பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Friday, September 19, 2008

உலகமயமாதல்

உலகமயமாதல்


தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும் உலகமயமாதல் எனலாம். உலகமய சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான், ஆனால் இன்றைய சூழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது.


உலகமயமாதல் ஆங்கிலத்தில் பரவிய "globalization" என்ற கருத்துருவாக்கத்தின் தமிழ்ப்பதம் ஆகும். தமிழில் உலகமயமாக்கம் என்ற சொல்லும் சில வேளைகளில் "globalization" க்கு ஈடாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் அச்சொற்களின் பொருள் வேறுபாடு கவனிக்கத்தக்கது. உலகமயமாதல் தனாக விரியும் ஒரு செயல்பாடு, அல்லது அதை நோக்கிய ஒரு கருத்துப்பாடு. உலகமயமாக்கம் என்பது யாரோ அதன் பின்னால் இருந்து ஆக்குவதா பொருள் தொனிக்கின்றது.


உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தத் தொடங்கியது 1981 ஆம் ஆண்டிலேயேயாகும். தியோடோர் லெவிட் (Theodore Levitt) என்பவர் எழுதிய சந்தைகளின் உலகமயமாதல் (Globalization of Markets) என்னும் நூலில் உலகமயமாதல் என்பது பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது. உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வுகளிலும், இது ஒரு பரந்த, அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக (phenomenon) உணரப்பட்டது.

உலகமயமாதல் என்பது பல கோணங்களில் இருந்து நோக்கப்படுகின்றது:

வளர்ந்து வரும் நாடுகளுக்கு, அதிகரித்த வாழ்க்கைத் தரத்தையும், வளத்தையும் கொண்டுவருகின்றது என்பதும், முதலாம் உலக நாடுகளினதும், மூன்றாம் உலக நாடுகளினதும் நிதி வளத்தைப் பெருக்க உதவுகிறது என்பதும் ஒரு வகையான நோக்கு. இது உலகமயமாதலைப் பொருளியல் மற்றும் சமூக அடிப்படையில் ஒரு விரும்பத்தக்க விடயமாகக் கருதுகின்றது.
இன்னொரு நோக்கு, பொருளியல், சமூக மற்றும் சூழலியல் அடிப்படையில் உலகமயமாதலை எதிர்மறையான, விரும்பத்தகாத ஒரு விடயமாகக் கருதுகின்றது. இதன்படி, உலகமயமாதல், வளர்ந்து வருகின்ற சமுதாயங்களின் மனித உரிமைகளை நசுக்குகிறது என்றும், வளத்தைக் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு கொள்ளை இலாபமீட்டுவதை அனுமதிக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இவை தவிரப் பண்பாட்டுப் பேரரசுவாத (cultural imperialism) நடவடிக்கைகளினூடாகப் பண்பாட்டுக் கலப்புக்கு வழி வகுப்பதும், செயற்கைத் தேவைகளை ஏற்றுமது செய்வதும், பல சிறிய சமுதாயங்கள், சூழல்கள் மற்றும் பண்பாடுகளைச் சிதைத்து விடுவதும் இதன் எதிர்மறை விளைவுகளாக எடுத்துக் காட்டப்படுகின்றன.
பொருளடக்கம் [மறை]
1 உலகமயமாதலும் பண்பாடும்
2 உலகமயமாதலும் சாதியக் கட்டமைப்பும்
3 மேற்கோள்கள்
4 வெளி இணைப்புகள்

உலகமயமாதலும் பண்பாடும்

உலகமயமாதல் பலமான மொழி, பண்பாட்டு, அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இன - மொழி - பண்பாட்டு அழிவுக்கு அல்லது சிதைவுக்கு இட்டு செல்வதாக சிலர் வாதிக்கின்றனர். இக்கூற்றில் உண்மையுண்டு, எனினும் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது உலகமயமாதல் இருக்கும் ஒன்றின் அழிவில் ஏற்படமால், இருக்கும் ஒன்றோடு அல்லது மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்தலாகவும் பார்க்கலாம்.


உலகமயமாதலும் சாதியக் கட்டமைப்பும்

உலகமயமாதல் பல முரண்பாடான விளைவுகளை உந்தக்கூடியது. ஒரு புறத்தில் மரபுவழி சாதிய-சமூக கட்டமைப்புக்களால் பிணைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட சமூகங்களை, குடுமங்களை, தனிமனிதர்களை விடுவிக்ககூடிய தொழில், தொடர்பு, போக்குவரத்து, கல்வி வாய்ப்புக்களை உலமயமாதல் முன்வைக்கின்றது. அதேவேளை பொருள் முதலாளித்துவ சுரண்டலுக்கும், அடிமைத்தனத்துக்கும், சமூக-குடும்ப சிதைவுக்குமான காரணிகளையும் உலகமயமாதல் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் தாமஸ் ப்ரீட்மன் உலகமயமாதல் பற்றி The World is Flat என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்.

No comments: