பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Monday, September 8, 2008

உலக உணவு நெருக்கடி தெடர்பாக ஜனாதிபதியின் கருத்து

உணவு நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில் உலக உணவு நெருக்கடி நிதியமொன்றை உருவாக்குவது அவசியமாகும் -ஜனாதிபதி

உணவு நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில் உலக உணவு நெருக்கடி நிதியமொன்றை உருவாக்குவது அவசியமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, உலக உணவு விவசாய உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் 40ற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இம்மாநாட்டில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது, அனைத்து நாடுகளில் இருந்தும், பாரிய வியாபார அமைப்புக்களில் இருந்தும், உலகின் எல்லை கடந்த நிதி நிறுவனங்கள், ஆயுத உற்பத்தியாளர்கள், தனிப்பட்ட கொடையாளர்களிடமிருந்து பங்களிப்பு செய்யப்படக் கூடிய உலக உணவு நெருக்கடி நிதியமொன்றினை ஸ்தாபிப்பது குறித்து இங்கு குழுமியுள்ள உலகத் தலைவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டுமென நான் ஆலோசனை கூற விரும்புகிறேன். அத்தகைய நிதியமொன்றினை பொறிமுறைகள் பாரதூரமான உணவு பாதுகாப்பு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கு உதவும் நோக்குடன் செயற்படுத்தப்பட முடியும். என்பதோடு பாரிய உணவு உற்பத்திக்கான முன்னெடுப்புக்களுக்கு நிதியளிப்பதற்குமாக பயன்படுத்தப்பட முடியும். அத்தகைய உலக உணவு நெருக்கடி நிதியத்திற்கு மேலதிகமாக அதனோடு இணைந்து செயற்படுவதற்கும் உணவு உற்பத்தியை விரிவுபடுத்தல், களஞ்சியத்தையும் விநியோகத்ததையும் மேம்படுத்தல் பேனர்றவற்றுக்காகவும் பிராந்தியத்தினுள் நிதிசார் மற்றும் தொழில்நுட்ப வளமூலங்களை ஒன்றிணைத்து பிராந்திய உணவு பாதுகாப்பு நிதியங்களும் இருத்தல் வேண்டும் என்பது எமது கருத்தாகும். என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments: