பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, October 24, 2008

திறைசேரியில் வெளிநாட்டவர்களும் முதலிடலாம்: மத்திய வங்கி

மொத்த திறைசேரி உண்டியலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 10 வீதம் வரையான முதலீட்டினை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திறைசேரி உண்டியல் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

திறைசேரி சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நுழையும்பட்சத்தில், மூன்று மாத காலப்பகுதியில் இச் திறைசேரி உண்டியலின் விளைதிறன் 18.51 வீதமாகவும், ஆறு மாத காலப்பகுதியில் 18.96 வீதமாகவும், ஒரு வருடத்தில் 19 வீதமாகவும் குறைவடையும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக சந்தையில், தற்போது சில வர்த்தகர்கள் அதிகமான உண்டியல்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருபபினும், இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் அவதானங்களின் அடிப்படையிலேயே இந்த முயற்சியின் வெற்றி தங்கியிருக்கும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments: