பொருளியல் தொடர்பான உடனடியான குறிப்புக்களையும் நிலவரங்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பதிவுடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்...

Monday, September 8, 2008

உலக உணவு உற்பத்திக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் தேவை ஐ.நா மன்றம் தெரிவிப்பு

உலக அளவில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் வழமைக்கு மாறாக அதிகரித்து கொண்டே போகிறது. இதற்க்கான அடிப்படை காரணங்களாக அந்த நாடுகளில் உணவுப் பண்ட உற்பத்திகளில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை குறிப்பிடலாம் எனவே இந்தக் குறைபாடுகளை களையும் வகையில் உலக அளவில் உற்பத்தி துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவேண்டும் இயற்கை வளங்களை பாதுகாப்பது உள்ளூரில் உணவு உற்பத்தியை ஊக்குவிப்பது உள்ளிட்ட நீடிக்கதக்க விவசாய நடைமுறைகளை கடைப்படிப்பது இவற்றில் முக்கியமானதாகும்.

அடிப்படை உணவு பண்டங்களான அரிசி,சோளம் போன்றவற்றின் விலைகள் சமீப காலமாக தொடர்ந்து பல மடங்கு அதிகரிப்பதன் காரணமாக உலக அளவில் பல வளர்முக நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன.இவற்றை பாடமாக கொண்டு உலக அளவிலான உற்பத்திக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா மன்றம் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments: