K.S.அனோஜி
நாட்டின் பணவீக்கம் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் 5 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஓகஸ்ட் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருட காலத்திற்கும் மேலாக உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ள மத்திய வங்கி, உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக, 2008 ஜூலை முதல் இலங்கையில் பணவீக்கம் குறைவடையத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 28.2 வீதமாகக் காணப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண், ஜூலை மாதத்தில் 26.2 வீதமாகக் குறைவடைந்திருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
"சர்வதேச சந்தையில், உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அழுத்தங்கள் குறைவடைந்தமையின் காரணமாகவே, இலங்கையிலும் பணவீக்கம் குறைவடைந்திருக்கிறது" என்றும் மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment