பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Wednesday, October 15, 2008

317.2 மில்லியன் டொலராக வர்த்தக நிலுவை அதிகரிப்பு

இலங்கையின் வர்த்தக நிலுவை 317.2 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
கடந்த வருட பெப்ரவரியில் 147 மில்லியன் டொலராக இருந்த வர்த்தக நிலுவை இந்த வருட பெப்ரவரியில் 317.2 மில்லியன் டொலராக கூடியுள்ளது.
ஏற்றுமதி 9.7 சதவீதத்தால் 642.6 மில்லியன் டொலர்களாக கடந்த பெப்ரவரியில் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்தது. கடந்த வருடம் இதே காலப் பகுதியில் 585.8 மில்லியன் டொலராக ஏற்றுமதி காணப்பட்டது.
அதேசமயம், இறக்குமதி 31 சதவீதத்தால் (இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில்) உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இறக்குமதி 732.8 மில்லியன் டொலராக இருந்தது. 2008 இன் முதல் இரு மாதங்களிலும் வர்த்தக நிலுவை 937 மில்லியன் டொலராக அதிகரித்திருக்கிறது.

No comments: