
சீபா உடன்படிக்கை மூலம் பரந்தளவிலான பொருளாதார நன்மைகளை அடைந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய வர்த்தக மற்றும் பொருளாதார ஆலோசகர் சந்தோஷ் ஜா, இலங்கை முதலீட்டாளர்களுக்கு இந்தியா வரையறைகள் எதுவுமின்றி வீசாக்களை வழங்கத்தயாராகவிருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார்.
சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமானால், இருநாடுகளும் சமனான நன்மைகளை அடைந்துகொள்ள முடியும் எனக்குறிப்பிட்ட அவர், உடன்படிக்கை தொடர்பான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்;ளார்.
"இந்தியா இலங்கையுடன் வர்த்தக உறவினைக் கொண்டுள்ள பெரிய நாடு மட்டுமல்ல, இலங்கையுடன் சமனான வர்த்தக உறவினைப் பேணும் நாடும் கூட. அமெரிக்கா, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையுடன் சமத்துவமான உறவையே இந்தியா பேணி வருகிறது" என்றும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment