பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Thursday, October 30, 2008

இலங்கையின் மிகமோசமான பணவீக்கத்துக்கு

இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு இலங்கை அரசு தெரிவிப்பதுபோல எண்ணெய் இறக்குமதிக்கு அதிக நிதி பயன்படுத்துவது காரணமல்ல எனத் தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் சிறந்த பொருளாதாரக் கொள்கைகள் மூலம் உள்ளூர் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையில் 2006 முதல் 2007 வரையான காலப்பகுதிக்குரிய பணவீக்க நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் செல்வாக்கிற்கு உட்படாத வெளிக்காரணிகளான எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவையே பணவீக்கத்திற்கு காரணம் என அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றபோதிலும் இவ்விவகாரத்துக்கு இந்த விளக்கம் போதுமானதல்ல என அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.எண்ணெய் விலைஅதிகரிப்பு இந்தப் பிராந்தியத்தின் சகல நாடுகளுக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ள போதிலும், ஏனைய நாடுகளை விட இலங்கையில் பணவீக்கம் அதிகமாகவுள்ளமை, இதற்கு எண்ணெய்விலை காரணமன்று என்பதைப் புலப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பிட்ட ஆய்வின் முடிவில் இலங்கையின் பணவீக்க அதிகரிப்பிற்கு உள்நாட்டுக் காரணிகளே அடிப்படை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் உள்ளூர் பணவீக்கத்தைத் தீர்மானிப்பதில் எண்ணெய் விலை போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றாததால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் கொள்கைகள் மிக முக்கியமானவையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் நுகர்வோர் விலையில் 29 வீதமாகவும் பணவீக்கத்தில் 32 வீதமாகவும், மாத்திரமே எண்ணெய் விலையின் தாக்கம் காணப்படுகின்றது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக உள்ளூர் காரணிகளே இலங்கையில் பணவீக்க அதிகரிப்பிற்கு காரணம் என்பது உறுதியாவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: