்தில் அவை ஆடம்பரப்பண்டமாகக் கருதப்படும்.
உ-ம் :தங்கநகைகள், சொகுசுவாகனங்கள்


கிப்பன் பண்டம்

கிப்பன் பண்டம் (Giffen good) என்பது விற்பனை விலை ஏறும்போது நுகரப்படும் அளவு மிகுதியாகும் தன்மையுடைய இழிவுப்பண்டத்தைக் குறிக்கும். கிப்பன் பண்டங்கள் அனைத்து சூழல்களிலும் இத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. இவை உலகில் இருக்க வேண்டுமென்பதுகூட இல்லை. குறிப்பிட்ட மெய்யுலகு அல்லது கருத்தளவு சூழல்களில் மட்டும் இவை இத்தன்மையைக் கொண்டிருக்கலாம்.

No comments: